Skip to main content

වේල්ල වීදිය කාන්තා මළ සිරුර : සැකකරු ඇතුළු සැඟවුණු සියල්ල හෙළි වෙයි

   වේල්ල වීදිය කාන්තා මළ සිරුර : සැකකරු ඇතුළු සැඟවුණු සියල්ල හෙළි වෙයි ( ( Photos ) මවිබිම දැන් ම තාරක සම්මාන්  කොළඹ , වේල්ල වීදියේදී ගමන් මල්ලක දමා තිබියදී සොයාගත් හිස නොමැති කාන්තා මළ සිරුර කුරුවිට , තෙප්පනාව ප්‍රදේශයේ පදිංචි 30 හැවිරිදි අවිවාහක කාන්තාවකගේ බවට හඳුනාගෙන තිබේ .  නියෝජ්‍ය පොලිස්පති , පොලිස් මාධ්‍ය ප්‍රකාශක අජිත් රෝහණ මහතා සඳහන් කළේ , අදාළ මළ සිරුර ඩී.එන්.ඒ. පරීක්ෂණයක් සඳහා යොමු කර එය එම කාන්තාවගේ ද යන වග තහවුරු කරගැනීමට කටයුතු කරන බවය . එමෙන් ම , අදාළ ගමන් මල්ල රැගෙන ආ සැකකරු පිළිබඳව ද තොරතුරු අනාවරණය කරගෙන ඇති අතර පොලිස් මාධ්‍ය ප්‍රකාශකවරයා සඳහන් කළේ . සැකකරු බුත්තල පොලිසියට අනුයුක්තව සේය කරන නිවාඩු ලබා සිටි උප පොලිස් පරීක්ෂකවරයෙකු බවය . එම කාන්තාව සමග ඇති කරගත් අනියම් සම්බන්ධතාවයක් හේතුවෙන් ඇති වූ ප්‍රතිඵලයක් ලෙස මෙම ඝාතනය සිදුව ඇති අතර , සැකකරු අත්අඩංගුවට ගැනීමට විශේෂ පොලිස් කණ්ඩායම් යොදවා ඇති බව ද පොලිස් මාධ්‍ය ප්‍රකාශකවරයා සඳහන් කළේය . සැකකරු බඩල්කුඹුර ප්‍රදේශයේ පදිංචිකරුවෙක් බවට පොලිසිය හඳුනා ගෙන තිබේ . කෙසේ වෙතත් , මේ වන විට සැකකරු නිවසින් බැහැරට ගොස් ඇතැයි වාර

