Skip to main content

ஆற்றைக் கடக்கும்வரைதான் அண்ணன், தம்பி. கடந்து விட்டபின் நீ யாரோ, நான் யாரோ” என்பதுதான் தமிழ் அரசியல் தலைமைகளின் மனோநிலை

றவூப் ஸெய்ன் –
உத்தேச அரசியலமைப்பு மாற்றத்தின் பின்னணி நோக்கங்களுள் ஒன்று; இனப் பிரச்சினைக்குத் தீர்வாக அதிகாரத்தை மத்தியிலிருந்து பிராந்தியங்களுக்குப் பகிர்வதாகும். 1987 இல் இடம்பெற்ற இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் ஒற்றையாட்சியில் முதல் மாற்றம் நிகழ்ந்தது. அவ்வொப்பந்தத்தின்படி மாகாண சபை முறை உருவாக்கப்பட்டு, மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் 9 மாகாணங்களுக்கும் பகிரப்பட்டன. இனப்பிரச்சினைக்குத் தீர்வாக முன்வைக்கப்பட்ட மாகாண சபை முறை, வடக்கு கிழக்கிற்கு மட்டுமன்றி, முழு இலங்கைக்குமான தீர்வாக மாறியது.
சமீப காலங்களில் எந்த மாகாணங்களுக்கு அம்முறை தீர்வுத் திட்டமாக முன்வைக்கப்பட்டதோ அவற்றை விட ஏனைய ஏழு மாகாணங்களிலுமே அம்முறை சிறப்பாக நடைபெற்று வருகின்றமை பெரும் முரண்நகையாகும். வடக்கு கிழக்கு மாகாண அதிகாரங்களில் அவ்வப்போது மத்திய அரசாங்கம் தலையீடு செய்து வருவதும், மக்களாணை பெற்ற முதலமைச்சருக்கு மேலே நியமிக்கப்படும் கவர்னர் (ஆளுநர்) அதிகாரம் கொண்டவராக நீடிப்பதும் மாகாண சபை முறைமையை சிலபோது கேலிக்கூத்தாக்கி விடுகின்றது.
மாகாண சபை முறைமை தமிழர்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வாக அமையவில்லை என்ற நியாயத்திலிருந்தே தற்போது சமஷ்டித் தீர்வை அவர்கள் மிக உறுதியாக வலியுறுத்தி வருகின்றனர். சமஷ்டித் தீர்வை எட்டுவதற்குள்ள தடைகள் அனைத்தையும் தாண்டி, அத்தீர்வு நடைமுறைக்கு வரும்போது மாகாண சபை முறை போன்று முழு நாட்டுக்குமுரிய தீர்வாகவே அமுலுக்கு வரும் சாத்தியமும் உள்ளது.
ஏனெனில், தென்னிலங்கையில் சிங்கள மக்களிடையே சமஷ்டி பற்றிய ஒரு சந்தேகமும் அச்சமும் நீண்ட காலமாய் நிலவி வருகின்றது. சிங்கள இனத் தேசிய கட்சிகள் கடந்த காலங்களில் மேற்கொண்ட திட்டமிட்ட பிரச்சாரங்களின் மூலம் இந்த அச்சத்தை உருவாக்கியுள்ளன. எவ்வாறாயினும், தென்னிலங்கை சிங்கள மக்கள் சமஷ்டியை சந்தேகத்தோடுதான் பார்க்கின்றனர். உச்ச அளவில் அதிகாரம் பகிரப்பட்ட சமஷ்டிப் பிராந்தியங்கள் நீண்ட காலத்தில் மத்திய அரசாங்கத்திலிருந்து விலகி தனிநாடாய் பிரிந்து போகலாம் என்ற அச்சமே பெரும்பான்மை சிங்கள மக்களை ஆட்கொண்டுள்ளது,
நவீன உலக வரலாற்றில் இதற்கான உதாரணங்கள் மிகவும் குறைவு. எனினும், இலங்கைச் சூழலை முன்னிறுத்தி, இந்த அச்சத்தை விதைப்பதில் சிங்கள தேசியவாத சக்திகள் வெற்றி பெற்றுள்ளனர். தமிழரின் சமஷ்டிக் கோரிக்கை தென்னிலங்கையில் சிங்களவர்களைப் பயமுறுத்தும் பூதமாகவே பார்க்கப்படுகின்றது. எனவே பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அது பெறுவதும், இறுதியில் சர்வஜன வாக் கெடுப்பில் வெற்றி பெறுவதும் நாம் எண்ணுவது போன்று மிக எளிதான காரியமல்ல.
