ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்கள் 30ற்கும் மேற்பட்ட வெளிநாட்டு தூதுவர்களுடன் பொலன்னறுவையில்

காதீர் கான்
மினுவாங்கொடை நிருபர்

ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்கள் இலங்கையில் உள்ள 30ற்கும் மேற்பட்ட வெளிநாட்டு தூதுவர்களுடன் பொலன்னறுவையில் உள்ள எல்லை கிராமங்களுக்கு திங்கள் விஜயம் மேற்கொள்கிறார்.மாகன சபைகள் மற்றும் உள்ளுராச்சி சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களின் அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி வெளிநாட்டு தூதுவர்கள் ராஜதந்திரிகள் பொலன்னறுவைக்கு விஜயம் செய்கிறார்.
பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள பல எல்லை கிராமங்களை வெளிநாடுகளின் உதவியுடன் அபிவிருத்தி செய்வதற்கு மகாநா சபைகள் மற்றும் உள்ளுராச்சி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா அவர்கள் நடவடிக்கை எடுத்திருப்பதை முன்னிட்டு ஜனாதிபதி அவற்றை பார்வையிட செல்கிறார்.
(பாகிஸ்தான்,ஐக்கிய அரபுஇராச்சியம்,பாலஸ்தீன்,எகிப்து,பங்களதேஷ்,குவைத், நெதர்லாந்து,சிசல்ஸ் கியுபா தென்னாபிரிக்கா ஜப்பான் ஐரோப்பிய யூனியன்) உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு துதுவர்கள் இலங்கை அபிவிருத்தி பணிகளில் ஈடுபடுவது இதுவே முதல் தடவையாகும்.
ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன, அமைச்சர் பைசர் முஸ்தபா வெளிநாட்டு தூதுவர்கள் பொலன்னறுவை மெதிகிரிய, வெலிகந்த ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் விஜயம் செய்து யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிடுகின்றனர்.
முதலாவதாக மெதிகிறிய பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள மீகஸ்வேவ வாடியவவே கடோபொதான கிராமங்களில் வசிக்கும் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிகின்றனர்.
இதேவேளை பதொகிவேவ சந்தியில் இருந்து பள்ளியகொடள்ள வீதியூடாக இராஜதந்திரிகள் சென்று மக்களை சந்திக்க உள்ளனர். இதேநேரம் இன்று மாலை வெலிகந்தை செயலக பிரிவில் உள்ள மகாவலி தென்ன கிராமம், சிங்கபுர பாடசாலை, குடாபோக்குன முஸ்லிம், தமிழ் கிராம மக்களை சந்தித்து அவர்களது தேவைகளை நிவர்த்தி செய்யும் பல திட்டங்கள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன.

ஐ.ஏ காதீர்கான்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்