முகவரி அற்ற மு.கா தலைமை , அம்பாறையில் நாடகம் நடிக்கிறது : ஹுதா உமர் சாடல்



 
-------------------------------------------------------------------------------- எட்டாக்கனியாக மாறிவரும் அம்பாறையின் அபிவிருத்தியும் உரிமைகளும் என ஒரே சொல்லில் சொல்லிவிட்டுப் போனாலும் அதன் பின்னால் இருக்கும் துன்ப துயரங்களை இந்த வங்கரோத்து அரசியல்வாதிகள் அறிவார்களா என்றால் இல்லை என்றே பதில் வரும். ஒவ்வொரு தேர்தலின் போதும் பிஸ்மி சொல்லி ஆரம்பித்துவிட்டு செய்த்தானின் வேத வசனமும் வீர முழக்கமும் இட்டு அம்பாறை மண்ணின் வாக்குகளை அபகரித்துவிட்டு கண்டியிலும்,கொழும்பிலும் படுத்துறங்கும் திருடர்களுக்கு மக்களின் பிரச்சினைகளை பார்பதற்க்கு நேரமிருக்காது போனதுதான் இங்கு ஆச்சரியம். சொந்த முகவரியில்லாது மறைந்த தலைவரின் புகைப்படத்துடனும் அவரது கவிதைகளினதும் உதவியுடன் எங்கள் மண்ணில் உள்ள கலாநிதிகள் தொடக்கம் பாமரன் வரை காலில் விழுந்து வாக்கு பிச்சைஎடுத்துவிட்டு மக்களை திரும்பிக்கூட பார்க்க மறுக்கும் அரசியல் தலைமைகளுக்கு பாடம் புகட்டும் காலம் கனிந்து வருகிறது என்பதை எச்சரிக்கையாக இங்கு கூறி வைக்க விரும்புகிறேன். அம்பாறை மாவட்டத்தில் உள்ள கீழே தரப்படும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது யார் ?? 01. சுனாமியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாட்டு மக்கள் கொடுத்த உதவியினால் கட்டி முடிக்கப்பட்ட வீட்டு திட்டங்களை எப்போது ? யார் வழங்குவது ?? (முதிர்கன்னிகளின் சாபத்திலிருந்து தப்பி கொள்ளவாவது சாணக்கியம் செய்யுமா?) 02. சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபை தருவதாக கூறி மக்களின் ஆணையை பெற்று பம்மாத்து அரசியல் செய்யும் நீங்கள் ஏன் சாய்ந்தமருதை கணக்கில் எடுப்பதை தவிர்த்து வருகிறீர்கள் (முதலமைச்சர் பதவி,மேயர் பதவி பறிப்பு,இப்படி பல.....) 03. ஒலுவில்,மக்களின் காணிப் பிரச்சினைக்கு நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கை என்ன? (போட்டியான கட்சித்தலைவர் வந்தால் நீங்களும் வந்து கண்காட்சி பாத்து விட்டு பந்தா காட்டிவிட்டு போனதா??) 04. உங்களை நம்பி மண்ணில் இருந்த மன்னனை இழந்து நிற்க்கும் அக்கரைபற்றுக்கு செய்த கைமாறு என்ன? மக்கள் தலைவன் அதாவுல்லாஹ் கொண்டுவந்த சேவைகளையும்,நியமித்த உத்தியோகத்தர்களையும் இடம் மாற்றியதை தவிர...... 05. நீங்களே சாரதியாகவும்,நடத்துனராகவும் இருக்கும் அம்பாறை மாவட்டம் குப்பைகளால் நிரம்பி வழிகிறது. அதிலும் கல்முனை படு மோசம் ... இதற்கான தீர்வுதான் என்ன? 06. உங்கள் கட்சிக்காக போஸ்டர் ஒட்டிவிட்டு பொலிஸும் , கோட்டுமாக அலைந்து விட்டு அரபு தேசம் சென்று சாறாக தனது இரத்தத்தை சிந்தி உழைத்து விட்டு தொழில் இழந்து நாடு திரும்பும் உமது போராளிகளுக்கு நீங்கள் செய்யப்போகும் கைமாறு என்ன? இப்படி அடுக்கப்போனால் பட்டியல் நீண்டு கொண்டே போகுமே தவிர ஆனபலன் எதுவுமில்லை. ஆகவே சிந்தித்து செயலாற்ற வேண்டிய கடமைப்பாட்டில் இருக்கும் இளம் சமுதாய தோழர்களே !! புத்தி ஜீவிகளே !! உங்கள் அறியாமை கண்ணாடியை கலட்டி விட்டு புத்தியுடன் செயலாற்றக்கூடிய இளம் தலைமுறையின் கரங்களில் இந்த தேசத்தை கையளிக்க முன்வாருங்கள். மூத்த பிரஜைகளை ஆலோசகர்களாக கொண்டு புதிய திருப்பு முனையாக நமது தேசத்தை கட்டியெழுப்ப சரியான தலைமையின் கீழே சகல இளம் சமுதாயத்தினரும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது என்பதை சகலரும் நினைவில் கொண்டு செயலாற்ற வேண்டும் என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் தேசிய அமைப்பாளரும்,அல் -மீஸான் அறக்கட்டளை தலைவருமான அல் -ஹாஜ் நூருல் ஹுதா தமது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்

*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்* *(தொடரும்)* 146.23.11.2017அரசாங்க  தேசிய பாடசாலையான கண்டி மகளிர் உயர் பாடசாலைக்குநியமனம் பெற்று சென்ற  முஸ்லிம் ஆசிரியைக்கு பாடம் நடத்தஅதிபர் மறுப்பு வெளியிடப்பட்டது. http://www.madawalanews.com/2017/11/blog-post_373.html 145. காலி – தூவ பிரதேசத்தில் அமைந்துள்ள சமகிவத்தை குடியிடுப்பு பகுதியிலுள்ள முஸ்லிம் நபரொருவரின் வீடொன்றின்  மீது அதிகாலை வேளையில், பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.  http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_912.html 144. 20.11.2017 வவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் அதிகாலை 1.20 மணியளவில் எற்பட்ட தீ விபத்தில் இரு கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதியளவில் எரிந்து சேதமாகியது. http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_180.html 143. 17.11.2017    300க்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் பல குழுக்களாகப் பிரிந்து கிந்தோட்டைக்குப் பிரவேசிக்கும் பாதைகளை எல்லாம் இடைமறித்த வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்குள் பிரவேசித்து இரவு 9.30 மணியளவில் தம

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம் ...................................................................... ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன? அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது? எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது? அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா? சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது? ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட  விளையாட்டு மைதானம்  மதவாக்குள பிரதேசத்திற்கு  அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள்  காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை  ஊருக்கு  அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு  தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313