Skip to main content

பெண் விருத்த‌சேத‌ன‌ம் சுன்ன‌த்

பெண் விருத்த‌சேத‌ன‌ம் சுன்ன‌த் என்ப‌தை இக்க‌ட்டுரை ம‌றுக்கிற‌து. ஆனால் அது சுன்ன‌த்தான‌ ந‌டைமுறை என்ப‌தையே ந‌பிய‌வ‌ர்க‌ளின் வேறு ஹ‌தீஸ்க‌ள் சொல்கின்ற‌ன‌. பெண் விருத்தசேதனமும், இஸ்லாமும்


  • முஅல்லிம்
Circumcision பெண் விருத்தசேதனம் தொடர்பான விடயமானது முஸ்லிம் பிரதேசங்களில் மிகக் கணிசமான அளவு ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக முஸ்லிம் சமூகங்கள் பெரியளவில் வாழும் ஐரோப்பிய நாடுகளில் மேற்படி செயன்முறை தோற்றுவித்துள்ள பாதிப்பான எதிர்விளைவுகளும், கண்டனங்களுமே இத்தகைய நிலைமைக்கு பிரதான காரணங்களாகும். குறிப்பாக ஆபிரிக்காவைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் தொலைக்காட்சியில் தோன்றி இந்த விருத்தசேதனம் செய்யப்படும் விதத்தினையும், அது இஸ்லாமிய சட்டத்தில்விதந்துரைக்கப்பட்டுள்ளது என்பதையும் கலந்துரையாடியதன் பின்னரே இந்த அவதானம் பெருமளவு அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த சில நாடுகளில் இந்த செயன்முறை பெண்களுக்கு தீங்கினை விளைவிக்கின்றது, அவர்களது உரிமைகளை மீறுகின்றது எனும் அடிப்படைகளில் பெண் விருத்த சேதனத்தைத் தடைசெய்யும் வகையிலான சட்டங்கள் உருவாக்கப்பட்டன.
இஸ்லாத்திற்கு முந்திய அரேபியா:
இந்த செயன்முறையினை இஸ்லாத்தின் போதனைகளின் அடிப்படையில் ஆராய்வதற்கு முன்பு, சிறுமிகளுக்கு விருத்தசேதனம் செய்யும் வழக்கமானது புராதன காலத்திலிருந்தே ஆபிரிக்காவின் சில பகுதிகளில் குறிப்பாக எகிப்து, மத்திய சூடான், அவற்றைச் சூழ்ந்த பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்ததனை நாம் கவனத்திற் கொள்ளுதல் வேண்டும்.
இந்தப் பிரதேசங்களில் தற்போது நடைமுறையிலுள்ள பெண் விருத்தசேதனமுறை ‘பிர்அவ்னிய விருத்தசேதன முறை’ ஆகும். அத்துடன் இந்த சமூகங்களிலுள்ள ஆண்கள், பெண்களது கற்பினை உறுதிப்படுத்துவதற்காக அவர்களது பாலியல் ஆர்வத்தை பலவீனப்படுத்தும் வகையில் இந்த செயன்முறையினை மேற்கொள்ள ஆர்வம் கொண்டுள்ளனர் என்பதே இதற்கான காரணம் எனத் தோன்றுகிறது.
