அங்குரார்ப்பணமும், சான்றிதழ் வழங்கும் வைபவமும்.


உள்ளக  அலுவல்கள் வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அனுசரணையுடன் நடாத்தப்படும் திறன்  அபிவிருத்தி பாடநெறிகளின் 2016ம் ஆண்டுக்கான அங்குரார்ப்பண வைபவமும் 2015ம் ஆண்டுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் 2016.03.17ஆம் திகதி வியாழக்கிழமை 3.00 மணியளவில் மருதமுனை கலாச்சார மத்திய நிலையத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் 2016ஆம் ஆண்டுக்கான சிங்களம், ஆங்கிலம், சித்திரம், கிராமிய சங்கீதம், கர்னாடக சங்கீதம், பரத நாட்டியம், புதிய நிர்மாணமும் கிராமிய நடனம் மற்றும் முஸ்லீம்களின் கிராமிய கலைகளான பொல்லடி, சீனடி, சிலம்படி, வாள்வீச்சு போன்றனவும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படுவதுடன் 2015இல் சிங்களம், ஆங்கிலம், சித்திரம், கிராமிய சங்கீதம், கர்னாடக சங்கீதம், பொல்லடி ஆகிய பாடநெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது.
மருதமுனை கலாச்சார மத்திய நிலையத்தின் நிலையப் பொறுப்பதிகாரி ஐ.எல்.றிஸ்வான் தலைமையில் நடைபெற இருக்கும் இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட் கனி, விசேட அதிதிகளாக மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் அதிபர் எஸ்.எம்.எம்.அமீர் மற்றும் அல்-மதீனா வித்தியாலைய அதிபர் ஏ.ஆர்.நிஹ்மத்துல்லாஹ் ஆகியோரும் மாணவர்களும், பெற்றோர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
மருதமுனை, றாசீக் நபாயிஸ்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்