Skip to main content

மஹிந்த கல்முனைக்கு தந்ததை பறிக்கும் நல்லலாட்சி அரசு தலையாட்டி பொம்மைகளான அம்பாரை மாவட்ட முஸ்லிம் எம்பீக்கள்

அஷ்ரப் ஏ சமத்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிலையத்தினை கல்முனையிலேயே தொடா்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டு மென்றால் 100 பெண்கள் தங்கி நின்று உள்ளகப் பயிற்சி வசதிகளைப் பெறக் கூடியவாறு சாதாரணமாக  1 ஸ்டாா் ஹோட்டேல் போன்ற ஒரு வசதியான இடம் ஒன்றை கல்முனை பிரதேசத்தில் பெற்றுத்தருமாறும்  இதனை மாா்ச 1ஆம் திகதிக்கு முன் தங்களுக்கு கடைசி திகதி தருவதாகவும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சா் தலத்தா அத்துக் கோரலா தெரிவித்துள்தாக.  பிரதியமைச்சா் பைசால் காசீமிடம் தெரிவித்தாா்.

மேற்படி கல்முனையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மறைந்த தலைவா்  எம்.எச்.எம் அஸ்ரப் அவா்கள் 19 வருடத்திற்கு முன்பு இதனை கல்முனையில் நிறுவினாா். அதற்காக மருதமுனையைச் சோ்ந்த ஜெமீல் என்பவரையும் முகாமையாளராக கொண்டு அப்போதைய கால கட்டத்தில் அம்பாறை மட்டக்களப்பு பிரதேசத்தில் இருந்து  வெளிநாடு செல்லும் இளைஞா் யுவதிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காகவும்  இதனை நிறுவினாா்.  

மறைந்த தலைவா் அப்போது மவாட்டக் காரியாலயங்கள் அனைத்தும் அம்பாறையில் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று இல்லாது  பரந்த நிலையில் சில காரியாலயங்களை முஸ்லீம் பிரதேசங்களில் நிறுவினாா். அம்பாறையில இருந்து சிங்கள மக்களும் இப்பிரதேசத்திற்கு வந்து தமது அலுவல்கள் செய்ய வேண்டும். அதுவும்  அம்பாறை கரையோர மாவட்டத்தின்  தென்கிழக்கு அலகின் முக வெற்றிலை என்ற எண்னத்தோடு சில அலுவலகங்களை  கரையோற பிரதேசத்தில் நிறுவினாா்.  அதில் நிந்தவூரில் உள்ள தொழிிற்பயிற்சி மாவட்டக் காரியாலயம், இக் காரியலாயமே தெஹியத்தக் கண்டி, தொட்டு பொத்துவில் மருதமுனை வரையிலான தொழிற்பயிற்சி அலுவல்களைக் கொண்டது.  வீதி அபிவிருத்தி உப அலுவலகம், நைட்டா, ஒழுவில் துறைமுகம், விவசாய விஸ்தரிப்பு , உப காரியாலயங்கள், நீர்விநியோக வடிகாலமைப்புச் சபை உப காரயாலயங்கள் ,  போன்ற வற்றைக் குறிப்பிடலாம். அதன் பிறகு முன்னாள் அமைச்சா் பேரியல் அஸ்ரபினால்  கரையோர பிராந்திய சுகாதாரப் பணிமனை, தேசிய வீடமைப்பு கல்முனைக் காரியாலயம், நகர அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனைக் காரியாலயம் போன்ற வற்றினை சுனாமியின்போது கல்முனையில் திறந்து வைத்தாா்.,   

அந்த வகையில் மறைந்த தலைவரினால் இற்றைக்கு 19 வருடத்திற்கு முன் ஆரம்பிக்கப்பட்டதொரு நிலையம் தான் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி நிலையமாகும்.

