ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்திக் கூறினார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ, வேரகலவில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தௌிவாவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதுடன், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவுவதாகவும் முற்போக்காக இருப்பதை விட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார். எனினும், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் விக்ரமசிங்க உள்ள
நாடாளாவிய ரீதியில் முஅத்;தீன்கள் மற்றும் இமாம்களுக்கான இலவச உம்ரா வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனத்தெரிவித்த ஹிரா பவுன்டேஷன் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மேலும் 400 பேர் விரைவில் உம்ரா கடமைகளுக்காக மக்காவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா ஹிரா பவுன்டேஷன் ஏற்பாட்டில் 55 வயதுக்கு மேற்பட்ட முஅத்தீன்கள் மற்றும் இமாம்கள் 500 பேருக்கு இலவச உம்ரா வேலைத்திட்டத்தில் நாடாளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 100 பேர் கொண்ட முதல் குழு நேற்று திங்கட்கிழமை உம்ரா கடைமகளுக்காக மக்கா நோக்கி புறப்பட்டனர். அவர்களை வழியனுப்பி வைப்பதற்காக இராஜாங்க அமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஏ.எச்.எம். பௌசி ஆகியோர் கட்டுநாயக்க விமானநிலையத்துக்கு சென்றிருந்தனர்.
இந்நிகழ்வின் போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் பேதே இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது:-
இதுவரைக் காலமும் உம்ரா அல்லது ஹஜ் கடமையை செய்யாத உலமாக்கள் இருப்பார்களாயின் அவர்களுக்கு உம்ரா ஏற்பாடுகளை செய்து கொடுக்க ஹிரா பவுன்டேஷன் முன்வந்துள்ளது. இச்சேவை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் . தெரிவு செய்யப்பட்ட 500 பேர்களில் முதல் 100 பேர் கொண்ட குழுவே இன்று (நேற்று) புனித மக்கா நகர் நோக்கி செல்கின்றனர். மீதமுள்ள 400 பேரும் இன்னும் சில வாரங்களில் அனுப்பி வைக்கப்படுவார்கள். – எனத்தெரிவித்தார்.
Comments
Post a comment