கிழக்கிலிருந்து முஸ்லிம் காங்கிரசை துடைத்தெறியாதவரை ஹக்கீமை தலைமை பதவியிலிருந்து இறக்க முடியாது என உலமா கட்சி தலைவர் கலாநிதி முபாறக் மௌலவி தெரிவித்தார். கல்முனையில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடன் நடந்த சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவத்.
கிழக்கு தலைமயிலான முஸ்லிம் கட்சி என்பதை உலமா கட்சி சொல்லும் போது அதென்ன கிழக்குக்கு ஒரு கட்சி வடக்குக்கு ஒரு கட்சி தெற்குக்கு ஒரு கட்சியா என அரசியல் தெரியாத சிலர் கேட்கின்றனர். இந்த நாட்டில் கிழக்குக்கொரு மாகாண சபை வேறு மாகாணங்களுக்கு சபை என இருப்பது ஏன்? நிர்வாகத்தை இலகுபடுத்தத்தான். அதே போல் கிழக்கு மாகாணம் மட்டுமே முஸ்லிம்களின் ஆளுமைக்குட்பட்டுள்ள மாகாணமாகும். அதனால் கிழக்கு வாக்கு வங்கி மூலம் கிழக்கு மக்களும் நன்மையடைய வேண்டும். கிழக்கில் முஸ்லிம் கட்சி கிழக்கு தலைமையில் பலமாக இருந்தால் பிற மாகாண முஸ்லிம்களுக்கும் அது பலமாக இருக்கும்
நாம் கிழக்கு தலைமையிலான கட்சி என்றுதான் சொல்கிறோமே தவிர கிழக்குக்கு மட்டுமான கட்சி என ஒரு போதும் சொல்லவில்லை.
கிழக்கு தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் ஒரளவு கிழக்குக்கும் ஏனைய மாகாணங்களுக்கும் சேவை செய்தது. ஆனால் கிழக்குக்கு வெளியிலான தலைமை மூலம் கிழக்கு முஸ்லிம்களுக்கும் உரிமை கிடைக்கவில்லை வெளி மாகாண முஸ்லிம்களுக்கும் கிடைக்கவில்லை. அந்தத்தலைமை என்பது வெறுமனே அலங்கார தலைமையாகவே இருப்பதுடன் தன்னோடிருந்த மூத்த கிழக்கு அரசியல்வாதிகளை ஓரம்கட்டிவிட்டு புதிதாதாக தனக்கு வாலாட்டுவோரை பலப்படுத்துவதனூடாக தனது தலைமைக்கு சேதாரம் வராமல் பார்த்துக்கொள்ளும் துரோகத்தை செய்கிறது.
இப்படியெல்லாம் நடக்கும் என்பதை 2002ம் ஆண்டு முதல் உலமா கட்சித்தலைமை பகிரங்கமாக சொல்லி வருகிறது. ஆனாலும் சமூகத்தை விட தமது பட்டம் பதவிகளில் அக்கறை காட்டிய கிழக்கின் மூத்த அரசியல்வாதிகள் இன்று மூக்குடை பட்டு நிற்பதையும் இன்னும் சிலர் ஜமிய்யதுல் உலமாவிடம் நீதி கேட்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மௌலவிமாரின் சுயகவுரவத்தையும் உரிமைகளையும் பெற வேண்டுமென்றால் உலமா கட்சி அவசியம் என்பது இன்று உண்மையாகியுள்ளது.
நாம் உலமா கட்சியை ஆரம்பிக்காது நாமும் முஸ்லிம் காங்கிரசில் இருந்து கொண்டு மார்க்கம் இல்லா தலைமைக்கு ஜால்ரா அடித்துக்கொண்டு இருந்திருந்தால் இன்று நாமும் ஜமிய்யதுல் உலமாவின் வாசலில் மண்டியிட்டிருக்க வேண்டி வந்திருக்கும். ஆனால் இறைவன் எமக்கு நல்ல சிந்தனையை தந்ததுடன் சிறந்த வழியில் நடத்தியதனால் ஏனைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் அளவு இறைவன் அறிவுப்பலத்தை தந்துள்ளான்.
ஆகவே முஸ்லிம் காங்கிரசில் அதிருப்தியுற்றவர்கள் ஒரு விசயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் அதாவது மு காவை கிழக்கிலிருந்து அப்புறப்படுத்தாதவரை ஹக்கீமை
உங்களால் பதவியிறக்க முடியாது. எனவேதான் கிழக்கு தலைமையிலான உலமா கட்சியுடன் இணைந்து நமது மண்ணின் உரிமைக்காகவும் நலினப்படும் ஏணைய மாகாண முஸ்லிம்களுக்கும் குரல் கொடுக்க ஒன்று படுவோம்.
Post a Comment