ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்திக் கூறினார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ, வேரகலவில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தௌிவாவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதுடன், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவுவதாகவும் முற்போக்காக இருப்பதை விட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார். எனினும், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் விக்ரமசிங்க உள்ள
(ஜ. ஏ.காதிர்கான்
இன மத மொழி பேதமின்றி சகல மாணவர்களும் ஆங்கிலக் கல்வியைக் கற்பது தற்காலத்தைப் பொருத்தமட்டில் அவசிய தேவையாக இருப்பதுடன் இதற்கு பெற்றோரின் பங்களிப்பும் அவசியம் என மாகாணசபைகள் உள்ளுராட்சி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா வலியுறுத்திக் கூறினார்.
ஆங்கிலப் பாடநெறியைப் பூர்த்தி செய்து பரீட்சையில் ஆகக் கூடுதலான புள்ளிகளைப் பெற்ற நானூறு (400) அறநெறி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாரட்டி கௌரவிக்கும் நிகழ்வு (28) திங்கட்கிழமை மாலை கொழும்பு மருதானை டவர் மண்டபத்தில் இடம்பெற்ற போதேஇ அமைச்சர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.
லங்கா- இந்தியன் எரிபொருள் கூட்டுத்தாபனம்இ பைஸர் முஸ்தபா மன்றம் ஆகியன இணைந்து ஒழுங்கு செய்திருந்த இந்நிகழ்வில் அறநெறிப்பாடசாலைகளில் கல்வி பயிலும் சிங்கள தமிழ் முஸ்லிம் கத்தோலிக்க மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். பைஸர் முஸ்தபா தலைமை வகித்துஇ இங்கு மேலும் பேசும் போது குறிப்பிட்டதாவது-: பாடசாலை வகுப்பறைகளில் இன்று மாணவர்கள் மத்தியில் ஆங்கிலம் தெரிந்தவர், தெரியாதவர் என்ற பாகுபாடு நிலவி வருவதைப் பார்க்கின்றோம். இவ்வாறான வேற்றுமைக் கருத்துக்கள் மாணவர்களின் பிஞ்சு உள்ளங்களிலிருந்து அகல வேண்டும் என்ற நன்நோக்கத்தில்தான் இவ்வாறான பாடநெறிகளை நாடாத்தி வருகின்றோம்.
இன்றுஇ நகரப் புறங்களில் வாழும் மாணவர்களும் பணம் படைத்தவர்களின் பிள்ளைகளும் ஆங்கிலக் கல்வியைக் கற்று வருகின்றனர். ஆனால் கிராமப்புற மாணவர்களுக்கும் சமயப் பாடசாலைகளில் கற்ககும் மாணவர்களுக்கும் ஆங்கில கல்வி சென்றடைவதில்லை. இது ஒரு பெரும் குறையாகத் தென்பட்ட மன உறுத்துதலினாலேயே இப் பாடநெறியை நமது மன்றத்தின் மூலம் இந்தியன் ஒயில் கம்பனியின் ஒத்துழைப்புடன் நடத்தி வருகின்றோம். ஆங்கிலம் இன்று சர்வதேச மொழியாக இருக்கிறது. நமது தாய் மொழியுடன் மாத்திரம் நின்றுவிடாமல் ஆங்கில மொழியையும் கற்றுணர்ந்து சர்வதேச தரத்திற்;கு முன்னேறிச்செல்ல வேண்டும். இன்று அரச நிறுவனங்களுக்கு மாத்திரமல்லஇ தனியார் நிறுவனங்களில் தொழில் புரியவும் ஆங்கிலம் அவசியமாகிறது என்றார்.
நிகழ்வில் பிரதம அதிதியாக கனித வளங்கல் அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி கலந்து கொண்டதுடன் விசேட அதிதிகளாக உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத், எல் ஐ ஓ சி நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் ஷியாம் பொரா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Comments
Post a comment