ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்திக் கூறினார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ, வேரகலவில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தௌிவாவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதுடன், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவுவதாகவும் முற்போக்காக இருப்பதை விட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார். எனினும், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் விக்ரமசிங்க உள்ள
இதுவரையும் முஸ்லிம்களின் காணிகளை விடுவிக்கும் விடயம் நிறைவேற்றப்படாமல் உள்ளதால் முஸ்லிம் சமூகம் அதிருப்தி
(ஏ.எல்.ஜனூவர்)
நமது நாட்டில் நல்லாட்சி ஏற்படுவதற்கு முஸ்லிம் சமூகம் பெரும் பங்களிப்புக்களைச் செய்தன. நல்லாட்சி அரசாங்கத்தில் முஸ்லிம் சமூகத்தின் பறிபோன காணிகள் விடுவிக்கப்பட்டு வழங்கப்படும் என முஸ்லிம் சமூகம் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தது. இதுவரையும் முஸ்லிம்களின் காணிகளை விடுவிக்கும் விடயம் நிறைவேற்றப்படாமல் உள்ளதால் முஸ்லிம் சமூகம் அதிருப்தி அடைந்த நிலையில் உள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை அமர்வு தவிசாளர் திரு. சந்திரதாச கலப்பதி தலைமையில் (29) நடைபெற்றபோது மாகாண சபை உறுப்பினர். ஆர்.எம். அன்வரினால் புல்மோட்டை பிரதேசத்தில் பொதுமக்களின் காணிகளை படையினரிடமிருந்து விடுவிக்கக்கோரி சமர்ப்பிக்கப்பட்ட அவசரப் பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றிய போதே மாகாண சபை உறுப்பினர் உதுமாலெவ்வை மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்…
நமது நாட்டில் நல்லாட்சி ஏற்படுவதற்கு பங்களிப்பு செய்த தமிழ் சமூகம் விழிப்புடன் செயல்பட்டு தங்களின் அரசியல் பேரம் பேசும் நிலைமையை பயன்படுத்தி தமது சமூகம் இழந்தவைகளைப் பெற்றுவருகின்றது. இது குறித்து முஸ்லிம் சமூகம் மகிழ்ச்சியடைகின்றது. தமிழ் மக்களின் பாரம்பரியமான காணிகளை மீட்டு வருகின்றனர். இந்த விடயத்தில் தமிழ் அரசியல் தலைவர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் அர்பணிப்போடு செயல்பட்டு வருவதை நாம் பாராட்டுகின்றோம். கிழக்கு மாகாண கல்வி அமைச்சராக பதவி வகித்த முன்னாள் கல்வி அமைச்சர் திரு. விமலவீர திஸாநாயக்க நமது கிழக்கு மாகாணத்தில் உள்ள காணிப் பிரச்சினைகளுக்கு முடிந்தளவு நல்ல தீர்வுகளை வழங்கினார்.
பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்த திரு. விமலவீர திஸாநாயக்க இன பேதமின்றி செயல்பட்டார். நீண்ட காலமாக புல்மோட்டை பிரதேசத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு சொந்தமான காணிகளை சிலர் அத்துமீறி பெறுவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டார்கள். இந்த நடவடிக்கைகளை எதிர்த்து புல்மோட்டை பிரதேசமக்கள் பெரும் ஆர்ப்பாட்டங்களையும் நடாத்தியுள்ளனர்.
பாதுகாப்பு படையினருக்கு தேவையான காணிகளை நாம் வழங்க வேண்டும். மக்களின் பாதுகாப்பு நலன் கருதிதான் பாதுகாப்பு படையினர் உள்ளனர். புல்மோட்டை பாதுகாப்பு படையினருக்கு சுமார் 180 ஏக்கர் காணியுள்ளதாக இச் சபையில் சுட்டிக் காட்டப்பட்டது. பாதுகாப்பு படையினருக்கு அவசியமாக தேவைப்படும் காணிகளை வழங்கி விட்டு மீதிக் காணிகளை இப் பிரதேச முஸ்லிம், தமிழ், சிங்கள அரசாங்க உத்தியோகத்ததர்களுக்கு வீடமைப்புதிட்டம் அமைத்து வழங்குவதற்கான ஏற்பாடுகளை கிழக்கு மாகாண சபையும், மாகாண காணி அமைச்சரும் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கிழக்கு மாகாண காணி அமைச்சர் திருமதி ஆரியவதி கலபதி கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் பதவியில் இருந்த போது கிழக்கு மாகாண மக்களின் காணிப் பிரச்சினைகள் தொடர்பாக இச் சபையில் மக்கள் பிரதிநிதிகளால் முன் வைக்கப்பட்ட விடயங்களைக் கேட்டுள்ளார். அவர் தனக்கு அரசாங்கக் காணி “ஒருஅங்குலம்”; கூட வழங்கப்படவில்லை என இச் சபையில் அன்று கவலையோடு தெரிவித்தார். இப்போது கிழக்கு மாகாண காணி அமைச்சர் பதவி திருமதி ஆரியவதி கலபதிக்கு கிடைத்துள்ளது. இச் சந்தர்பத்தைப் பயன் படுத்தி கிழக்கு மாகாணத்தில் தீர்க்கப்படாமல் உள்ள காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண வேண்டும். குறிப்பாக திருகோணமலை மாவட்ட மக்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
இதேபோன்று அம்பாரை மாவட்டத்தில் பொத்துவில் பிரதேச முஸ்லிம் மக்கள் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்துவந்த 520 ஏக்கர் விவசாயக் காணி விடுவிப்பு தொடர்பான அம்பாரை மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்களில் முஸ்லிம் சமூகத்தின் காணிகளை விடுவிப்பதாக தீர்மானங்கள் எடுக்கப்பட்ட போதும் இது நடைமுறைப் படுத்தப்படாமல் உள்ளது. அரச அதிபர்களினாலும், காணி அதிகாரிகளினாலும் பல கூட்டங்கள் நடாத்தப் பட்டும் முஸ்லிம் சமூகத்திற்கு சொந்தமான இக் காணிகள் இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ளது. இது குறித்து இப் பிரதேசமக்கள் நீண்ட காலமாக பெரும் அதிருப்தியுடன் உள்ளனர்.
இந்த விடயத்தில் மாகாண காணி அமைச்சர் திருமதி ஆரியவதி கலப்பதி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக் காலம் இறுதி வருடத்தில் சென்று கொண்டிருக்கின்றன. எனவே, அமைச்சர்கள் வேகமாக செயல்பட்டு கிழக்கு மாகாண மக்களின் முக்கிய பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு முயற்சி செய்யுங்கள். இன்னும் ஒருவருடம் சென்றால் நீங்களும் முன்னாள் அமைச்சராகிவிடுங்கள் என்பதனை மனதில் வைத்து நமது கிழக்கு மாகாண மக்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுங்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Comments
Post a comment