இட்டுக்கட்டப்பட்ட பொய் என்கிறார் NFGG) தவிசாளரான அப்துர் ரஹ்மான்


--------------------------------------------------------
அமைச்சர் ரிஷாதின் கட்சியில் இணையும் முன்னெடுப்புகளில்.. என்ற தலைப்பில் நான் எனது முகநூலில் வெளியிட் செய்தி தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) தவிசாளரான  அப்துர் ரஹ்மான் கீழ்வரும் குறுஞ்செய்தி ஒன்றினை எனது கைத்தொலைபேசிக்கு அனுப்பி வைத்தார்.

“I heard u have written a baseless and totally fabricated news abt nfgg on ur fb Last nite.  Pl call me urgently ”

இதனையடுத்து அவருடன் தொடர்பு கொண்டு குறித்த பதிவின் எனது பக்க நியாயங்களை அவருக்கு தெரிவித்தேன்.

இருப்பினும் குறித்த அந்தச் செய்தியால் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் நடவடிக்கைகள் தொடர்பில் ஆதரவாளர்கள் தவறான நிலைப்பாட்டைக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

மேலும் குறித்த தகவல் உண்மைக்குப் புறம்பானதும் அடிப்படையற்றதும் என்று தெரிவித்த அவர், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து போட்டியிடவுள்ளதாகவும் இது தொடர்பில் தற்போது இடம்பெறும் மந்திராலோசனைகள் வெற்றியளிக்கும் பட்சத்தில் இருதரப்பு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடவுள்ளதாகவும் என்னால் தெரிவிக்கப்பட்ட தகவல் முற்று முழுக்க இட்டுக்கட்டப்பட்டது என்றும் கூறினார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்