வீடமைப்பு விவகாரம் தொடர்பில் ஹிஸ்புல்லாஹ் மறுப்பறிக்கைவடக்கு கிழக்கு மாகாணங்களில் அமைக்கப்படவுள்ள 65 ஆயிரம் வீட்டுத்திட்டதில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அதனை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஏற்றுக் கொண்டதாகவும் வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் 
65 ஆயிரம் வீட்டுத்திட்டம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் எம்.பி. முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களில் நியாயங்கள் உள்ளதாகவும் அதனால் வீட்டுத் திட்டம் தொடர்பில்; பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆராய்ந்து வருவதாகவுமே நான் இதன் போது தெரிவித்திருந்தேன்.
ஆனால், ‘குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டார் ஹிஸ்புல்லாஹ்’ என்ற தலைப்பில் அச்செய்தி வெளியாகியிருந்தது. இதனால் சுமந்திரன் முன்வைத்துள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நான் ஏற்றுக் கொண்டதாக அது திரிவுபடுத்தப்பட்டுள்ளது. 
ஆகவே தயவு செய்து பிழையான செய்திகளை வழங்கி மக்களை திசைதிருப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன். 

 
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
(புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர்) 

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்