தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் மெல்லிசைத் தூறல்கள்' பாடல்கள் நூல் வெளியீட்டு விழாதியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் 'மெல்லிசைத் தூறல்கள்' பாடல் நூல் வெளியீட்டு விழா 2016, மார்ச்; 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.15 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. பூங்காவனம் கலை இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வு சாகித்திய ரத்னா தெளிவத்தை ஜோசப் அவர்களின் தலைமையில் இடம்பெறவிருக்கிறது.

இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கொழும்பு பல்கலைக் கழக உளவளவியலாளர் அல்ஹாஜ் யூ.எல்.எம். நௌபர் அவர்களும், சிறப்பு அதிதிகளாக திரு. திருமதி. சிரிசுமண கொடகே, அல்ஹாஜ் வை.எம். இப்ராஹிம், கலாநிதி யூசுப் மரிக்கார், டாக்டர் புரவலர் அல்ஹாஜ் ஏ.பீ. அப்துல் கையூம் (ஜே.பி.), ஜனாப். இல்ஹாம் மரிக்கார் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். பிரபல தொழிலதிபர் அல்ஹாஜ் எம்.எம். சப்ரி நூலின் முதற்பிரதியைப் பெற்றுக்கொள்வார். 

வரவேற்புரையை ஊடகவியலாளர் எம்.ஏ.எம். நிலாம் அவர்களும், தலைமை உரையை தெளிவத்தை ஜோசப் அவர்களும், கவி வாழ்த்தை ஊடக அதிகாரி திருமதி நூருல் அயின் நஜ்முல் ஹுஸைனும் நிகழ்த்த, நயவுரையை சட்டத்தரணி இரா. சடகோபன் அவர்களும், நூல் பற்றிய கருத்துரையை கவிஞர் என். நஜ்முல் ஹுஸைனும்;, ஏற்புரை மற்றும் நன்றியுரையை நூலாசிரியர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவும் நிகழ்த்தவுள்ளனர். திக்வல்லை ஸும்ரி அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்