பிரதி அமைச்சர் பைசால் காசிம் கரையோர பகுதி வைத்தியசாலைகளுக்கு

Ashraff.A. Samad

சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் அவர்கள் அண்மையில்  அம்பாறை  மாவட்டத்தில் உள்ள கரையோர பகுதி வைத்தியசாலைகளுக்கு சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகத்துடன்  விஜயத்தை மேற்கொண்டு அங்குள்ள குறைகளும் தேவைகளும் கண்டறிந்தார்.
 அத் தேவைகளில் ஒன்றாகவும் பற்றாக்குறையாகவும் இருந்த  2.5 மில்லியன் ரூபா  பெறுமதியுடைய   multi-para monitor (cardiology ) இயந்திரத்திரங்கள்  சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் , சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித்த மகிப்பால ஆகியோர்களினால்  கல்முனை பிராந்திய சுகாதார அலுவலகர் டாக்டர் ஏ .ல் அலாவுதீன் அவர்களிடம் இன்று(8) சுகாதார அமைச்சின் காரியாலயத்தில் வைத்து  கையளிக்கப்பட்டது


இதன் அடிப்படையில் சம்மாந்துறை வைத்தியசாலைக்கு -1 , திருக்கோவில்  வைத்தியசாலைக்கு -1 , அட்டாளைச்சேனை  வைத்தியசாலைக்கு -1, பாலமுனை  வைத்தியசாலைக்கு -1, நிந்தவூர்  வைத்தியசாலைக்கு -1, மருதமுனை  வைத்தியசாலைக்கு -1 , பொத்துவில்  வைத்தியசாலைக்கு -1 கிடைக்கப்பெறவுள்ளது 

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்