கல்முனை அபிவிருத்திகள் பற்றி ஊடகங்களில் செய்திகள் வருகின்றனவே தவிர அனைத்துமே ஏட்டுச்சுரைக்காய்

கல்முனை அபிவிருத்திகள் பற்றி ஊடகங்களில் செய்திகள் வருகின்றனவே தவிர அனைத்துமே ஏட்டுச்சுரைக்காய் நிலையில்தான் உள்ளது என உலமா கட்சித்தலைவர் முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் தெரிவித்துள்ளதாவது,
ஒரு காலத்தில் கிழக்கின் முகவெற்றிலையாக இருந்த கல்முனை இன்று கிழக்கின் கக்கூசாக மாறியுள்ளதை காண்கிறோம். சுமார் முப்பது வருடங்களாக கல்முனைக்கான அபிவிருத்தி சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை. இதற்கு பிரதான காரணம் ஒரே கட்சி அரசியல் கல்முனையில் இருப்பதாலும் எந்த சேவை செய்யாவிட்டாலும் அக்கட்சிக்கு வாக்களிப்போரும் அதே போல் மாநகரசபையில் வெறும் பொம்மைகளாக தொடர்ந்தும் இருப்போருக்கு வாக்களிப்பதினாலுமே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
ஆக கல்முனையின் அபிவிருத்தி பின்தங்கியுள்ளமைக்கு அரசியல்வாதிகள் மட்டுமல்ல வாக்காள பொதுமக்களும் பிரதான காரணம் என்பதை நாம் விளங்க வேண்டும். சில வருடங்களுக்கு கல்முனையை ஜேர்மன் நகரத்துடன் இணைத்து அபிவிருத்தி செய்யப்போவதாக கதை அளக்கப்பட்டது. பின்னர் பிரதமர் இதனை முன்னெடுப்பார் என கூறப்பட்டது. அது போல் கல்முனை சம்பந்தமாக அவருடன் பேசப்பட்டது, இவருடன் பேசப்பட்டது என புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிட்டு மக்களை ஏமாற்றுவதில்தான் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதே தவிர வேறு எதையும் காணவில்லை. ஒரு மாநகர சபையின் பஸ் தரிப்பிடத்தில் மலசல கூடம் இல்லாத மாநகரம்; என்றால் அது கல்முனையாகத்தான் இருக்கும்.
அதே போல் வீடில்லா பிரச்சினை, சுகாதார பிரச்சினை, இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்பின்மை, மீனவர்களுக்கான வசதி வாய்ப்பின்மை, விவசாயிகளின் அன்றாட பிரச்சினை, அபிவிருத்தியில் மந்த நிலை என நிறைய பிரச்சினைகள் கல்முனையில் உள்ளன. இவற்றை தீர்ப்பதில் கல்முனை மாநகர சபையும், கல்முனையை ஆளும் கட்சியும் தொடர் தோல்வியையே சந்தித்து வருகின்றன என்பதே உண்மையானதாகும். ஆகவே கல்முனை பற்றி அரசு தனது நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்து அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும் என உலமா கட்சி கேட்டுககொள்கிறது.


Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்