பிரதேச ஊடகவியலாளா்களுக்கென வீடமைப்புத்திட்டம்

அஷ்ரப் ஏ சமத்

24 மாவட்டங்களிலும்  25 வீடுகளைக் கொண்ட   ஊடகவியலாளா் வீடமைப்புத் திட்டம் நிர்மாணிக்கப்பட உள்ளது. இதற்காக ஊடகவியலாளா் ஒருவருக்கு  10  போ்ச் காணித்துண்டென்று இலவசமாக வழங்கப்பட்டு வீடமைப்பு அபிவிருத்தி அதிாகர சபையினால் குறைந்த வட்டியில் வீடமைப்புக் கடனும் வழங்கப்படும். இத் திட்டத்தினை ஊடக தகவல்துறை அமைச்சும்  வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சும் இணைந்து செயல்படுத்த உள்ளது.  என அமைச்சா் சஜித் பிரேமதாச தெரிவித்தாா்.

மேற்கண்ட தகவல்களை இன்று(17) வீடமைப்பு அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளா் மாநாட்டின் போது அமைச்சா் சஜித் பிரேமதாச, தெரிவித்தாா் இவ்  ஊடக மாநாட்டில்  தகவல்துறை ஊடக அமைச்சா் ஜயந்த  கருநாதிலக்க  வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவா் எஸ. பலன் சூரிய, சுயாதீன தொலைக்காட்சித் தலைவா் ஹேமசிரி பெர்ணான்டோ, ருபாவாஹினிக் கூட்டுத்தாபணத்தின் தலைவா் ரவி ஜெயவர்த்தனவும் கலந்து கொண்டனா்.

அமைச்சா் தொடா்ந்து தகவல் தருகையில் 

ஏற்கனவே நாடு முழுவதிலும் 200 எழுச்சிக்  கிராமங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. அதே போன்று பிரதேச ஊடகவியலாளா்கள்  தமக்கென்று ஒரு  வீடொன்று இல்லாமல் வாடகை வீடுகளிலும் மற்றும் கஸ்டங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கின்றனா்.  இந்த வீடமைப்புத் திட்டங்களை ஆரம்பிப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடமைப்பு அமைச்சு காணிகளை அடையாளம் கண்டு காணிகளை இலவசமாக வழங்கும் அத்துடன் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் ஏற்கனவே 2 இலட்சம் ருபா வீடமைப்புக் கடனை குறைந்த வட்டியில் வழங்கி அந்தந்த மாவட்டக்  வீடமைப்பு அழுவலங்கள் ஊடாக இந்த வீடமைப்புத் திட்டத்தினை நிர்மாணிக்கும். 

ஊடகவியலாளா்களை தோ்ந்தெடுப்பது சம்பந்தமான பணியை ஊடக தகவல் அமைச்சே நடைமுறைப்படுத்தும். ஊடகவியலாளா்கள் தமக்கென்று வீடொன்று இல்லாதிருத்தலை உறுதிப்படுத்தல் வேண்டும். அத்துடன தகவல் துறை திணைக்களத்தின் அடையாள அட்டை பெற்றிருத்தல் வேண்டும். 

ஊடக அமைச்சா் ஜயந்த கருநா திலக்க இங்கு தகவல் தருகையில் -

கொழும்பில் ஹோமகமவில் வீடமைப்புத்திட்டமொன்றை நடைமுறபை்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. அதற்கான காணி அளவீடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அத்திட்டத்தினை நிர்மாணப்பணிகளை வீடமைப்பு  அமைச்சும் ஊடக அமைச்சும் இணைந்து செயல்படுத்தும்.  பிரதேச ஊடகவியலாளா்களுக்கென இந்த வீடமைப்புத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படு்ம்.

அதே வேலை காலி மாவட்டத்தில் ஹபராதுவை பிரதேசத்தில் வெள்ளத்தினால் வீடுகளை இழந்த ஒரு குடும்பம் பன்சலையில் வாழ்ந்து வருவதை சுயாதீன தொலைக்காட்சி செய்தியில்  வெளியீட்டிருந்தது.
 அதனை அறிந்த அமைச்சா் சஜித் பிரேமதாச அக் குடும்பத்தினை அமைச்சுக்கு அழைத்து எதிா்வரும் புதுவருடத்திற்கு முன்  வீடொன்றை நிர்மாணிக்க வென 2 இலட்சம் ருபா வீடமைப்புக் கடன் மற்றும் காலி மாவட்ட வீடமைப்பு அதிகார சபையினால் காணித்துண்டொன்றையும் அமைச்சில் வைத்து வழங்கி வைத்தாா்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்