Circumcision
அவ்வாறே, இந்த செயன்முறையானது எகிப்தில் இருந்து அயல் அறபு நாடுகளுக்கும் பரந்து அங்கும் சில சந்தர்ப்பங்களில் செயற்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும். அல்லது, வழக்காறுகள் ஒரு சமூகத்திலிருந்து இன்னுமொரு சமூகத்துக்குப் பரவக்கூடியன எனும் வகையில் இஸ்லாத்துக்கு முந்தைய அரேபியாவில் இச்செயன்முறையினை அறேபியர் அறிந்தும் இருக்கலாம். ஆயினும், இஸ்லாத்துக்கு முன்னைய அரேபியர்கள் தங்களது பெண்குழந்தைகளுக்கு விருத்தசேதனம் செய்யும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர் என்பதற்கான எதுவித நிரூபிக்கக்கூடிய சான்றுகளையும் என்னால் காண முடியவில்லை. அவர்களிடம், தமக்கு இழிவைக் கொண்டு வருவர் எனும் பயத்தினால் பெண்குழந்தைகளைக் கொலை செய்யும் வழக்கம் காணப்பட்டதனையே காணலாம். ஆனால் அவர்களிடம் பெண்விருத்தசேதனம் செய்வதற்கான எதுவித தேவையும் இருக்கவில்லை.
பெண் விருத்தசேதனம் தொடர்பாக சுன்னாவில் வந்திருப்பவை:
பெண் விருத்தசேதனம் தொடர்பாக நபி முகம்மது (ஸல்) அவர்கள் தெரிவித்ததாகக் கூறும் சில அறிவிப்புக்கள் காணப்படுகின்றன. அவற்றுள் பின்வருவன மிக முக்கியமானவை ஆகும்.
1.”விருத்தசேதனம் செய்வது ஆண்களுக்கு ‘சுன்னத்’ ஆகும். பெண்களுக்கு கௌரவமான செயல் ஆகும்.” (முஸ்னத் அஹ்மத் – 19794)
இப்னு ஹஜர் அல் அஸ்கலானி அவர்கள் தனது, அத்தல்ஹீசுல் ஹபீர் (4/1407) எனும் நூலில் பின்வருமாறு ஆய்வுசெய்கிறார்: இமாம் அஹ்மத் அவர்களும், இமாம் பைஹகீயும் இதனை அல் ஹஜ்ஜாஜ் பின் அர்அத் என்பவரிடமிருந்து அறிவிக்க அவரோ அதனை அபூ அல் முலைஹ் இடமிருந்தும், அவர் உஸாமாவிடமிருந்தும், அவர் தனது தந்தையிடமிருந்தும் அறிவித்துள்ளனர்.
இந்த அல் ஹஜ்ஜாஜ் என்பவர், தனது அறிவிப்பாளர் தொடரில்; தெளிவற்ற வார்த்தைப் பிரயோகங்களை உபயோகிப்பவர் என அறியப்படுகிறார். மேலும் அவருடைய இந்த அறிவிப்பில்; ஒத்திசைவில்லாத தன்மை காணப்படுகிறது. சில வேளைகளில் அவர் தனது அறிவிப்பாளர் வரிசையை மேலுள்ளவாறும், இன்னும் சில சந்தர்ப்பங்களில் அபூ முலைஹ் உடைய தந்தையின் பின்னர் ஷிதாத் பின் அவ்ஸ் எனும் பெயருடைய மேலதிக அறிவிப்பாளர் ஒருவரையும் சேர்த்து குறிப்பிடுகிறார். இவ்வாறு அறிவிக்கப்படும் இந்த ஹதீஸினை முஸன்னப் இப்னு அபீ ஷைபா, இப்னு அபீ ஹாதிம் உடைய இலல், முஃஜமுத் தபறானீ அல் கபீர் ஆகிய கிரந்தங்களில் காணுகிறோம்.
இன்னும் சில சந்தர்ப்பங்களில் இவர் இந்த ஹதீஸினை மக்ஹூலிடமிருந்தும், அவர் அபூ அய்யூப் இடமிருந்தும் கிடைக்கப்பெற்றதாக அறிவிக்கின்றார். இத்தகைய அறிவிப்பினை முஸ்னத் அஹ்மதில் காணலாம். இப்னு அபீ ஹாதிம் அவர்கள் இதனை ‘அல் இலல்’ எனும் கிரந்தத்தில் குறிப்பிடுவதுடன், தனது தந்தை இந்த பிழைக்கான தவறினை ஒன்று அல் ஹஜ்ஜாஜின் மீதோ அல்லது அவரிடமிருந்து அறிவிப்புச் செய்யும் அப்துல் வாஹித் பின் ஸியாத் என்பவரின் மீதோ சுமத்துவதாக குறிப்பிடுகின்றார். இமாம் அல் பைஹகீ அவர்களோ, அப்துல் வாஹித் பின் ஸியாத் பற்றிக் கூறும் போது, ‘அவர் ஒரு பலவீனமான அறிவிப்பாளர் எனவும், அவரது அறிவிப்புக்கள் பரிபூரணமற்றவை’ எனவும் குறிப்பிடுகின்றார்.
‘அல் தம்ஹீத்’ எனும் நூலில் இப்னு அப்துல் பர் அவர்கள், ‘இந்த ஹதீஸானது அல் ஹஜ்ஜாஜ் பின் அர்தஹ் என்பவரது அறிவிப்பினை அடிப்படையாகக் கொண்டது. அவரது அறிவிப்புக்களை எதற்கும் ஆதாரமாகக் கொள்ளப்பட முடியாது’ எனக் குறிப்பிடுகின்றார்.
உண்மையில், இந்த ஹதீஸானது அல் ஹஜ்ஜாஜ் இப்னு அர்தஹ் என்பவர் அல்லாத இன்னுமொரு அறிவிப்பாளராலும் அறிவிக்கப்படுகின்றது. இந்தக் கூற்றானது, முஃஜம் அல் தபறானீ அல் கபீர், சுனன் அல் பைஹகீ ஆகிய கிரந்தங்களில் இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிப்பதாக குறிப்பிடப்படுகிறது. ஆயினும், அல் பைஹகீ அவர்களே இதனை, சுனன் அல் பைஹகீ எனும் தனது ஹதீஸ் கிரந்தத்தில், ‘இது ஒரு பலவீனமான ஹதீஸ்’ என குறிப்பிடுகிறார். இன்னும் தனது, ‘அல் மஃரிபா’ எனும் ஆய்வில்,: “இது நபி (ஸல்) அவர்களது ஆதாரபூர்வமான ஒரு கூற்று அல்ல” என குறிப்பிடுகிறார். எனவே, இது ஓர் பலவீனமான ஹதீஸாகும்.
2. ஒரு முறை நபி (ஸல்) அவர்கள், ஒரு இளம் பெண் சிறுமிக்கு விருத்த சேதனம் மேற்கொள்ளும் ஒரு பெண்ணைக் கடந்து செல்லும் போது, “(தேவைக்கு மேற்பட்டவற்றை) அகற்றுவாயாக. ஆனால் ஆழமாக வெட்டி விடாதே. ஏனெனில் இது (சிறுமியின்) முகத்துக்கு பிரகாசமாகவும், கணவனுக்கு மிகச் சாதகமானதாகவும் அமையும்.” என அறிவுறுத்தியாக அறிவிக்கப்படுகிறது.” (முஃஜம் அத் தபறானீ அல் அவ்ஸத் -2274)
இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ அவர்கள், இந்த ஹதீஸினையும் தனது ‘தல்ஹீசுல் ஹபீர்’ (4/1407-1408) எனும் நூலில் ஆய்வு செய்கிறார். அல் ஹாகிம், தனது அல் முஸ்தத்ரக் எனும் நூலில் இதனை அப்துல் மலிக் பின் உமைர் இருந்து கேட்டதாகவும், அவருக்கு ஸைத் பின் அபீ உஸைத் அறிவித்ததாகவும், அவருக்கு அழ் ழஹ்ஹாக் பின் கைஸ் பின்வருமாறு அறிவித்ததாக பதிவு செய்துள்ளார். அதாவது மதீனாவில் உம்மு அதிய்யா எனப்படும், அடிமை பெண் சிறுமிகளுக்கு விருத்தசேதனம் ஒரு பெண் இருந்ததாகவும், அந்தப் பெண்மணிக்கு நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதாகவும் தெரிவிக்கிறார். ‘உம்மு அதிய்யாவே! “(தேவைக்கு மேற்பட்டவற்றை) அகற்றுவாயாக. ஆனால் ஆழமாக வெட்டி விடாதே. ஏனெனில் இது (சிறுமியின்) முகத்துக்கு பிரகாசமாகவும், கணவனுக்கு மிகச் சாதகமானதாகவும் அமையும்.”
இவ்வாறே அபூ நுஐம் மூலம் ‘அல் மஃறிபா’ எனும் நூலில் தபறானியால் அறிவிக்கப்படுகிறது. இன்னும், அல் பைஹகீ மூலம் இதே அறிவிப்பாளர் தொடர்வரிசையானது, அறிவிப்பாளரான உபைதுல்லா பின் அம்ர் இல்லாமல், ‘கூபாவைச் சேர்ந்த ஒரு மனிதனிடமிருந்து, அவருக்கு அப்துல் மலிக் பின் உமைர் அறிவித்ததாக பதிவாகியுள்ளது.
அல் முப்ழில் அல் உலைல் கூறுகிறார். ‘நான் இப்னு மஈனிடம் இந்த ஹதீஸ் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர், ‘அதனுடைய அறிவிப்பாளர் அழ் ழஹ்ஹாக் பின் கைஸ் என்பவர் ‘அல் பஹ்ரியைப் சேர்ந்தவரல்ல’ எனக் கூறினார்.
ஆயினும்,அல் ஹாகிம், அவர்களும் அபூ நுஐம் அவர்களும் இவரை ‘அல் ப(f)ஹ்ரி ‘உடைய சுயவிபரக் குறிப்பின் கீழேயே கலந்துரையாடுகின்றனர்.
இந்த ஹதீஸ் பற்றிய அறிவிப்பில் அப்துல் மலிக் பின் உமைர் என்பவர் ஒத்திசைவற்ற வராகவே அமைந்துள்ளார். சில சந்தர்ப்பங்களில் மேலுள்ளவாறு அந்த ஹதீஸ் பதிவுசெய்யப் பட்டுள்ளது. இன்னும் சில சந்தர்ப்பங்களில், அவர் அதிய்யா அல் குறஷி இடமிருந்து இந்த வார்த்தைகளைக் கொண்டு தொடங்குவதாக இந்த ஹதீஸினை அறிவிப்பதாகக் கூறப்படுகிறது. ‘மதீனாவில், உம்மு அதிய்யா எனப்படும், விருத்தசேதனத்தை மேற்கொள்ளும் ஒருவர் இருந்தார்……………..”. இந்த வகையிலேயே அல் மஃரிபாவில் அபூ நுஐம் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில சந்தர்ப்பங்களில், உம்மு அதிய்யாவை ஒரு அறிவிப்பாளராக (இச்செயலை மேற்கொள்பவராக அல்லாமல்) கொண்டு அவர் அறிவிப்பதாக கூறப்படுகின்றார். இவ்வாறே சுனன் அபீதாவூதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
(சுனன் அபூதாவூதில் (5271)) இமாம் அபூ தாவூத் அவர்கள், அறிவிப்பாளர் முகம்மது பின் ஹஸ்ஸான் தொடர்பாக, ‘முகம்மது பின் ஹஸ்ஸான் ஒரு அறிமுகமில்லாத அறிவிப்பாளர், இந்த ஹதீஸ் பலவீனமானது’ எனக் கூறி, இந்த ஹதீஸ் குறைபாடுடையது என பிரகடனப் படுத்துகிறார்.
முகம்மது பின் ஹஸ்ஸான் என்பவர் ஒரு அறிமுகமில்லாத அறிவிப்பாளர் எனும் அபூ தாவூதின் தீர்ப்பினையே இப்னுல் அதீ அவர்களும், அல் பைஹகீயும் உறுதிப்படுத்துகின்றனர். ‘இத்ஆஉஷ் ஷக்’ எனும் நூலின் ஆசிரியரான அப்துல் கனி பின் சஈத், ‘அவர் முகம்மது பின் சஈத் அல் மஸ்லூப்’ எனக் கூறி இக்கருத்துடன் உடன்படவில்லை. மேலும் அவர் இந்த ஹதீஸினை முகம்மது பின் சஈத் அல் மஸ்லூப் இடமிருந்து அந்த அறிவிப்பாளருக்குரிய அவரது சுயசரிதையின் கீழேயே பதிவு செய்கின்றார்.
இந்த ஹதீசுக்கான மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் காணப்படுகின்றன.
1.​ஸாலிம் பின் அப்துல்லா பின் உமர் அவர்களிடமிருந்து இப்னு அதிய் அதனை அறிவிப்புச் செய்கின்றார். அப்துல்லாஹ் பின் உமர் அவர்களிடமிருந்து நபி முகம்மது (ஸல்) அவர்கள் கூறக் கேட்டதாக நாபிஃ கூறுவதை அல் பஸ்ஸார் அறிவிக்கின்றார்கள்: ‘மதீனாப் பெண்களே! அதனை (பெண் விருத்தசேதனத்தை) இலேசாக கத்தரிப்பதை மேற்கொள்ளுங்கள். ஆனால் ஆழமாக வெட்டி விடாதீர்கள்.
ஏனெனில் அது உங்களது கணவன்மாருக்கு சாதகமானதாக அமையும். மேலும், அல்லாஹ்வின் அருளை மறுத்து விடாதீர்கள்.’ இந்த வார்த்தைப் பிரயோகம் அல் பஸ்ஸார் அவர்களுக்கு உரியதாகும். அல் பஸ்ஸாருடைய அறிவிப்பாளர் தொடர் வரிசையில் மந்தல் பின் அலீ எனப்படும் பலவீனமான அறிவிப்பாளர் ஒருவர் காணப்படுகின்றார். இப்னு அதிய் உடைய அறிவிப்பாளர் தொடர் வரிசையில் மேலும் பலவீனமான அம்ர் அல் குறஷி எனும் அறிவிப்பாளர் காணப்படுகின்றார்.
2.​அல் முஃஜம் அல் ஸஈரில் அதனை அல் தபறானீ அறிவிப்பதோடு, இப்னு அதிய்யும் அதனை அபீ கலீபா அவர்கள் முகம்மது பின் ஸலாம் அல் ஜம்ஹி இடமிருந்தும், அவர் ஸைதா பின் அபீ றுக்காத் இடமிருந்தும், அவர் ஸாபித் இடமிருந்தும், அவர் அனஸ் (றழி) அவர்களிடமிருந்தும் சுனன் அபீ தாவூதில் இருப்பது போன்ற வார்த்தை அமைப்பினை அறிவிக்கப்படுகின்றது.
இந்த அறிவிப்பாளர் வரிசை தொடர்பாக, இப்னு அதிய் பின்வருமாறு கருத்துத் தெரிவிக்கின்றார்:’ஸாபித் இடமிருந்து அவரது ஹதீஸை அறிவிக்கும் ஒரேயொரு அறிவிப்பாளர் ஸைதா மாத்திரமே ஆவார்.’
அல் தபறானீ கூறுகிறார்: ‘இவ்வாறு அறிவிக்கும் ஒரேயொருவர் முகம்மது பின் ஸலாம் மாத்திரமே ஆவார்”.
தஃலப் அவர்கள் கூறுகின்றார்கள்:’ நான் எனக்கு நேர் முன்பதாக, முகம்மது பின் ஸலாம் உடனிருந்த சில மனிதர்களுள் யஹ்யா பின் மஈன் அவர்களையும் கண்டேன்.’ அவரிடம் இந்த ஹதீஸைப் பற்றி அவர்களிடம் கேட்டார்கள்.
ஸைதாவைப் பற்றி இமாம் புஹாரி அவர்கள்:’ அவரது ஹதீஸ்கள் தவறானவை ஆகும்’ எனக் குறிப்பிடுகின்றார்கள்.
மேலும் இப்னு மந்திர் அவர்கள்: ‘விருத்தசேதனம் சம்பந்தமாக நம்பத்தகுந்த அறிவிப்புக்களோ, அல்லது பின்பற்றத் தகுந்த அறிவிப்பாளர் தொடர்வரிசையோ இல்லை’ என குறிப்பிடுகின்றார்.
நைலுல் அவ்தார் கிரந்தத்தில், (1/137-139), அல் ஷவ்கானீ அவர்கள், மேலே இப்னு ஹஜர் அவர்கள் கூறுவது போன்றே அதனுடைய பலவீனம் தொடர்பாக அடிப்படையாக இதே விடயங்களையே குறிப்பிட்டு, உம்மு அதிய்யா உடைய ஹதீஸ் தொடர்பாக கலந்துரையாடுகின்றார்கள்.
இஸ்லாமிய மார்க்க சட்ட அறிஞர்களது கருத்துக்கு ஏற்ப பெண் விருத்தசேதனம்:
பெண் விருத்தசேதனம் தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்களின் பலவீனத்தன்மை காரணமாகவும், அவற்றின் அறிவிப்பாளர் தொடர் வரிசையில் உள்ள சில அறிவிப்பாளர்கள் ஏமாற்று பற்றி அறியப்பட்டவர்களாக இருப்பதுடன், மற்றவர்களது அறிவிப்புக்கள் எதுவித பெறுமானம் அற்றவையாகவும் இருப்பதனால், இந்த விடயத்தின் சட்டபூர்வத்தன்மை குறித்து இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் பரந்த கருத்து வேறுபாட்டினைக் கொண்டுள்ளனர்.
ஹனபி சிந்தனைப் பிரிவில் (மத்ஹபில்) இரு வேறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன. சில ஹனபி மார்க்க அறிஞர்கள் அதனை பெண்களுக்கான சுன்னா எனக் கருதுகின்றனர். மேலும் சிலர் அதனை வெறுமனே பெண்களுக்கான ஒரு மரியாதைக்குரிய செயல் எனக் கருதுகின்றனர். (அல் பதாவா அல் ஹிந்திய்யா மற்றும் அல் இக்தியார் லி தஹ்லீல் அல் முக்தார் ஆகிய நூல்களைப் பார்க்க)
மாலிகி சிந்தனைப் பிரிவில் (மத்ஹபில்) பெண்களுக்கு இது ஓர் விரும்பத்தகுந்த செயலாகக் (மந்தூப்) கருதப்படுகின்றது. இந்தத் தீர்ப்புக்கென அவர்கள் உம்மு அதிய்யாவுடைய ஹதீஸை ஆதாரமாகக் கொள்கின்றனர். (புல்கதுஸ் ஸாலிக் லி அக்றபில் மஸாலிக் மற்றும் அஸ்ஹல் அல் மதாரிக் ஷரஹ் இர்ஷாத் அல் ஸாலிக் ஆகிய கிரந்தங்களைப் பார்க்க.)
ஷாபிஈ சிந்தனைப் பிரிவில் (மத்ஹபில்) விருத்தசேதனமானது ஆண்களுக்கும், பெண்களுக்கும் கட்டாயமான ஒன்றாகக் கொள்ளப்படுகின்றது. இது அந்த மத்ஹபின் உத்தியோகபூர்வமான தீர்ப்பும் ஆகும். சில ஷாபிஈ மார்க்க அறிஞர்கள் விருத்தசேதனமானது ஆண்களுக்கு கட்டாயமானதும், பெண்களுக்கு சுன்னத் மாத்திரமே ஆகும் எனும் கருத்தை வெளிப்படுத்துகின்றனர்.(அல் மஜ்மூஉ எனும் கிரந்தத்தைப் பார்க்க).
ஹன்பலி சிந்தனைப் பிரிவில் (மத்ஹபில்) விருத்தசேதனமானது ஆண்களுக்கு கட்டாயமானதும், பெண்களுக்கு வெறுமனே மரியாதைக்குரிய செயலாகும் எனவும் கொள்ளப்படுகின்றது. அது பெண்களுக்கு கட்டாயமானதல்ல. ‘இதுவே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும். இமாம் அஹ்மத் அவர்கள் இது ஆண்களுக்கு மிகக் கட்டாயமானது எனக் குறிப்பிடுகின்றார். (அல் முஃனீ (1/115)
தற்கால சட்ட அறிஞர்களுள் அல் ஸையித் ஸாபிக் அவர்கள் பின்வருமாறு எழுதுகின்றார்கள்: ‘பெண் விருத்தசேதனம் பற்றிக் குறிப்பிடும் அனைத்து ஹதீஸ்களுமே பலவீனமானவையாகும். அவற்றுள் எதுவுமே ஆதாரபூர்வமானதல்ல.’(பிக்ஹ் அல் ஸூன்னா – 1/36)
முடிவுரை:
பெண் விருத்தசேதனமானது இஸ்லாத்தின் போதனை சார்ந்த ஒரு விடயம் என்பதை விட கலாச்சார செயன்முறையாகவே காணப்படுகின்றது. இந்த செயன்முறை தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்கள் யாவுமே பலவீனமானவை என்பதைக் கண்டுள்ளோம். எகிப்திலும், மத்திய சூடான் பிரதேசத்திலும் இன்று வரை இச்செயன்முறை காணப்படுவதானது, பிர்அவ்ன் மன்னர்களின் ஆட்சிக் காலப்பகுதியில் இருந்தே தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த பழக்கம் என்பதைக் காட்டுகின்றது. மிகவும் ஆழமாக ஊடுருவிய வழக்கங்களையும், கலாசார செயன்முறைகளையும் மக்களால் இலகுவில் கைவிட்டுவிடுவது கடினமானதாகும். அவை ஒரு சந்ததியிலிருந்து மற்றொரு சந்ததிக்கு எடுத்துச் செல்லப்பட்டுக்கொண்டே வருகின்றன.
இவ்வாறாக வழக்காறுகள் விடப்படாமல் பின்பற்றப்பட்டு வருவதற்கான இன்னுமொரு உதாரணம், இந்திய முஸ்லிம்கள் மத்தியில் பின்பற்றப்படும் மணமகள் தரப்பினர் மணமகனுக்காக வழங்கும் சீதனமாகும். இவ்வழக்கமானது, இஸ்லாம் தவறு எனப் பிரகடனப்படுத்தும், இஸ்லாத்துக்கு முன்பதான ஒரு இந்திய வழக்கமாகும். இஸ்லாம் கணவனையே மனைவிக்கு சீதனம் வழங்குமாறு பணிக்கிறது. ஆயினும், இந்தியாவில் இஸ்லாமிய வரலாறு பல நூற்றாண்டுகளைக் கடந்து செல்கின்றபோதும், இவ்வழக்கம் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் இன்று கூட பின்பற்றப்பட்டு வருவதனைக் காணலாம்.
இவ்வாறே, பெண்களது உரிமைகளை வரையறுக்கும், அவர்களது உரிமைகளை மறுக்கும் பல்வேறுபட்ட, இஸ்லாத்துக்கு முன்பதான வழக்கங்களுக்கு இஸ்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மனிதர்கள் ஒருவர் மற்றவரது வம்சாவளியினைக் கூறி கண்டிக்கும் செயன்முறையினையும் தடைசெய்துள்ளது. மேலும் மரணச் சடங்குகளின் போது, ஓலமிட்டு அழும் வழக்கத்தையும் இஸ்லாம் முடிவுறுத்தி உள்ளது. ஆயினும், இவ்வழக்கங்கள் சில முஸ்லிம் சமுதாயங்களில் இன்றும் பின்பற்றப்பட்டு வருவதனையும், அச் சமுதாயங்கள் இப்பழக்கவழக்கங்களை இஸ்லாமிய சட்டத்தின் ஒரு பிரதான பகுதியாகக் கருதிக் கொண்டு இருப்பதனையும் நாம் காணலாம்.
ஷாபிஈ மத்ஹபானது அதன் ஆரம்ப காலப்பகுதியில் இருந்தே, எகிப்தில் பின்பற்றப்பட்டு வருவதனைக் காணலாம். எனவே, அம் மத்ஹபின் அறிஞர்கள், அப்பிரதேசத்தில் நிலவிய கலாசாரத்தின் செல்வாக்குக்கு உட்பட்டு பெண் விருத்தசேதனம் கட்டாயமானது எனும் கருத்தினை வலியுறுத்தி இருக்க முடியும்.
ஆரம்ப கால ஸலபுஸ் ஸாலிஹீன்கள் மத்தியில் இவ்வழக்கம் பரந்து காணப்பட்டமைக்கான எதுவித ஆதாரமும் இல்லை. மேலும், இஸ்லாம் ஆரம்பமாக அறிமுகமான மக்கா, மதீனா, அதன் சுற்றுப்புற அறேபிய பிரதேசங்களில் இவ்வழக்கம் பின்பற்றப்படவும் இல்லை. அது மிக மிக அரிதாகவே காணப்பட்டது. உண்மையிலேயே, பெண் விருத்தசேதனமானது இஸ்லாமிய சட்டங்களால் வலியுறுத்தப்பட்டிருப்பின், அது அப்பிரதேசங்களில் முழுமையாகப் பின்பற்றப்பட்டு இருக்கும். இயற்கை இயல்பின் (பித்றா) அடிப்படையிலான ஆண் விருத்தசேதனமே, ஆதாரபூர்வமான சான்றுகளின் அடிப்படையில் பின்பற்றப்பட்டு வந்துள்ளது.
எனவே, நாம் பெண் விருத்த சேதனமானது வெறுமனே ஒரு கலாசார வழக்கமே ஆகும், அதற்கென குறிப்பிட்ட இஸ்லாமிய தீர்ப்புக்கள் எதுவும் இல்லை, மேலும் அது தீர்மானபூர்வமான எழுத்துவடிவ சான்றுகளால் உறுதிப்படுத்தப்படவும் இல்லை எனும் முடிவுக்கு வரலாம். அது, அதனைச் செயற்படுத்தும் பிரதேசங்களில் உள்ள ஒரு கலாசார வழக்கமே ஆகும். மேற்படி செயன்முறைக்கு உட்படும் சிறுமிகள் பாதிப்பான விளைவுகளுக்கு உட்படுகின்றனர் எனும் மருத்துவ நிபுணர்களின் கருத்துக்களையும் கவனத்திற் கொள்ளுதல் வேண்டும். எனவே, இவ்வழக்கத்தினைத் தொடர்ந்து மேற்கொள்ள அனுமதித்தல் கூடாது. இஸ்லாமிய சட்டத்தில் ஒரு தனிமனிதனது வாழ்வு, உடல் ஆரோக்கியம் என்பவற்றைப் பேணிப் பாதுகாப்பது சட்டரீதியான தேவைப்பாடு ஆகும். இந்த சட்டரீதியான தேவைப்பாட்டினை மறுதலிக்கும், மனிதனுக்கு தீங்கினை விளைவிக்கும் எந்தவொரு செயலும் சட்டரீதியற்றது ஆகும்.
அல்லாஹ் மிகவும் அறிந்தவன்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய