நுரைச்சோலை வீட்டுத்திட்டம் விரைவில் மக்களிடம் கையளிக்கப்படும் - அமைச்சர் ரஊப் ஹக்கீம்.
சுலைமான் றாபி-

டந்த சுனாமி அனர்த்தத்தின் பின்னர் அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் நுரைச்சோலை வீட்டுத்திட்டம் விரைவில் மக்களிடம் கையளிக்கப்படுவதற்கான தீர்வு கிட்டும் என மு.கா தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் நேற்றைய தினம் (12) ஒலுவிலில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடு பற்றிய ஊடகவியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே போதே மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் கூறுகையில் :

நுரைச்சோலை வீட்டுத்திட்டம் சம்பந்தமாக தொடர்தேர்ச்சியாக பேசி வருகின்றோம். ஏனென்றால் இந்த வீட்டுத்திட்டத்தில் இருக்கும் நீதிமன்ற தீர்ப்பின் காரணமாகவே சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. எனவே இவைகளை மீளவும் நீதிமன்றத்தீர்ப்பின் மூலமே சீர்செய்ய முடியும். அது தவிர வேறு வகையினால் அவற்றுக்கான தீர்வினை எட்டுவது கஷ்டமானதாகும். இதுதவிர இந்த வீட்டுத்திட்டம் சம்பந்தமாக சவுதி அராபிய தூதுக்குழுவினருடனும், வெளிநாட்டு அமைப்புக்களுடன் பேசிய போது இதற்கு மேலதிகமாக சவுதி அரசாங்கம் உதவ தயாராக இருக்கின்றது.

மேலும் இந்த விடயம் சம்பந்தமாக சவுதி செஞ்சிலுவைச்சங்கம் சவுதி அரசாங்கத்திற்குக் கூட முறைப்பாடொன்றை செய்திருக்கிறது. எனவே இதன் மூலம் விரைவில் நுரைச்சோலை வீட்டுத்திட்டதினை மக்களிடம் கையளிப்பதற்கான தீர்வு கிட்டும் என்றார்.

இதேவேளை இவ்வீட்டுத்திட்ட‌ம் விரைவில் கிடைக்கும் என்றே க‌ட‌ந்த‌ ஆட்சியிலும் ர‌வூஃப் ஹ‌க்கீம் சொல்லி வ‌ந்தார். ந‌ல்லாட்சி ஏற்ப‌ட்டு ஒரு வ‌ருட‌ம் க‌ல‌ந்தும் இன்ன‌மும் இது விட‌ய‌த்தில் இழு பறி உள்ள‌து என்றால் முஸ்லிம்க‌ள‌ அதிக‌ ப‌ட்ச‌ வாக்குக‌ள் பெற்ற‌ மு காவின் கையாலாகா த‌ன‌த்தையே காட்டுகிற‌து.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்