முஸ்லிம் மக்கள் கூட்டமைப்பு கூட்டம் எதிர் வரும் சனிக்கிழமை

முஸ்லிம் மக்கள் கூட்டமைப்பு அல்லது முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு என்பது உலமா கட்சியின் நீண்ட கால அழைப்பாகும். ஆனாலும் வடக்கு கிழக்கை மையப்படுத்திய முஸ்லிம் கட்சிகள் தனியான கூட்டமைப்பாக இயங்குவதன் மூலமே இதில் வெற்றி காணலாம். காரணம் தென்னிலங்கை முஸ்லிம்களின் அரசியல் பிரச்சினை வேறு, வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் பிரச்சினை வேறு. இரண்டையும் ஒன்றாக்கினால் எதுவும் நடக்காது. உதாரணமாக இந்த கூட்டமைப்பு கல்முனை மாவட்டம் வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற முற்பட்டால் அதற்கு தென்னிலங்கை முஸ்லிம் அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும். ஆகவே முரண்பாடுகள் அற்ற பிராந்தியங்களின் அமைப்புக்களின் கூட்டே சாத்தியமானது. உதாரணமாக வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கூட்டமைப்பு வேறு, தென்னிலங்கை மற்றும் மலையக தமிழ் மக்களை பிரதிநிதித்துவ படுத்தும தமிழ் முற்போக்கு கூட்டமைப்பு வேறு என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

ஆகவே வடக்கில் கிழக்கில் உள்ள அரசியல் சக்திகளைக்கொண்ட கூட்டமைப்பை முதலில் உருவாக்க உலமா கட்சி முயற்சி எடுக்கிறது. இது சம்பந்தமான கூட்டம் எதிர் வரும் சனிக்கிழமை இன்ஷா அள்ளாஹ் கல்முனையில் நடை பெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள வரும்பும் அரசியலில் அக்கறை கொண்ட கட்சிகள், அமைப்புக்கள் தமது பெயர்களை எஸ் எம் எஸ் (0777570639) அனுப்பவும்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்