Skip to main content

ஒரே மேசையில் இரண்டு தீர்வு முஸ்லிம்களுக்கும்அதிகாரப்பகிர்வு


எம்.எம்.எம்.நூறுல்ஹக்
சாய்ந்தமருது-05
இன்று இலங்கையின் அரசியல் களம் இனப்பிரச்சனைக்கான தீர்வு குறித்து பல்வேறு கோணங்களில் அபிப்பிராயங்கள் முன்வைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.இவற்றுள் போதிய அக்கறையும் பிரஞ்சையுமற்ற ஒரு சமூகமாக முஸ்லிம்கள் காணப்படுவது நமது அரசியல் களம் வெறுமையாக இருப்பதை வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றது.
சிலர் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில தீர்வுகளைப் பற்றி பரப்புரை மேற்கொண்ட போதிலும் அவைகள் அனைத்தும் ஒரு மையத்தை முன்னிறுத்தி சரியான முறையில் கட்டமைக்கப்பட்டு பேசப்படாது இருப்பது நமது கையறு நிலையை இன்னும் நிரூபிப்பதாகவே அமைகின்றது.
நமது நாட்டின் இனப்பிரச்சனை தோன்றுவதற்கு வித்திட்ட சிங்கள-பௌத்த பேரினவாத ஆதிக்க சக்திகளின் பக்கமிருந்து மிக தெளிவாக பின்வரும் இரண்டு விடயங்களை ஆணித்தரமாக வலியுறுத்தி வருகின்றனர். இதில் அரசியல்வாதிகள் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாலும் சிவில் அமைப்புக்களும் புத்திஜீவிகள் வட்டங்களும் ஒருமித்துமுள்ளனர்.
அதாவது வடக்கு,கிழக்கு ஆகிய இரு மாகாணங்களும் ஒன்றிணைக்கப்பட்டு தீர்வுகாணப்படக்கூடாதென்றும் மற்றும் ஒற்றையாட்சிக்கு புறம்பாக சமஷ்டி முறையிலான தீர்வாகவும் அமைந்துவிடக்கூடாது என்பதிலும் மிகவும் அணுங்குப்பிடியாக தங்களது கருத்துக்களை பறைசாற்றிவருகின்றனர்.
இவ்வாறு சிங்கள சமூகம் சார்ந்த ஆதிக்க சக்திகளின் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்த போதிலும் இனப்பிரச்சனையால் பாதிக்கப்பட்ட சமூகங்களில் ஒன்றான தமிழர்கள் அவர்களின் தீர்வு குறித்து மிகவும் தெளிவாக இருக்கின்றனர்.அதன் வெளிப்பாடாக அரசியல் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாலும் புத்திஜீவிகளின் கருத்து முரண்பாடுகளுக்கு அப்பாலும் சிவில் சமூகத்தின் மாறுபட்ட கருத்து நிலைக்கு மத்தியிலும் வடக்கு.கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்ட தமிழர்களின் தாயகம் என்ற அடிப்படையையும் மற்றும் சமஷ்டி முறைமையின் கீழான அதிகாரப்பகிர்வு என்பதாகும்.
இவ்விரு கோரிக்கைகளை ஏனைய சமூகங்களின் கருத்துக்களை உள்வாங்கிக்கொள்ளாததன் வெளிப்பாடாக தமது நிலையில் மிகவும் உறுதியோடு இவற்றின் அடிப்படையை முன்னிறுத்தியே ஏனைய தமது தீர்வுத்திட்டங்களை பல்வேறு தளங்களில் இருந்துகொண்டு வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.
தமிழ் மக்கள் எவ்வாறு சிங்கள பேரினவாத ஆதிக்க சக்திகளின் கொடுமைக்குள் உள்ளாகி சீரழிக்கப்பட்டார்களோ அதே விதத்தில் சிங்களவர்களாலும் தமிழர்களாலும் பாதிக்கப்பட்டு காணப்படுகின்ற முஸ்லிம்களின் நிலை குறித்து தமிழர்கள் தரப்பிலிருந்து வெளிப்படும் கருத்துக்களில் சரியான முறையில் உள்வாங்கப்படாத ஒரு நிலைப்பாடு மிகவும் வேரூன்றிஉள்ளது.
இது மிதவாத தமிழ் அரசியல் தலைமைகள் தொட்டு இடையில் உருவான ஆயுதம் ஏந்திய தலைமைத்துவங்கள் வரை இதே நிலையை முஸ்லிம்கள் மீது தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகின்றனர்.முஸ்லிம் மக்களை ஒரு உப குழுவாக அதாவது தனித்த ஒரு சமூகமாக அல்லது ஒரு இனமாக அறிவிப்பு செய்யாது இருட்டடிப்பு செய்துவருவதை வரலாறு நெடுகிலும் நாம் பார்த்துவருகின்றோம்.
அண்மையில் கூட வடக்கு முதலமைச்சர் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களை இணைத்தலைவராக கொண்டியங்கும் தமிழர் பேரவை வெளியிட்டிருக்கும் இனப்பிரச்சனைக்கான தீர்வு முன்மொழிவுகளில் கூட 1-3 தமிழ் தேசத்தின் பாரம்பரிய தாயகம் வடக்கு கிழக்கு என்பதை சுட்டிக்காட்டியதோடு 5வது அம்சமான ஆட்சி முறைமை என்பதில் குறிப்பு இடப்பட்டு () பின்வருமாறு தெரிவிக்கின்றது.
 “வடக்கு,கிழக்கில் வாழும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தனித்துவத்தை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.முஸ்லிம் சமூகத்தால் இணைந்த வடக்கு கிழக்கில் தமது குழு சார் உரிமைகளை நிறுவன ரீதியாக பாதுகாப்பதற்கு எடுக்கும் முன்வைப்பு எதுவாயினும் அது தொடர்பில் அவர்களுடன் கலந்தாய்வு செய்யத் தயாராக இருக்கின்றோம் என பற்றுறுதியுடன் கூறிக்கொள்கின்றோம்
இந்த வாசகத்தினூடாக இதுகாலவரை முஸ்லிம் தரப்பிலிருந்து அவர்களின் தீர்வின் முதன்மையாக சொல்லப்பட்டுவந்த முஸ்லிம்களைபெரும்பாண்மையாகக் கொண்ட மாகாணம் ஒன்றை உருவாக்குதல் என்பதில் கூட எந்தவிதமான நல்லெண்ணத்தையும் செலுத்தாது அதனை ஒரு பொருட்டாகக் கொள்ளாது தங்களின் அதிகாரத்துக்குள் ஒரு உப குழுவாகவும் உப அலகாகவும் முஸ்லிம் சமூகத்தை பிரயோகிப்பதற்கான நீண்ட காலத்திட்டத்தின் முன்னெச்சரிக்கையான முன்வைப்புக்களாகவே இதனைப் பார்க்க வேண்டியிருக்கின்றது.
முஸ்லிம்களின் தீர்வுகளில் முதன்மையாகவும் முன்னுரிமையாகவும் மிக வலிதாக வலியுறுத்தப்பட வேண்டிய அம்சம் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு மாகாணம் உருவாக்கப்படல் வேண்டும்.அதற்கு தென்கிழக்கு மாகாணம் என பெயரிட்டுக்கொள்ள முடியும்.அல்லது இதற்கு பொறுத்தமான வேறொரு பெயரை வைத்துக்கொள்ள முடியும்.
இன்றிருக்கும் அரசியலமைப்பின் பிரகாரம் கூறப்பட்டுள்ள ஒன்பது மாகாணங்களுக்குள் அடக்கமாகவோ அல்லது பத்தாவது மாகாணமாக புதிதாக உருவாக்கியோ இது நிறைவேற்றப்படவேண்டும் என்பதில் முஸ்லிம் சமூகம் மிகவும் உறுதியாக இருக்க வேண்டும்.
ஏனெனில் சமஷ்டி என்றாலும் சரி ஒற்றையாட்சி என்றாலும் சரி இவ்விரு முறைமைகளில் எந்த முறைமையின் கீழ் அதிகார அலகுகள் பகிரப்பட்டாலும் அது முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட் ஒரு மாகாணம் இருந்தால்தான் அந்த அதிகாரப்பகிர்வில் சமாந்தரமாக பங்குபெற முடியும் என்பதில் நமது மக்களும் நம்மை வழிநடத்தும் எந்தவகையான  பொறுப்புள்ளவர்களிடமும் விட்டுக்கொடுப்பின்றி இருக்கவேண்டிய விடயமாகும்.
இன்றைய கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை மாவட்டத்தின் கல்முனை,பொத்துவில்,சம்மாந்துறை ஆகிய மூன்று தொகுதிகளை முழுமையாக உட்படுத்தியும் மட்டக்களப்பு,திருகோணமலை,மற்றும் வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னார்,யாழ் மாவட்டங்களிலும் உள்ள முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேச செயலகங்களை உள்ளடக்கியதாக இந்த முஸ்லிம் பெரும்பான்மை மாகாணம் தோற்றுவிக்கப்படல் வேண்டும்.
இதற்கு தேவையான வகையில் உரிய இடங்களில் பிரதேச செயலகங்களையும் உள்ளூராட்சி சபைகளையும் புதிதாக அமைத்துக்கொள்ளக்கூடிய பொறிமுறைகளையும் இந்த மாகாணம் கொண்டமைந்ததாக தோற்றம் பெறுதல் முக்கியமாகும்.
கடந்த பல வருடங்களாக முஸ்லிம்களினால் முன்மொழியப்பட்டு வலியுறுத்தப்பட்டுவந்த முஸ்லிம் பெரும்பான்மை மாகாணம் என்பது பின்னர் தென்கிழக்கு அலகு என பெயர் மாற்றம் பெற்றதும் ஒரே கோரிக்கை என்பதும் மேற்குறித்த எல்லைகளை உள்ளடக்கியதுமாகும்.ஆகவே அது இன்று மீளவும் வலிமைப்படுத்தப்படவும் முன்னிறுத்தப்படவும் உறுதிப்படுத்தப்படவும் மிக பொறுத்தமான ஒரு சந்தர்ப்பம் என்பதையும் முஸ்லிம் சமூகம் மறந்துவிடக்கூடாது.
முஸ்லிம்களைப் பொறுத்தவரை இந்த முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட மாகாணம் ஒன்று தோற்றுவிக்கப்படவேண்டும் என்கின்ற கோரிக்கையின் பிறப்பிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினுடையதல்ல.இதனை பின்வரும் ஆதாரங்கள் மிகவும் தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன.
முஸ்லிம்களுக்கான தனியான அரசியல் அலகு கிழக்கு மாகாணத்தில் அமைய வேண்டும் என்கின்ற அவா 1986களில் தோற்றம் பெற்றவை அல்ல.மாறாக அது நீண்ட காலத்து எதிர்பார்ப்பாகும் என்பதை மர்ஹூம் அல்ஹாஜ் எம்.இஸட்.மஷூர் மௌலானா அவரது பாணியில் கீழ் கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கில் வாழும் முஸ்லிம்களுக்கு புறம்பான ஒரு பகுதி ஒதுக்கப்படுவதை தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த எஸ்.ஜே.பி செல்வநாயகம் அங்கீகரித்திருக்கிறார். பண்டா-செல்வா ஒப்பந்தமும் இதனை கூறியிருக்கின்றது.இந்நிலையில் முஸ்லிம்கள் தம் பகுதியை உட்படுத்தி தனியான மாகாண சபை ஒன்று அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுப்பது புதிய விடயம் ஒன்றல்ல.” (தினகரன் 2.08.1986)
தமிழர்களின் அபிலாசைகளை தீர்த்துவைக்கக்கூடிய ஒரு நியாயமான தீர்வை காணும் முயற்சி தோல்வியடையாமலிருப்பதற்கு இன்று முஸ்லிம் சமூகம் முன்வைத்துள்ள முஸ்லிம்களுக்கான தனியான மாகாண சபை என்னும் யோசனை பெரிதும் உதவுமென நாம் நம்புகிறோம்.” ( மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் 03.08.1986)
முஸ்லிம் லீக் முன்வைத்த பெரும்பான்மை முஸ்லிம் மாகாண யோசனைக்கு பல்வேறு இயக்கங்களும் கிழக்கு மாகாண முஸ்லிம் இயக்கங்களும் ஆதரவு தெரிவித்திருப்பது குறித்து முஸ்லிம் லீக் செயற்குழு பாராட்டு தெரிவித்துள்ளது.”( தினகரன் 2.10.1986)
குறிப்பாக அம்பாறை மாவட்ட முஸ்லிம் அமைப்புக்களும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களும் மேல் மாகாணத்தை தலைமையமாக கொண்டியங்கும் முஸ்லிம் அமைப்புக்களில் பலதும் பெரும்பான்மையான முஸ்லிம்களின் ஏகோபித்த யோசனையாக முஸ்லிம் மாகாண சபை கோரிக்கை வளர்ச்சி கண்டதென்பது நமது கவனத்துக்குரியது.
முஸ்லிம்களின் வரலாற்று முக்கியத்துவமிக்க இந்த கோரிக்கையினை பௌத்த பேரினவாத அரசியல் கட்சிகள் அங்கீகரிக்கவில்லை என்பது ஆச்சரியமான சங்கதி அல்ல.ஆனால் சிங்களவர்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களே இவ்வாறு முஸ்லிம்களின் கோரிக்கையை நலிவடையச் செய்யும் வகையில் தமது கருத்தாடல்களை முன்னிறுத்தி வருவதுதான் ஆச்சரியத்துக்கும் வேதனைக்குமுரியதாகும்.
இக்கோரிக்கை பின்னாளில் முஸ்லிம்களுக்காக உருவாக்கப்பட்ட தனி முஸ்லிம் கட்சிகளில் முதன்மைக் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினுடையதல்ல என்பதனால் அதற்கு பின்னர் தோன்றிய முஸ்லிம் கட்சிகளும் கூட்டுமொத்தமாக இணைந்து முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட மாகாண உருவாக்கத்தில் கைகோர்த்து திடமாக செயற்படுவதில் தயக்கம் காட்ட வேண்டிய எந்த தேவையும் இல்லை என்பதையும் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
முஸ்லிம்களிடமிருந்து முஸ்லிம் மாகாண சபை கோரிக்கையின் பின்னணி என ஆரம்பத்தில் கருதப்பட்ட 3 காரணங்களை எம்.வை.எம் சித்தீக் (MPA) அவர்கள்முஸ்லிம் பெரும்பபான்மை மாகாண சபை இலங்கை முஸ்லிம்களின் ஏகோபித்த கோரிக்கையாகும்எனும் நூலில் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.அவற்றை இங்கு சுருக்கித்தருகின்றேன்.
) “ கிழக்கில் அம்பாறை தொகுதி நீங்கலாக அல்லது அம்பாறை தொகுதி உட்பட ஒரு மாகாண சபை உருவாகுமானால் அது தமிழ் பேசும் மக்களுக்கிடையிலான முடிவில்லாத மோதல்களுக்கு இட்டுச்செல்லக்கூடும் என்ற ஒரு பயம்தான் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு மாகாண சபையினை கோருவதற்கு அடிப்படைக் காரணமாகும்”.
) தற்போதுள்ள எல்லைகளை அடிப்படையாக வைத்து ஒன்பது மாகாண சபைகள் உருவாகுமனால் தமிழ் மக்களை பெரும்பான்மையாக கொண்ட இரண்டு தமிழ் மாகான சபைகளும் சிங்களவர்களை பெரும்பான்மையாக கொண்ட 7 மாகாண சபைகளும் காணப்படும். இந்நிலையானது இலங்கையில் முஸ்லிம்கள் என்ற இனமொன்று இல்லையென்ற ஓர் உணர்வை வெளியுலகிற்கு ஏற்படுத்தக் கூடும்.
) இந்தியாவில் அதிகாரப்பரவலாக்கள் செய்யப்பட்ட போது அல்லது மாநில சபைகள் உருவாக்கப்பட்ட போது தனிப்பட்ட இனங்களின் பாரம்பரிய கலாசார தனித்துவங்கள் மதிக்கப்படவில்லை.இதனாலேயே நாகலாந்து,மிசாரம்,அஸ்ஸாம்,பஞ்சாப்,குஜராத் ஆகிய மாநிலங்களில் மொழி,இன,மத,கலாசார பிரச்சனைகள் அடிக்கடி எழுகின்றன.இந்த அனுபவம் இலங்கையில் ஏற்படக்கூடாது என்பதற்காகவாவது முஸ்லிம்கள் தனியான மாகாண சபையினை பெற்றுக்கொள்ளுதல் அவசியமாகின்றது”.
இவ்வாறான காரணங்களுடன் இன்னும் சில சம்பவங்களும் சேர்ந்து முஸ்லிம் பெரும்பான்மை மாகாண சபையின் அவசியத்தை இன்று மிகவும் தீவிரமாக்கியுள்ளது.இதனை நடுநிலையாக சிந்திக்கும் எந்த சமூகம் சார்ந்த மக்களும் தெளிவாக உணர்ந்துகொள்ள முடியும்.இதற்கு பின்வரும் விடயங்களை இணைத்து வாசிப்பதனூடாக இன்னும் தெளிவுகளை அடைந்துகொள்ள முடியும்.
உத்தேச முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட மாகாணம் ஒன்றின் உருவாக்கத்தில் காணப்படும் நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கிற்கு சொற்ப குறைவாக குறைவான பிரதேசங்களில் தமிழ் மக்களின் வாழ்விடங்கள் அமைந்திருப்பதனால் பூகோள ரீதியாக நிலத்தொடர்பின்றி காணப்படும்.இதனால் இந்த முஸ்லிம் பெரும்பான்மை மாகாணத்தினை தோற்றுவித்தல் சாத்தியமில்லை என்று சிலர் வாதிக்க முனையக்கூடும்.
மூன்றில் இரண்டு பங்கிற்கு சற்று குறைவான நிலப்பரப்பில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் வாழ்கின்றனர் என்பதற்காக முஸ்லிம்களுக்கான பெரும்பான்மை மாகாணத்தின் உருவாக்கம் சாத்தியமில்லை எனில்,அதே நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதியினராக முஸ்லிம்கள் வாழ்கின்றனர் என்பதனால் தமிழர்களுக்கும் இவ்விரு மாகாணங்களில் நிலத்தொடர்பு இல்லையென்பது எளிதில் புரியக்கூடியது.
நிலத்தொடர்பற்ற அதிகாரப்பகிர்வுகள் உலக அரங்கில் இல்லாமலில்லை.நமக்கு அண்மைய நாடான இந்தியாவின் பாண்டிச்சேரி இதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக பேசப்படுவதையும் இது விடயத்தில் ஏற்றி வாசித்தல் வேண்டும்.
இங்கு மக்களின் எண்ணிக்கையை விட சமூகங்களின் எண்ணங்கள் உணர்வுகள்,தனித்துவங்கள்,உரிமைகள் என்பனவற்றின் பக்கமும் கவனம் செலுத்த வேண்டும்.அதுமட்டுமன்றி முஸ்லிம்கள் இந்த நாட்டின் ஒரு பழமையான வரலாற்றையும் தொண்மையையும் கொண்ட மக்கள் என்ற வகையிலும் அவர்களுக்கென்றும் ஒரு தீர்வு கிட்ட வேண்டும்.
சமய அடிப்படையில் ஒரு தனித்துவமான சமூதாயம் நீண்டகாலமாக வாழ்ந்து வருவார்களாயின் அவர்களை மத அடிப்படையிலான சுய அடையாளம்,தேசிய இனச்சுய நிர்ணய உரிமை பெற தகுதியுடையவர்களாகக் கொள்ளலாம்.இதற்கு முன்னாள் யூகோஸ்லாவியாவில் முஸ்லிம் கத்தோலிக்க மரபு சார்ந்த கிறிஸ்தவர் தனித் தேசிய இனங்களாக அடையாளப்படுத்தப்பட்டதை உதாரணமாகக் கொள்ளலாம்.
இந்தியாவின் பஞ்சாப்பில் மொழியை அடிப்படையாகக் கொள்லாது சமயத்தை அடிப்படையாகக் கொண்டு மாகாண அரசு வழங்கப்பட்டமையும் பொது மொழி மட்டும் ஒரு தேசிய இனத்தை உருவாக்கிவிடாது.அதேநேரம் தொடர்ச்சியான பிரதேசம் அவசியமான பண்பாயினும் இதுவும் ஒரு தேசிய இனத்தை நிர்ணயிக்க நிலையான சான்றல்ல என்பதும் வரலாற்று உண்மைகளாகும்.
ஆகவே முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு மாகாணம் உருவாக்கப்படுவதுடன் அதிகாரப்பகிர்வு தீர்வுக்கு மிகவும் அவசிய தளமாகத் தேவையாகும்.இதனை முன்னிறுத்தியே தீர்வுத்திட்டங்கள் கட்டமைத்து அதனை நமது மக்களின் பிரச்சனைக்கான தீர்வாக பெறுவதற்கு உறுதியான செயற்பாட்டில் நமது எல்லா தரப்பு புலமைகளும் ஆளுமைகளும் ஒன்றுபடுவோம்! தீர்வு மேடையில் நமக்கென்று ஒரு அடைவை அடையாளப்படுத்திக்கொள்வோம்!
Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய