முதல் மனிதன் ஆதம் பேசிய மொழி எது?

ஐயமும் தெளிவும்
 
ﻭَﺃُﺩْﺧِﻞَ اﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮا ﻭَﻋَﻤِﻠُﻮا اﻟﺼَّﺎﻟِﺤَﺎﺕِ ﺟَﻨَّﺎﺕٍ ﺗَﺠْﺮِﻱ ﻣِﻦْ ﺗَﺤْﺘِﻬَﺎ اﻷَْﻧْﻬَﺎﺭُ ﺧَﺎﻟِﺪِﻳﻦَ ﻓِﻴﻬَﺎ ﺑِﺈِﺫْﻥِ ﺭَﺑِّﻬِﻢْ ۖ ﺗَﺤِﻴَّﺘُﻬُﻢْ ﻓِﻴﻬَﺎ ﺳَﻼَﻡٌ
இன்னும், எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்திருக்கிறார்களோ அவர்கள் சுவனபதிகளில் புகுத்தப்படுவார்கள். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; தங்கள் இறைவனுடைய அனுமதியைக் கொண்டு அவர்கள் என்றென்றும் அவற்றில் தங்கியிருப்பார்கள் - அங்கு அவர்களுடைய காணிக்கையாவது "ஸலாமுன்” (சாந்தியும் சமாதானமும் உண்டாகுக!") என்பதாகும்.
ஆதம் நபியின் பாசை அறபு என்றும் சொர்க்க‌த்து பாசையாக அற‌பு மொழியே இருந்தது என்றும் நாம் சொல்லும் பொது  ப‌ல‌ரும் அதற்கு ஆதார‌ம் என்ன‌ என‌ கேட்கிறார்க‌ள். மேலேயுள்ள‌ குர் ஆன் வ‌ச‌ன‌மும் ஆதார‌ம்தான். சொர்க்க‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ளின் காணிக்கை வார்த்தை என்பது  ச‌லாமுன் என்று இருக்கும் என‌ அள்ளாஹ்வே சொன்ன‌பின் ம‌னித‌ க‌ருத்துக்கு இட‌மில்லை. சலாமுன் என்ப‌து ஆங்கில‌மோ த‌மிழோ அல்ல‌. அது அற‌பு வார்த்தையாகும்.
ஆக சொர்க்கத்தில் வாழ்ந்த ஆதமும் ஹவ்வாவும் அறபு மொழியே பேசியிருப்பர் என்பது சந்தேகமற தெரிகிறது.

சரி உங்கள் கருத்துப்படி இலங்கையில் ஆதியில் இருந்த இஸ்லாமியர்கள் தான் மதம் மாறி இந்து மற்றும் பௌத்தர்களாக உருவாகினரா? அப்படி என்றால் பெரும்பான்மையாக இருந்த இஸ்லாமியர் இதனை எவ்வாறு ஏற்றுக்கொண்டனர் மற்றும் இவ்வாறு எவ்வாறு மாறினார்கள்? என‌ ஒருவ‌ர் கேட்டுள்ளார்.
பதில்: முஸ்லிம்க‌ள் ம‌த்தியிலேயே சிலை வ‌ண‌க்க‌ம் வ‌ந்த‌து என்ப‌தை குர் ஆன் மிக‌ தெளிவாக‌ கூறுகிற‌து. ஆத‌ம் ந‌பியின் இல‌ங்கை வ‌ழித்தோன்ற‌ல் முஸ்லிம்க‌ள் ம‌த்தியில் வேறு சிந்த‌னைக‌ள் ம‌த‌ங்க‌ள் தோன்றின‌. உதார‌ண‌மாக‌ மனித குலம் வளர்ச்சி பெற்றபின் ம‌க்காவில் முஸ்லிம்க‌ளே வாழ்ந்தார்க‌ள். இப்ராஹீம் ந‌பியினால் அங்கு கஅபா புதுப்பிக்க‌ப்ப‌ட்ட‌ பின்ன‌ர் அவ‌ரது ப‌ர‌ம்ப‌ரை வாழ்ந்த‌து. அவ‌ர்க‌ள் ஓரிறைவனையே வ‌ண‌ங்கி வ‌ந்த‌ன‌ர். பின்ன‌ர் அவ‌ர்க‌ள் ம‌த்தியில் சிலை வ‌ண‌க்க‌ம் புகுந்தது. கஅபாவில் கூட‌ சிலை வைத்த‌ன‌ர். இஸ்லாத்தை மீண்டும் புதுப்பித்த‌ முஹம்ம‌து ந‌பிய‌வ‌ர்க‌ளால் கஅபாவிலிருந்த‌ சிலைக‌ள் உடைத்தெறிய‌ப்ப‌ட்டு மீண்டும் அங்கு ஓரிறைவ‌ன் வ‌ண‌ங்க‌ப்ப‌ட்டான்.
இவ்வாறே ஆதம் நபி காலத்திலிருந்து இல‌ங்கையில் வாழ்ந்த‌ முஸ்லிம்கள் ஓரிறைவ‌னையே அள்ளாஹ்வையே வ‌ண‌ங்கி வ‌ந்த‌ன‌ர். பின்னர் இந்தியாவிலிருந்து வ‌ந்த, இந்தியர்களால் தோற்றுவிக்கப்பட்ட இந்து ம‌த‌ம் அவ‌ர்க‌ளை இந்துக்களாக மாற்றிய‌து. அதே போல் பௌத்த‌மும் இந்தியாவிலிருந்து இற‌க்கும‌தி செய்ய‌ப்ப‌ட்ட‌து. பின்ன‌ர் முஹ‌ம்ம‌து நபிய‌வ‌ர்க‌ளின் வ‌ருகையின் பின் இங்கு வ‌ந்த‌ அற‌பிக‌ள் மூல‌ம் மீண்டும் உண்மையை புரிந்து தாம் ஏற்கனவே இஸ்லாத்தில் இருந்து தவறிப்போனவர்கள் என்பதை புரிந்து அவ‌ர்க‌ள் இஸ்லாத்தை ஏற்ற‌ன‌ர். எனது க‌ருத்துக்கு மிக‌ ப‌ல‌மான‌ ஆதார‌ம்தான இல‌ங்கையின் ஆதிகால‌ வேடுவ‌ர்க‌ள். இவர்கள் இந்துக்க‌ளோ பௌத்த‌ர்க‌ளோ அல்ல‌ என்ப‌தாகும். ஆத‌ம் நபி ப‌ர‌ம்ப‌ரையான‌ அவ‌ர்க‌ளை 2700 வ‌ருட‌மாகியும் பௌத்தர்களாக்க‌ முடிய‌வில்லை.
-முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்