சம்பிக்க ரணவக்கதான் முஸ்லிம்கள் மீதான தாக்குதலை, அரங்கேற்றியதுஅமைச்சர் பாட்டளி சம்பிக்க தான் தர்க்கா நகர் சம்பவத்தை முழுமையாக அரங்கேற்றியவர் என தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.

தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம், இன்று - 07- கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆட்சியின் போது, தர்க்கா நகர் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, மதஸ்த்தளங்கள் உடைக்கப்பட்டது என அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், குறித்த சம்பவத்திற்கு முற்றிலும் முன்னின்று செயலாற்றியது தற்போதைய அமைச்சர் சம்பிக்க என்றும், இதற்கும் பொதுபல சேனா அமைப்பிற்கும் எந்த வித தொடர்பும் இல்லையென அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சம்பிக்க தனது இருப்பை காப்பாற்றிக் கொள்வதற்காக தயாராகி வருவதாக வசந்த பண்டார குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தமையானது, சர்வதேச சூழ்ச்சியின் மூலமே என அவர் கூறியுள்ளார்.

அத்துடன், ஆட்சியில் இருக்கும் இந்த அரசாங்கம், நாட்டில் சிறுபான்மையினரின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக சர்வதேசத்தின் உதவியை நாடி செயற்பட்டது எனவும், தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்