Skip to main content

மகிந்த நாலடி பாய்ந்தால், அரசு எட்டடி பாயும்!

இதுதான் இலங்கையின் இன்றைய அரசியல்!!

mahinda-mithri
இலங்கை அரசியல் வரலாற்றில் மறக்கப்பட முடியாதவர் மகிந்த ராஜபக்ச என்றால் அது மிகையாகாது. ‘யுத்த வன்முறையை தனது ஆட்சிக் காலத்திலேயே முடிவுக்கு கொண்டு வருவேன். அதை அடுத்த தலைமுறைக்கும், அடுத்த தலைமைகளுக்கும் விட்டுவைக்க மாட்டேன்’ என்று மகிந்த ராஜபக்ச 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார்.
2009ஆண்டு மே 18ஆம் திகதி யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து விட்டதாக அவர் அறிவித்தபோது, இலங்கை இரண்டாவது முறையாக விடுதலை பெற்றுள்ளது என்று சிங்கள மக்கள் மகிந்தவைக் கொண்டாடினார்கள். அதன் பிறகு அபிவிருத்தியை முன்னெடுக்கப் போவதாகக் கூறினார். பெரும்பாலும் வீதிகளை அபிவிருத்தி செய்து நகரங்களையும், கிராமங்களையும் இலகுவாக இணைக்கும் முயற்சியில் குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் பெற்றார்.
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக உள்ளுர் விமான சேவைகளை நடத்தவும், தங்கு விடுதிகளை அமைக்கவும், அதற்கான சலுகைகளை முதலீட்டாளர்களுக்கு வழங்கவும் செய்தார். இவ்வாறான நாட்டுக்கான திட்டங்களை வகுத்ததிலும், அதில் பெரும் இலாபங்களைப் பெற்றுக் கொண்டதிலும், அவர் சார்ந்தவர்கள் பலாபலன்களை பெற்றிருக்கின்றார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. பெரும்பாலும் தரகுத் தொகைகளாகவும், பங்குகளாகவும், உதவிகளாகவும், அன்பளிப்புக்களாவும் அந்த பலாபலன்கள் பல வகைப்படும்.
மறுபக்கத்தில் எதிர்க் கட்சியை தொடர்ந்தும் பலவீனப்படுத்துவதும், ஏளனம் செய்வதும், சிறுபான்மைக் கட்சிகளை நெருக்கி அடக்கி வைத்துக் கொள்வதிலும், அரசின் பங்காளிகளை ஒரு குறுகிய வரையறைக்குள் செயற்படத்தக்கதாக பார்த்துக் கொள்வது என்று முன்னெடுக்கப்பட்ட ஆட்சி முறை ஒரு பக்கமுமாக மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலம் இருந்தது.
மகிந்தவை எதிர்த்து ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால், மகிந்த களத்துக்கு வராமலே வீட்டில் இருந்து கொண்டு வெற்றி பெறுவார் என்றளவிலேயே அந்தச் சூழல் மாறியிருந்தது. மகிந்தவை எதிர்த்து சரத் பொன்சேகா களத்தில் இறங்கியபோது சிறிது பரபரப்பு ஏற்பட்டது. யுத்த வெற்றியை யார் சரியாக அறுவடை செய்யப் போகின்றார்கள் என்று பலரும் எதிர்பார்க்கத் தொடங்கியிருந்தார்கள். ஆனால் கணிசமாக வாக்குகளை சரத் பொன்சேகா பெற்றிருந்தாலும் மகிந்த வெற்றி பெற்றார்.
இந்த நிலையிலேயே மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக வெற்றி பெறுவதற்கு விரும்பிய மகிந்த, முன்னைய ஆட்சிக்காலம் முழுமையாக முடிவதற்கு முன்னமே தேர்தலை அறிவித்தார். இந்த முறை பெரும்பாலும் மகிந்தவை எதிர்த்து ரணில் விக்ரமசிங்கவே களத்துக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மகிந்தவின் ஆரூடமும் அதுவாகவே இருந்தது. ஏன் என்றால் எதிர்க்கட்சிகள் சேர்ந்து பொது வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வதற்கு பல பேச்சுவார்த்தைகளை நடத்திய போதும் அந்த முயற்சி வெற்றியளிக்காமல் போனதுதான் காரணம்.
ஆகையால் மகிந்த ஒரு மெத்தனப் போக்கில் இருந்தார். ஆனால் திரை மறைவில் மிக இரகசியமாக தீட்டப்பட்ட சரியான திட்டமிடலும், தனக்கான இடத்தை விட்டுக் கொடுத்தாவது மகிந்தவை தோல்வியடைச் செய்ய முடியுமாக இருந்தால் அதற்கு விட்டுக் கொடுக்க மனதளவில் உறுதியெடுத்து பெரும் போராட்டத்தை ஆரம்பித்த ரணில் விக்ரமசிங்கவின் துணிச்சலும், அதற்கு சரியான வழிகாட்டலைச் செய்த முன்னால் ஜனாதிபதி சந்திரிக்காவின் உழைப்பும,; மகிந்தவின் கூடாரத்துக்குள் இருந்தே மகிந்தவுக்கான எதிராளியை தெரிவு செய்யும் முடிவை எடுக்கச் செய்திருந்தது.
மகிந்தவின் அமைச்சரவையில் ஒருவராக இருந்த மைத்திரிபாலவை பொது வேட்பாளராக இணங்கச் செய்ததும், அவர் போட்டியிடத் துணிந்ததும் வெற்றி பெற்றால் வாழ்வு, தோற்றுப் போனால் மரணம் என்ற போராட்டமாகவே இருந்தது.
மைத்திரிபால போட்டியாளராக மாறியதே மகிந்தவுக்கு முதல் அதிர்ச்சியாக அமைந்தது. பின்னர் மைத்திரிபாலவின் வெற்றிக்காக பல கோணங்களில் எடுக்கப்பட்ட முயற்சிகளும், மகிந்தவுடன் இருந்த பங்காளிகள் அடுத்தடுத்து மைத்திபாலவின் ஆதரவாளர்களாக அணி சேர்ந்ததும் மகிந்தவுக்கு பதற்றத்தைக் கொடுத்திருந்தது. மகிந்த பதற்றமடைந்ததைப் போலவே தேர்தலில் மகிந்த தோற்றுப் போனார்.
தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல் மகிந்த வம்பு பண்ணுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டது, ஆனால் படையினரும், சர்வதேச அழுத்தங்களும் அதற்கு இடம் கொடுக்கவில்லை என்பதால் மகி;ந்த தோல்வியை ஏற்றுக் கொண்டு அலரி மாளிகையை விட்டு சொந்த ஊருக்குப் போனார்.
மகிந்த பதவியை விட்டு போவதற்கு இலங்கையில் இரத்தம் சிந்தும் போராட்டங்கள் நடைபெறலாம் என்று சர்வதேசங்கள் எதிர் பார்த்த நிலையில், இலங்கை மக்கள் இரத்தம் சிந்தாத ஒரு ஜனநாயகப் போராட்டத்தின் மூலம் மகிந்தவை அதிகாரத்திலிருந்து அகற்றியிருக்கின்றார்கள் என்று பின்னர் சர்வதேச நாடுகள் பாராட்டின.
மைத்திரிபால ஜனாதிபதியாக வெற்றிபெற்ற போதும் அவர் பொலனறுவையிலுள்ள தனது வீட்டிலேயே இருந்தார். ஆகையால் அலரிமாளிகையை ரணில் விக்ரம சிங்கவிடமே மகி;ந்த ஒப்படைத்திருந்தார். பின்னர் மகிந்தவின் பிள்ளைகளும், சகோதரர்களும் நடுங்கிப் போயிருந்தபோது, மகிந்தவின் மூத்த மகனான நாமலிடம் ஜனாதிபதி மைத்திரிபால ஒரு தடவை உரையாடியபோது, ‘எதற்கும் பயப்பட வேண்டாம். நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வேன்’ என்று கூறியதாக அப்போது தகவல்கள் வெளியாகி இருந்தது.
மகிந்த ராஜபக்சவும் எதிர்காலத்தில் அரசியலிருந்து ஓய்வு பெற்றுவிடுவதாக கூறியிருந்தார்.. அப்படி ஓய்வு பெற்றிருந்தால் அவருக்கு முக்கிய பதவி ஒன்றை வழங்கி கௌரவிக்கவும் ஜனாதிபதி மைத்திரிபால எண்ணியிருந்தார். ஆனால் மகிந்தவின் சகாக்கள் மகிந்தவை விடவில்லை. மீண்டும் தீவிர அரசியலுக்குள் இழுத்தார்கள். ‘உங்களுக்கு இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் பெருமளவு வாக்களித்து உங்களின் மேலான நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள் எனவே நீங்கள் ஒதுங்கிவிட முடியாது’ என்று உசுப்பேற்றியதால் மகிந்த பாராளுமன்றத் தேர்தலில் களம் இறங்கினார்.
மகிந்தவின் இந்த முடிவு அரசாங்கத்திற்கு எரிச்சலைக் கொடுத்தது. மகிந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்றுப் போனாலும், பிரதமராக வருவதற்கு முயற்சி செய்கின்றார் என்பது எல்லோருக்கும் தெரியும். மகிந்தவின் இந்த ஆசைவுக்கு ஒரு பதில் அசைவை அரசாங்கம் வெளிக்காட்டத் தொடங்கியது. அப்போதுதான் மகிந்தவின் ஆட்சியில் நிழல் ஜனாதிபதியாகவும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும் இருந்த பசில் ராஜபக்சவை பாரிய மோசடிகள் தொடர்பான விசாரனைக்கு அழைக்க முடிவு செய்யப்பட்டது.
அடுத்து கிரிமண்டல மாவத்தையில் கடைத் தொகுதிக்குள் சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிலையத்துக்குச் சொந்தமான உடமைகள் மற்றும் ஒரு சிறிய விமானம் என்பவற்றை கைப்பற்றியதோடு, சீ.எஸ்.என் தொலைக்காட்சியின் உரிமையாளரான மகிந்தவின் இளைய மகனான ஜோசித ராஜபக்ச விசாரனைக்கு உட்படுத்தப் பட்டார்.
- See more at: http://www.jvpnews.com/srilanka/146403.html#sthash.aU3bc2jB.dpuf

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய