Skip to main content

அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்க --- இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்து


 


புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நடாளுமன்றத்தில் ஆற்றிய உறை முழுமையாக...


எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தனினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள  "பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்கள் மற்றும் அரசியல் கைதிகள்' தொடர்பிலான தனிநபர் பிரேரணை  மீதான விவாதத்தில் பேசுவதில் மகிழ்ச்சியடைகின்றேன். 
நாட்டிலுள்ள பிரதான பிரச்சினைகளுள்  காணாமலாக்கப்பட்டவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் தொடர்பிலான பிரச்சினையும் மிக முக்கிய ஒன்றாகும். 
விசேடமாக, காணமல்போனவர்களைக் கண்டறிதல் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உரிய நிவாரணங்கள்  இழப்பீடுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பும், கடமையுமாகும். 
அதேபோன்று, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு எவ்வித விசாரணைகளுமின்றி பல வருடங்களாக சில இளைஞர்கள் பல தசாப்தங்களாக சிறைகளில் வாடுகின்றனர். அவர்களை பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலைசெய்து உடனடி நிவாரணத்தை வழங்கவேண்டிய தேவை அரசுக்கு உள்ளது. 
இவ்விரு  பிரதான பிரச்சினைகளையும்  இன்று விவாதத்துக்கு கொண்டுவந்தமைக்கு எதிர்க்கட்சித் தலைவருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 
எதிர்க்கட்சித் தலைவரின் உரையில் அவர் குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தையும் நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். எவ்வித எதிர்ப்புமின்றி அதனை ஆமோதிக்கின்றோம். 
குறிப்பாக, சிறைகளில் வாழ்கின்ற இளைஞர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும்.  அரசியல் கைதிகளின் விடுதலைக்காகப் பலரும் அழுத்தங்கள்  கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என பல உறுதிமொழிகள் வழங்கப்பட்ட போதிலும் அவை இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படாமை மிகவும் மனவேதனையான அம்சமாகும்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கைகளில் நேரடியாகத் தொடர்புபட்டவர்கள் இன்று மன்னிக்கப்பட்டு அரசியல் மற்றும் ஏனைய துறைகளில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறான நிலையில், அசாதாரன சூழலில் கைதுசெய்யப்பட்ட அப்பாவி சகோதரர்கள் இன்னும் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை நியாயமற்ற ஒன்றாகும் என்பதுடன் அதனை ஏற்றுக் கொள்ளவும் முடியாது. 
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் பயங்கரவாத சம்பவங்கள் அல்லது தாக்குதல்கள் இடம்பெற்றபோது வீதிகளில் நின்றிருந்த அப்பாவி இளைஞர்கள் மற்றும்  12,13 வயது பாடசாலை மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் 20, 25 வருடங்களாக இன்றுவரை சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றனர். 
ஆகவே, இன்று யுத்தம் முடிவடைந்துள்ளது. நாட்டில் அமைதி  சமாதானம் ஏற்பட்டுள்ளது. எல்லோரும் ஒற்றுமையாக வாழும் சூழல் உருவாகியுள்ளது. இந்த ஒற்றுமையான  சமாதானமான   அமைதியான சூழலில்  கடந்த கால யுத்த சூழலில் பிடிக்கப்பட்டு  கைதுசெய்யப்பட்டு சிறைகளில் வாடுகின்ற அத்தனை இளைஞர்களும் உடனடியாக  ஏதோ ஒரு அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும். 
அவர்களுக்கான நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதுடன்,  அவர்களுக்கான விசாரணைகளைத் துரிதப்படுத்தி இரண்டு, மூன்று மாதங்களுக்குள் பொது மன்னிப்பின் அடிப்படையில் அவர்கள்  விடுதலை செய்யப்படவேண்டும். 
மார்ச்  8 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினத்தை நினைவுகூருகின்றோம். ஆனால், வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழ்கின்ற பெண்களின் முகம்கொடுக்கும் பிரதான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை. 
இயற்கை அனர்த்தம்  யுத்தம் மற்றும் அசாதாராண நிலைமைகளினால் கணவன்மாரை இழந்த 89 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகள் வடக்கு  கிழக்கு பகுதிகளில் வாழ்கின்றனர். 
கடந்த கால யுத்த சூழலில் படுமோசமாகப் பாதிக்கப்பட்ட சமூகம் பெண்கள் சமூகம். சோதனை வேதனைகளைத் தாங்கிக்கொண்டு வீடுகளிலே பல்வேறு துன்பங்களுக்கு  மத்தியில்  அவர்கள் வாழ்கின்றனர். 
இவ்வாறு வடக்கு, கிழக்கு பெண்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் சிந்தித்து அவற்றுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என மகளிர் தினத்தை முன்னிட்டு கோரிக்கை முன்வைக்கின்றோம். 
இவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வடக்கு, கிழக்கு பெண்களுடைய உறவுகள்  பற்றியே நாங்கள் இன்று விவாதித்துக்கொண்டிருக்கின்றோம்.
ஆகவே, இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் காலம் தாமதிக்காது  சிறைகளில் வாடுகின்ற அப்பாவி இளைஞர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்துகின்றோம். இவர்களை விடுதலை செய்வதனால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. 
அரசியல்கைதிகளை  விடுதலை செய்வதனால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என இனவாதம் பேசும் சிலரே கூறுகின்றனர்.  இவற்றைப் பொருட்படுத்தாது உடனடியாக பொதுமன்னிப்பின் அடிப்படையில் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும். 

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய