நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் அமைச்சர் ரிஷாதின் கட்சியில்

அமைச்சர் ரிஷாதின் கட்சியில் இணையும் முன்னெடுப்புகளில்..
---------------------------------------------------------------------------------------------
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளரான மீரா எஸ்.இஸ்ஸதீன் தலைமையில் அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்களாக கருதப்படும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த பலர் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனைச் சந்தித்துள்ளனர்.

இதன்போது தாங்கள் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கட்சியின் வெற்றிக்காக பாடுபடப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இவர்கள் உத்தியோகபூர்வமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் சேர்ந்து கொள்வது தொடர்பான வைபவம் ஒன்றை அக்கரைப்பற்றில் அல்லது கொழும்பில் விரைவில் நடத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களை தவிசாளராக கொண்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் (NFGG)  எதிர்வரும் மாகாண, உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து போட்டியிடவுள்ளதாகவும் இது தொடர்பில் தற்போது இடம்பெறும் மந்திராலோசனைகள் வெற்றியளிக்கும் பட்சத்தில் இருதரப்பு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடவுள்ளதாகவும் நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்