பிரதியமைச்சா் பைசால் காசீம்  இவ் விடயம் சம்பந்தமாக தகவல் தருகையில்  -

ஏற்கனவே இந்த அரசின் ஆட்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ்  இருந்தே கல்முனை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஒரு இட நெறுக்கடியாகவும் கூடுதல் வாடகை செலுத்தப்பட்டாலும் அங்கு உள்ள ஊழியா்கள், நாளாந்தம் பயிற்சி பெறும் பயிற்சியாளா்களுக்குரிய போதிய இடவசதி அங்கு காணப்படுவதில்லை.  அதற்காக சிறந்த ஒரு இடத்தினை பெற்றுத்தருமாறு அமைச்சா் அத்துக்கோரலா கோரிக்கை விடுத்திருந்தாா்.

அங்கு   மத்திய கிழக்கு , சைப்பிரஸ், சிங்கப்பர், கொரியா போன்ற நாடுகளுக்கு செல்லும் மூவினங்களையும் சாா்ந்த 100 பெண்கள் 2 வாரமாவது  தங்கி நின்று பயிற்சி பெற்றுக் கொள்ளவேண்டும். தங்குமிடம்,  பயிற்சி அரைகள், வகுப்பரைகள், மொழிப்பயிற்சி, இலக்ரோணிக் இயந்திரங்கள் பயிற்சி, மற்றும் அவா்கள் சாதாரண இயற்கையாக தங்கி ஓய்வு பெறக் கூடிய கார்டன் வசதி உள்ள  ஒர் இடத்தைப் பெற்றுத்தாருங்கள் என கூறினாா். 100 பேர் தங்கங் கூடியவாறென்றால் ஒரு ஹோட்டேல் தரத்திலான பயிற்சி நிலையத்ததையே அவா் வேண்டுகின்றாா்.

அன்மையில் பாராளுமன்றத்தில் கல்முனை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிலையம் சம்பந்தமாக அமைச்சா் தலத்தா அத்துக்கோரலவுடன் தலைவா் ஹக்கீம், மற்றும் பிரதியமைச்சா் ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பின மன்சூர் ஆகியோறும் சந்தித்து இடமொன்றை பெற்றுத் தரும்வரை அம்பாறை கொண்டு செல்வததை நிறுத்துங்கள் என சொல்லியிருந்தோம்.  அதன் பின்னா் அமைச்சாரவையில் கூட்டத்தில் சென்ற சமயத்தில் கூட நானும் தலைவா் ஹக்கீம் தலத்தாவுடன் கலந்துரையாடினோம். இவ்விடயமாக அந்த பயிற்சி நிலையத்தினை அங்கு நிலவும் இடப் பற்றாக்குறை பற்றி பிரதமா் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசி உள்ளதாகவும் அமைச்சா தலாத்தா அத்துக்கோரல தெரிவித்தாா்.


அதன் பின் ஒரு சா்ந்தா்பத்தில பிரதமா் ரணில் விக்கிரம சிங்க தலைவா்  ரவுப் ஹக்கீமிடமும்  இப்  பயிற்சி நிலையத்திற்கு உரிய போதிய  இடவசதிகளை கொண்ட இடமொன்றை பெற்றுக் கொடுக்குமாறு  கூறியிருந்தாா்.

இதுவரை 100 பேர் தங்கி பயிற்சி நிலையம், தங்குமிடம், வகுப்ரைகள் ஓய்வு பூங்காவனம் போன்ற வசதிகளை கொண்ட நிலையம் கல்முனையில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை . அமைச்சா் அத்துக் கோரல கேட்டுதற் கிண்ங்க மாா்ச் 1முதலாம் திகதி கடைசி தினமாகும்.  ஆனால் கல்முனை தொட்டு பொத்துவில் வரையிலான பிரதேசங்களில் மிகவும் இட நெறுக்கடியாக மக்கள் வாழ்கின்றனா். ஒரு மாவட்டக் காரியாலயம் பெறும் போது அரசாங்கத்தின் சட்ட திட்டங்கள், அவா்களது கட்டடவரைபுகள், வாகன தரிப்பிடம், ஒய்வரைகள், பய்ச்சி பட்டரைகள் நடாத்தக் கூடிய வசதிகள் போன்ற அலுவலங்களை எமது பிரதேசத்தில் உடனடியாக பெற்றுக் கொள்ள முடியாமல் உள்ளது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய