Skip to main content

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்பு

   ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்திக் கூறினார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ, வேரகலவில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தௌிவாவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதுடன், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவுவதாகவும் முற்போக்காக இருப்பதை விட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார். எனினும், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் விக்ரமசிங்க உள்ள

முஸ்லிம் ஊடகவியலாளர்கள் சமயத்தால் தடைசெய்யப்பட்ட ஒன்றுக்குள் இழுத்து விடப்பட்டுள்ளார்கள்.

தீர்வையற்ற மோட்டார் சைக்கிள் வழங்கப்படும் என கூறப்பட்டு ஊடகவியலாளர்கள் மிக மோசமாக ஏமாற்றப்பட்டுள்ளதுடன் ஹராமான வட்டி செலுத்துவதனூடாக அதனை பெறலாம் என அரசாங்கம் சொல்லியுள்ளமை முஸ்லிம் ஊடகவியலாளர்களை அவமானப்படுத்துவதாகும் என உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஊடகவியலாளர்களுக்கு தீர்வையற்ற மோhட்டார் சைக்கிள்  வழங்கப்படவுள்ளதாக கடந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்தார். பல அரச உத்தியோகஸ்தர்களுக்கு இவ்வாறான மோட்டார் கைச்கிள்களை வழங்கி வைத்த மஹிந்த ராஜபக்ஸ ஊடகவியலாளர்களுக்கும் வழங்கவிருந்த நிலையில் தோல்வியுற்றார். அவரது தோல்விக்கு முஸ்லிம் ஊடகவியலாளர்களில் பலர் நல்லாட்சிக்கு ஆதரவளித்ததும் பிரதான காரணமாகும்.
பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் மஹிந்த செய்தது போல் தாமும் செய்வோம் என்பது போல் தீர்வையற்ற மோட்ட சைக்கிள் வழங்கப்படும் என கூறியே ஊடகவியலாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரியது. அதற்கான நேர்முக பரீட்சையில் யாழ்ப்பாணம் முதல் கல்முனை மாவட்டம் வரையிலான ஊடகவியலாளர்கள் தமது சொந்த பணத்தை செலவு செய்து மூன்று நாட்கள் கொழும்புக்கு அலைந்து கலந்து கொண்டனர்.
தற்போது தீர்வையற்ற மோட்ட சைக்கிள் என்றில்லாமல் வட்டியுடனான கடனுக்கு மோட்ட சைக்கிள்களே வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளமை மூலம் ஊடகவியலாளர்கள் மோசமாக ஏமாற்றப்பட்டுள்ளதையும் என்ன இருந்தாலும் மஹிந்த வந்திருந்தால் இதனை கட்டாயம் வழங்கியிருப்பார் என்ற கருததாடல்களையும் ஏற்படுத்தியுள்ளது. சொன்னதை செய்பவராக மஹிந்த ராஜபக்ஷ இருந்துள்ளார் என்பதை நடுநிலை ஊடகவியலாளர்கள் அறிந்து வைத்துள்ளனர்.
அத்துடன் இவ்வாறு வட்டிக்கு கடனாக மோட்ட சைக்கிள் பெறுவதன் மூலம் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் சமயத்தால் தடைசெய்யப்பட்ட ஒன்றுக்குள் இழுத்து விடப்பட்டுள்ளார்கள். கடந்த மஹிந்த அரசில் ஹலால் நீக்கப்பட்டது போல் இந்த அரசு ஹராத்தில் முஸ்லிம் ஊடகவியலாளர்களை தள்ளிவிட முயற்சிப்பது கண்டிக்கத்தக்க செயலாகும்.
ஆகவே அரசால் வாக்களிக்கப்பட்டது போல் தீர்வையற்ற மோட்ட சைக்கிளை ஊடகவியலாளர்களுக்கு வழங்க வேண்டும் என உலமா கட்சி கோரிக்கை விடுப்பதுடன் இது சம்பந்தமாக ஊடக அமைப்புக்கள் வாய் திறக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறது.

Comments

Popular posts from this blog

*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்

*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்* *(தொடரும்)* 146.23.11.2017அரசாங்க  தேசிய பாடசாலையான கண்டி மகளிர் உயர் பாடசாலைக்குநியமனம் பெற்று சென்ற  முஸ்லிம் ஆசிரியைக்கு பாடம் நடத்தஅதிபர் மறுப்பு வெளியிடப்பட்டது. http://www.madawalanews.com/2017/11/blog-post_373.html 145. காலி – தூவ பிரதேசத்தில் அமைந்துள்ள சமகிவத்தை குடியிடுப்பு பகுதியிலுள்ள முஸ்லிம் நபரொருவரின் வீடொன்றின்  மீது அதிகாலை வேளையில், பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.  http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_912.html 144. 20.11.2017 வவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் அதிகாலை 1.20 மணியளவில் எற்பட்ட தீ விபத்தில் இரு கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதியளவில் எரிந்து சேதமாகியது. http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_180.html 143. 17.11.2017    300க்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் பல குழுக்களாகப் பிரிந்து கிந்தோட்டைக்குப் பிரவேசிக்கும் பாதைகளை எல்லாம் இடைமறித்த வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்குள் பிரவேசித்து இரவு 9.30 மணியளவில் தம

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம் ...................................................................... ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன? அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது? எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது? அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா? சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது? ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட  விளையாட்டு மைதானம்  மதவாக்குள பிரதேசத்திற்கு  அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள்  காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை  ஊருக்கு  அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு  தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313