இன்னொருபுறம், இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கில் தமிழர்களுக்கு சமஷ்டி பகிரப்பட்டால், முஸ்லிம்களின் எதிர்காலம் என்னவாகும் என்ற அச்சம் முஸ்லிம்களிடையே நிலவுகின்றது. ஏனெனில், இணைப்பின் மூலம் முஸ்லிம்களின் வீதாசாரம் அரைவாசிக்கும் அதிகமாகக் குறைக்கப்படுகின்றது. அதிகாரத்தைப் பகிர்வதில் இது பாரிய சவாலாக மாறக் கூடும்.
1987 க்குப் பிற்பட்ட காலகட்டங்களில் வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் எதிர்கொண்ட மிகக் கசப்பான அனுபவங்களிலிருந்தே இந்த நியாயமான அச்சம் ஏற்படுகின்றது. தமிழ்-முஸ்லிம் மக்களிடையே பரஸ்பர நம்பிக்கையையும் வெளிப்படைத் தன்மையையும் கட்டியெழுப்புவதன் மூலமே இந்த சந்தேகங்களைக் களைய முடி யும். இரு சமூகங்களும் உச்சளவு அதிகாரத்தைப் பெற முடியும்.
இது தொடர்பிலான முடிவுகளை எட்டும் அதிகாரம் அல்லது தனியுரிமை முஸ்லிம் அரசியல் கட்சிகளை மாத்திரம் சார்ந்திருப்பது மிக ஆபத்தானது. சிவில் சமூக நிறுவனங்கள், அமைப்புகள் என்பவற்றின் கருத்துகளும் ஆலோசனைகளும் இது தொடர்பில் உள்வாங்கப்பட வேண்டும். என்னதான் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தமிழர்களின் கோரிக்கையை ஒருமித்த குரலில் முன்வைக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புப் போன்ற ஓர் அரசியல் கூட்டு முஸ்லிம் சமூகத்திலும் உருவாக்கப்பட வேண்டும்.
தேர்தல் கால தெருச் சண்டைகளுக்கு அப்பால், சமூகத்தின் எதிர்காலத்தோடு தொடர்பான அரசியலமைப்பு மாற்றம் குறித்த பரந்துபட்ட கருத்தொருமைப்பாடு கொண்ட ஒரு தீர்வுத் திட்டத்தை சிவில் சமூகத்தின் அங்கீகாரத்தோடு முன்வைக்கும் ஓர் அரசியல் கூட்டு முஸ்லிம் சமூகத்திலும் உருவாக வேண்டும். இது தொடர்பில் தனித் தீவாய் செயற் படும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் சீரியஸாக சிந்திக்க வேண்டும்.
முஸ்லிம்களிடையே நிலவும் தமிழ் தரப்பின் கோரிக்கை பற்றிய அச்சத்திலிருந்து முஸ்லிம்களை தமிழர்களே விடுவிக்க வேண்டும். காரணம், தமிழ்- முஸ்லிம் உறவில் ஏற்பட்ட விரிசல்களை வரலாற்று ரீதியில் அணுகும்போது “ஆற்றைக் கடக்கும்வரைதான் அண்ணன், தம்பி. கடந்து விட்டபின் நீ யாரோ, நான் யாரோ” என்பதுதான் தமிழ் அரசியல் தலைமைகளின் மனோநிலையாகவும் செயற்பாடாகவும் இருந்து வந்துள்ளது.
முஸ்லிம்களைப் போன்று சக சிறுபான்மையாக வாழ்ந்த தமிழ் அரசியல் தலைமைகள் முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை முழுமையாகக் கவனத்தில் எடுத்த வரலாறில்லை. 1915 இல் நடைபெற்ற கம்பளை முஸ்லிம்-சிங்கள கலவரத்தைத் தொடர்ந்து பொன். இராமநாதன் நடந்துகொண்ட விதம் மற்றும் 1934 இல் சீ.எஸ். ராஜரட்னம் கொண்டு வந்த மாற்று யோசனை என்பனவும் முஸ்லிம்களைப் புறந்தள்ளியதாகவே இருந்தன.
டொனமூர் சீர்திருத்தமும் முஸ்லிம்களின் உண்மையான அரசியல் அபிலாசைகளை கவனத்தில் கொண்டதாகக் கூற முடியாது. ஏனெனில், அதுவரை கைக்கொள்ளப்பட்டு வந்த இனவாரிப் பிரதிநிதித்துவமுறை டொனமூர் மூலம் முற்றாகக் கைவிடப்பட்டு, தேர்தல் தொகுதிவாரியான பிரநிதித்துவ முறை நடைமுறைக்கு வந்தது. இதன் காரணமாக, இலங்கையிலுள்ள சிங்கள, தமிழ் சமூகங்களைப் போன்று பிரதேச ரீதியில் செறிவான குடியிருப்புகள் அற்ற நிலையில், இலங்கை முழுக்கச் சிதறி வாழ்ந்த முஸ்லிம்களால் தங்களுக்கான பிரதிநிதி களைத் தெரிவு செய்யும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
இச்சூழ்நிலையில் தமிழ்த் தலைமைகள் கூட முஸ்லிம் அபிலாஷைகளை கருத்திற் கொள்ளவில்லை. 1934 இல் சீ.எஸ். ராஜரட்னம் முற்போக்குச் சங்கங்களின் கூட்டிணைப்பு எனும் ஸ்தாபனம் ஒன்றை உருவாக்கி, இலங்கைக்கு சமஷ்டி ஆட்சிதான் சிறந்தது என்று ஆங்கிலத் தளதிபதியிடம் அறிக்கை யொன்றை சமர்ப்பித்தார். இது இலங்கை அரசியல் வரலாற்றில் பாரிய கவனயீர்ப்பைப் பெறாத போதும், அதிலும் கூட இலங்கை முஸ்லிம்கள் எவ்வித கரிசனையும் கொள்ளப்படாமல் விடப்பட்டி ருந்தனர்.
இலங்கையை மூன்று சமஷ்டிகளாகப் பிரிக்க வேண்டும் என்று அதில் ஆலோசனை வழங்கப்பட்டது.
வடகிழக்கை தமிழர்களுக்கும், மத்திய, ஊவா சப்ரகமுக மாகாணங்களை கண்டிச் சிங்களவர்களுக்கும் ஏனைய பகுதிகளை கரையோர சிங்களவர்களுக்குமென ராஜரட்னத்தின் அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. முஸ்லிம்கள் குறித்து அதில் எதுவும் கூறப்படவில்லை.
“தந்திரத்தை உத்தியோகபூர்வமாகக் கையளிப்பதற்கு முன்பாக” தந்திரத்தின் பெயரால் எதிர்காலத்தில் உருவாகப் போகின்ற பெரும்பான்மை ஆட்சியில் சிறுபான்மையினருக்கான அரசியல் காப்பீடுகளையும் பாதுகாப்பினையும் உறுதி செய்ய சிறுபான்மை இனங்களின் சார்பில் அவர்களது பிரதிநிதிகள் தமது நிலைப்பாடுகளையும் பிரேரணைகளையும் முன்வைக்கலாம் என்று சோல்பரி ஆணைக்குழு வேண்டிக்கொண்டது.
அந்த வகையில், சிறுபான்மைச் சமூகத்திடமிருந்து சில பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றுள் ஒன்றுதான், தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் முன்வைத்த 50 : 50 கோரிக்கையாகும். மெனிங், டொனமூர் போன்று பொன்னம்பலத்தின் கோரிக்கையும் முஸ்லிம்கள் தொடர்பில் போதிய கவனம் செலுத்தவில்லை. 50 ஆசனங்கள் சிங்களப் பெரும்பான்மைக்கும் 50 ஆசனங்கள் சிறுபான்மைக்கும் என்று பெரிதாக முன்னிறுத்தப்பட்ட இக்கோரிக்கைக்குப் பின்னணியில் தமிழ் அரசியல் தலைமைகளின் ஆதிக்க மனோநிலையே இருந்தது.
அக்கோரிக்கையில் இலங்கைத் தமிழருக்கு 17, இந்தியத் தமிழருக்கு 13, பரங்கியருக்கு 8, ஏனையோருக்கு 12 என்ற வகையிலேயே ஆசனங்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. முஸ்லிம்களின் தனித்துவம் கவனத்தில் எடுக்கப்படவில்லை என்பதோடு, அவர்களுக்கான ஆசனங்கள் எத்தனை என்பதும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. இதன் அரசியல் விளைவாகவே, முஸ்லிம்கள் பெரும்பான்மை கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய நேரிட்டது.
தமிழ்த் தரப்பின் வரலாற்று ரீதியான இந்த அரசியல் மனோபாவத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்துள்ளதாகத் தெரியவில்லை. 1990 ஒக்டோபரில் வடக்கிலிருந்து புலிகள் முஸ்லிம்களை விரட்டியடித்தமை அப்பட்டமான ஓர் இனச் சுத்திகரிப்பாகும். இனச் சுத்திகரிப்பு தொடர்பான சர்வதேச ரீதியான வரையறைகளின்படி தமிழ் புலிப் பாசிஸ்ட்டுகள் மேற்கொண்ட அந்நடவடிக்கை தெளிவான இனச் சுத்திகரிப்பே. அவ்வாறிருக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அரியனேந்திரன் வடமாகாண முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு கால் நூற்றாண்டு கடந்த நிலையில், அது இனச்சுத்திகரிப்பல்ல, மாறாக முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக புலிகள் மேற்கொண்ட நடவடிக்கை என்று பாசிஸத்தை நியாயப்படுத்துகின்றார்.
z_p01-expulsion-oவெளியேற்றப்பட்டமை அதற்குப் பின்னர் நடந்தவை பற்றியெல்லாம் அரியனேந்திரன் ஒன்றும் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. அப்படியிருக்க, தமிழ் தேசியத்தின் ராமநாத முகத்தை மீண்டும் அவர் வெளிப்படுத்தியிருப்பது தமிழ்த் தரப்பு பற்றிய நியாயமான அச்சத்தையும் ஐயங்களையும் முஸ்லிம்களிடம் ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது.
இன்று வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு சூட்சுமமாக தடை விதித்து வருவது யார்? புலிகள் இழைத்த வரலாற்றுத் தவறுக்காக பச்சாதாபப்படுவதை விடுத்து, முஸ்லிம்களற்ற தூய சைவ வேளாள வடக்கை கண்காணிப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ள ஆர்வத்தின் பின்னணி அரசியல் என்ன?
இந்த இலட்சணத்தில்தான் இணைக்கப்படும் வடக்குக் கிழக்கில் தமிழ் தரப்பு சமஷ்டித் தீர்வை கோருகின்றது. தற்போது புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் தொடர்பான ஆலோசனைகளை மாவட்ட ரீதியில் முன்வைத்து வரும் தமிழ் தரப்பு தமது ஆலோசனை களில் கூட முஸ்லிம் காரணியை (Muslim factor) தெளிவாக முன்வைக்கவில்லை.
இங்குதான் இணைக்கப்படும் வடக்குக் கிழக்கில் தமிழர் கோரும் சமஷ்டி குறித்த பாரிய அச்சமும் ஐயமும் முஸ்லிம்களிடையே மேலெழுகின்றது. அவற்றை பின்வருமாறு சுருக்கிக் கூறலாம்.
1. வடக்குக் கிழக்கு இணைக்கப்பட்டு சமஷ்டித் தீர்வை தமிழ்கள் கோருவது ஏன்? இலங்கையில் ஏனைய ஏழு மாகாணங்களும் தனித்தியங்கும் நிலையில், இவ்விருமாகாணங்கள் மாத்திரம் இணைக்கப்பட வேண்டியதன் தேவை என்ன?
2. அவ்வாறுதான் இணைக்கப்பட்டு, சமஷ்டி வழங்கப்படுமாயின், அதில் முஸ்லிம்களின் அரசியல் அதிகாரக்கையேற்பு என்ன வடிவத்தைப் பெறும்?
3. காலா காலமாக முன்வைக்கப்பட்டு வரும் நிலத் தொடர்பற்ற முஸ்லிம் அதிகார அலகை (பாண்டிச்சேரி மாதிரியை) முதலில் தமிழ் தரப்பு இதய சுத்தியுடன் ஏற்றுக்கொள்ளுமா?
4. தென்னிலங்கையின் சிங்களத் தேசியவாதிகள் தனியான முஸ்லிம் அதிகாரப் பகிர்வுக் கோரிக்கைக்கு எந்தளவு தூரம் செவிசாய்ப்பார்கள்? ஏற்கனவே கரையோர மாவட்ட சர்ச்சை தேர்தலின் போது சிங்களத் தேசியத்திற்கு தீனியாக அமைந்ததை அறிவோம்.
A delegation from Tamil National Alliance, Sri Lanka calls on the Prime Minister, Shri Narendra Modi, in New Delhi on August 23, 2014.
5. வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்களின் அரசியல் தனித்துவத்தை இந்தியா ஒருபோதும் அங்கீகரித்ததில்லை. ராஜிவ்-ஜே.ஆர் இடையே நடைபெற்ற இந்திய-இலங்கை ஒப்பந்தம் முஸ்லிம்களை ஒரு பொருட்டாகவே கொள்ளவில்லை. இந்நிலையில் பிராந்திய அரசியல் சக்திகள் வடக்குக் கிழக்கில் ஒரு நிலத் தொடர்பற்ற முஸ்லிம் அதிகார அலகை ஏற்குமா?
