அரச நியமனங்களில், முஸ்லிம்களுக்கு அநீதி ந‌ல்லாட்சிக்கு வாக்க‌ளித்து ஏமாந்த‌ முஸ்லிம்க‌ள்.-காமில்-

கிழக்கு மாகாண  நன்னடத்தை உத்தியோகத்தர் நியமனத்திற்காக மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் கடந்த 2015.09.26 ஆம் திகதி நடாத்தப்பட்ட பரீட்சையில்  முஸ்லீம் பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டு எதிர்வரும் 2016.03.10ஆம் திகதி மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் நேர்முகப்பரீட்சை நடாத்;தப்படவிருக்கிறன்மையால் முஸ்லிம் விண்ணப்பதாரிகளுக்கு கிழக்கு மாகாண சபையானது பாரபட்சமாக நடந்து கொள்கின்றது என கிழக்கு மாகாண ஐக்கிய பட்டதாரிகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் நடைபெற்ற நியமனங்களில் கிழக்கு மாகாண மக்களின்; இன விகிதாசாரம் பேணப்பட்டது. குறிப்பாக 10 பேருக்கு நியமனம் வழங்கப்பட்ட போது 04 முஸ்லிம்கள், 04 தமிழர்கள், 02 சிங்களவர்கள் என நியமனம் வழங்கப்பட்டது. இது ஏற்றுக்கொள்ளக் கூடிய விதத்திலேயே இந்நியமனம் நடைபெற்றது.

ஆனால் இதற்கு மாற்றமான முறையில் இந்த முறை கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் பிரதேச செயலக ரீதியில் விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. அதாவது குறிப்பிட்ட பிரதேச செயலக ரீதியான பெரும்பான்மை மக்களின் இனத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர் நியமிக்கப்படவேண்டும்.

கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் விண்ணப்பம் கோரப்பட்ட பிரதேச செயலகங்கள்
தமிழர்கள்   - குச்சவெளி, வெல்லாவெளி, வாழைச்சேனை, வாகரை
சிங்களவர்கள் - லகுகல, கோமரங்கடவெல, பதவிசிரிபுர
முஸ்லிம்கள்  - இறக்காமம்

இந்த வகையில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட குச்சவெளிக்கு தமிழ் உத்தியோகத்தருக்கு விண்ணப்பம் கோரியமை பாரிய அநீதியாகும். அத்தோடு வெற்றிடம் காணப்படும் பிரதேச செயலகங்களான பொத்துவில், சாய்ந்தமருது, கல்முனை முஸ்லிம் பிரிவு, காத்தான்குடி,  முதலான பிரதேச செயலகங்களில் விண்ணப்பம் கோரப்படவில்லை என்பது எமக்கு நடந்த அநீதியாகும்.

மேலும் தற்போது இருக்கின் பிரதேச செயலகங்களைப் பார்கின்ற போது,
முஸ்லிம் பிரதேச செயலகம்   - 16
தமிழ் பிரதேச செயலகம்   - 18
சிங்களப் பிரதேச செயலகம்  - 12
மொத்தப் பிரதேச செயலகம்  - 46
(தகவல் இணைக்கப்பட்டுள்ளது)

தற்போது சேவையில் இருக்கின்ற உத்தியோகத்தர்களை பார்க்கின்ற போது
முஸ்லிம் உத்தியோகத்தர்கள்  - 11
தமிழ் உத்தியோகத்தர்கள்  - 17
சிங்கள உத்தியோகத்தர்கள்  - 08
மொத்த உத்தியோகத்தர்கள்  - 36
(தகவல் இணைக்கப்பட்டுள்ளது)

எனவே தேவையான உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 10 ஆகும். இதனைப் பார்க்கின்ற போது முஸ்லிம் 05, சிங்களம் 04, தமிழ் 01 என்றவாறே நியமிக்கப்பட வேண்டும். ஆனால் இதனை விடுத்து முஸ்லிம் 01, சிங்களம் 03, தமிழ் 04 விண்ணப்பதாரிகளுக்கு நேர்முகப் பரீட்சைக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளமையானது எமது சமூகத்திற்கு நடந்த அநீதியாகும். விகிதாசாரமோ, பிரதேச செயலக அடிப்படையிலோ நியமனம் வழங்கினால் கூட எமக்கு வழங்கப்படவேண்டிய 04 உத்தியோகத்தர்கள் பறிக்கப்படுகின்றமையாது பெரும் அநீதியாகும். குறிப்பாக இறக்காமம், பொத்துவில், கல்முனை, காத்தான்குடி, சாய்ந்தமருது, குச்சவெளிக்கு எமது முஸ்லிம் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டிய இடத்தில் வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள்; நியமிக்கப்படுவது எந்தவகையில் நியாயம்?

18 தமிழ் பிரதேச செயலகங்கள் இருக்கும் போது 21 உத்தியோகத்தர்கள் நியமிப்பது எந்த வகையில் நியாயம்?  16 முஸ்லிம் பிரதேச செயலகங்கள் இருக்கும் போது 16 உத்தியோகத்தர்கள்; வேண்டுமல்லவா? தற்போது 11ங உத்தியோகத்தர்களே கடமையாற்றுகின்றனர். இன்னும் 5 பேர் எங்கே இவ்வாறு முறையற்ற விதத்தில் நடாத்தப்படவிருக்கும் நேர்முகப் பரீட்சையை இரத்துச் செய்து முறையான விதத்தில் முஸ்லிம் 5,  சிங்களம் 4, தமிழ் 1 என்ற நியாயமான உத்தியோகத்தர்களின் நியமனத்தை வழங்குமாறு முஸ்லிம் மக்களின் உரிமைகளுக்கா குரல்; கொடுக்கும் அரசியல்வாதி என்ற வகையில்; தங்களிடம் வேண்டிக்கொள்கின்றேன் என கிழக்கு மாகாண ஐக்கிய பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் எம்.எச்.காமீல் தெரிவித்துள்ளார்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்