முஸ்லிம் கூட்டமைப்புக்கு, முழு ஒத்துழைப்பு வழங்குவோம் - முஸ்லிம் காங்கிரஸ் 


(ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்)
முஸ்லிம் கூட்டமைப்புக்கு முழு ஆதரவு வழங்கப்படுமென முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் செயலாளர் ஹசன் அலி தெரிவித்ததாவது

பல காலமாக இவ்வாறான ஒரு அமைப்பை நான் வலியுறுத்தி வந்துள்ளேன். அந்த அமைப்பை உருவாக்க இது நல்லதோர் காலப்பகுதி. சகல முஸ்லிம் அரசியவாதிகளும், கட்சித் தலைமைகளும் இதில் உச்சக்கட்ட பங்களிப்பை நல்க முன்வர வேண்டும்

இது ஒரு இயல்பு காலம் என சொல்லப்படுகிறது. இந்த இயல்பு காலத்தில் நாம் எமது உரிமைகள் குறித்தும் உரத்துக் குரல் எழுப்ப வேண்டும். இல்லாதவிடத்து நமது உரிமைகள் மழுங்கடிக்கப்படலாம் இந்த நிலையிலிருந்து மீட்சிபெற பலம்வாய்ந்த முஸ்லிம் கூட்டமைப்பு அவசியமாகிறது.

மறைந்த எமது தலைவர் அஸ்ரப் அவர்கள் உயிரோடு இருந்திருந்தால், இவ்வாறான ஒரு அமைப்பை நிச்சயம் வரவேற்றிருப்பார். அவர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக இருந்தபோதும், ஏனைய முஸ்லிம் அமைப்புக்களுக்கு தனது ஆதரவை வழங்கினார்.

அந்தவகையில் பலமிக்க முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்றை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக்கிறது. இதற்கான முயற்சிகளில் பங்கேற்றுள்ள ஊடகவியலாளர்களை வாழ்த்துகிறேன் எனவும் ஹசன் அலி மேலும் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்