6. தற்போதைய ரணிலுக்குப் பின்னாலுள்ள சர்வதேச சக்திகள் (சியோனிஸ இஸ்ரேல் உள்ளிட்டு, ஐக்கிய அமெரிக்கா) இலங்கையில் -குறிப்பாக வடக்குக் கிழக்கில்- முஸ்லிம்களின் அரசியல் தனித் தன்மையை ஏற்று, இத்தகைய அதிகாரப் பகிர்வொன்றை ஆதரிக்குமா?
இவ்வாறான அச்சங்களையும் ஐயங்களையும் கவனத்திற் கொள்ளும் சில முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள் இணைக்கப்படும் வடக்கு கிழக்கில் முஸ்லிம்களை பலியெடுக்கும் சமஷ்டித் தீர்வை ஏற்க முடியாது என வாதிக்கின்றனர். இருக்கின்ற மாகாணங்களுக்கு அதிகாரங்களை அதிகரிப்பதும், மத்திய அரசின் தலையீட்டை நிறுத்துவதுமே சிறந்த அதிகாரப் பகிர்வு என்பது அவர்களின் வாதம்.
வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டால் முஸ்லிம்களின் வீதாசாரம் 17 வீதமாகக் குறைவது மட்டுமன்றி, தமிழினத்தின் மேலாதிக்கத்திற்குள் முஸ்லிம்கள் பலிகொல்லப்படும் ஆபத்து உள்ளதென்று இந்தத் தரப்பினர் வாதிக்கின்றனர்.
இன்னொரு புறம், முஸ்லிம்களை பகுதியளவில் பிரதிநிதித்துவம் செய்யும் முஸ்லிம் காங்கிரஸ் நிபந்தனையின் அடிப்படையில் வடக்கு கிழக்கு இணைப்பை ஏற்க முடியும் என்று பேசி வருகின்றது. லண்டனிலும் கொழும்பிலும் முஸ்லிம் காங்கிரஸும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இது குறித்து மூடிய அறை கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றன.
மேலே எழுப்பப்பட்ட ஐயங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இருந்து முஸ்லிம் காங்கிரஸ் என்ன பதிலைப் பெற்றுத் தரப் போகின்றது என்பது மங்கலாகவே உள்ளது.
வசந்தம் டீவியில் சமீபத்திய அதிர்வு நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட மு.கா. தலைவர் ஹக்கீம், இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மழுப்பலாகவே பதிலளித்தார். பேச வேண்டிய இடங்களில் சாணக்கியமாகவும் சாதுரியமாகவும் இந்த விடயங்களைக் கையாண்டு வருவதாகவும், இது தொடர்பான சில அம்சங்களைப் பகிரங்கமாகப் பேச முடியாது எனவும் அவர் கூறினார்.
Rauff-Hakeemதமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் நடத்தி வரும் இந்தக் கள்ளத்தனமான மூடிய அறை பேச்சுவார்த்தை குறித்து சமூகத்திற்கு ஹக்கீம் தெளிவுபடுத்த வேண்டும். ஏனெனில், எதிர்கால முஸ்லிம் அரசியல் தலைவிதியை மொத்தமாகவே தீர்மானிக்கும் தகுதியோ ஆற்றலோ முஸ்லிம் காங்கிரஸுக்கு இல்லை. சிவில் சமூகத்தின் உயிர்ப்புள்ள பங்குபற்றுதலோடு அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஒன்றிணைந்த வகையில், புதிய அரசியலமைப்பு குறித்த, முஸ்லிம்களின் ஒருமித்த அபிலாஷைகள் வெளிக்கொணரப்பட வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்று முஸ்லிம்களின் விரிந்த அரசியல் கூட்டமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும். அது சிவில் சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்க வேண்டும். அதன் மூலமே முஸ்லிம்களின் உண்மையான அரசியல் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றலாம்.
வடக்குக் கிழக்கு இணைப்பு மற்றும் சமஷ்டி குறித்து முஸ்லிம்களிடையே நிலவும் ஐயங்களுக்கு வார்த்தை அளவிலான உத்தரவாதமன்றி, செயலளவிலான உத்தரவாதங்களை தமிழ்த் தரப்பு முன்வைக்க வேண்டும். அதுவே வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ்-முஸ்லிம் சிறுபான்மையினர் அதிகபட்ச அதிகாரங்களை பெறுவதற்கான ஒரே வழியாக இருக்கும். வெற்று வார்த்தைகளல்ல, உண்மை செயலார்வம் வேண்டும். ஏனெனில், செயல் அதுவே சிறந்த சொல்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய