ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
கிழக்கிலிருந்து முஸ்லிம் காங்கிரசை துடைத்தெறியாதவரை ஹக்கீமை தலைமை பதவியிலிருந்து இறக்க முடியாது என உலமா கட்சி தலைவர் கலாநிதி முபாறக் மௌலவி தெரிவித்தார். கல்முனையில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடன் நடந்த சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவத். கிழக்கு தலைமயிலான முஸ்லிம் கட்சி என்பதை உலமா கட்சி சொல்லும் போது அதென்ன கிழக்குக்கு ஒரு கட்சி வடக்குக்கு ஒரு கட்சி தெற்குக்கு ஒரு கட்சியா என அரசியல் தெரியாத சிலர் கேட்கின்றனர். இந்த நாட்டில் கிழக்குக்கொரு மாகாண சபை வேறு மாகாணங்களுக்கு சபை என இருப்பது ஏன்? நிர்வாகத்தை இலகுபடுத்தத்தான். அதே போல் கிழக்கு மாகாணம் மட்டுமே முஸ்லிம்களின் ஆளுமைக்குட்பட்டுள்ள மாகாணமாகும். அதனால் கிழக்கு வாக்கு வங்கி மூலம் கிழக்கு மக்களும் நன்மையடைய வேண்டும். கிழக்கில் முஸ்லிம் கட்சி கிழக்கு தலைமையில் பலமாக இருந்தால் பிற மாகாண முஸ்லிம்களுக்கும் அது பலமாக இருக்கும் நாம் கிழக்கு தலைமையிலான கட்சி என்றுதான் சொல்கிறோமே தவிர கிழக்குக்கு மட்டுமான கட்சி என ஒரு போதும்