முஸ்லிம் கூட்டமைப்பில், இணையத் தயார் - அப்துர் ரஹ்மான்


(ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்)

இலங்கை முஸ்லிம் முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ள முஸ்லிம் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயாராகவிருப்பதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

முஸ்லிம் அரசியல் சக்திகளை உள்ளடக்கி உருவாக்க திட்டமிட்டுள்ள முஸ்லிம் கூட்டமைப்புக்கு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக தொலைபேசி மூலமாக உரையாடிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அப்துர் ரஹ்மான் மேலும் கூறியதாவது,

முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படுவது அவசிமானது. விட்டுக்கொடுப்புடனும், பரஸ்பர புரிந்துணர்வுடனும் செயற்பட நாங்கள் தயாராகவுள்ளோம் என்பதை வெளிப்படை தன்மையுடன் அறியத்தருகிறேன்.

தேசிய விவகாரங்களில் முஸ்லிம் அரசியல் தலைமைகள், அமைப்புக்கள் ஒன்றுசேருவது தற்போதைய சூழ்நிலையில் இன்றியமையாத விடயமாகும். எனவே இதற்கு பூரண ஒத்துழைப்பு நல்குவோம்.

தேசிய விவகாரங்களில் முஸ்லிம் விவகார நலன்கள் தொடர்பில் ஒன்றுபட்டு பலமிக்க முஸ்லிம் கூட்டமைப்பின் பங்களிப்பு அவசியத் தேவை எனவும் இதன்போது அப்துர் ரஹ்மான் மேலும் சுட்டிக்காட்டினார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்