ஈழக்கவிஞன் மன்னார் பிரதீப்பின் இரவல் தேசம் கவிநூல் விரைவில் வெளியீடுஈழத்து கவிதை உலகில் மற்றுமொரு பொக்கிஷமாக மான்னார்  மாவட்டத்திலிருந்து கவிஞர் ந.பிரதீப்பின் இரண்டாவது பிரசவமாக தன்னுடைய மனக்கிடக்கைகளை உள்ளடக்கிய கவிதைகளை இரவல் தேசம் என்னும் தலைப்பிலான கவி நூலாக வெளியீடு செய்யவுள்ளார்.

மன்னார் தமிழ் சங்கத்தின் வெளியீடான குறித்த நூல் எதிர் வரும் 28ம் திகதி ஞாயிறு காலை   மன்னார் ஜூலியா ஹோட்டலில் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் பல முக்கிய கலை இலக்கியவாதிகள் அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூக ஆரவலர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

சமூகத்தில்  வித்தியாசமான மொழி நடையில் கவிதை புனையும் மன்னார் பிரதீப் தமிழாக தமிழனாக சமூகம்  ஏற்கும் கவிதைகளை வழங்குவதில் சிறந்தவர்  வயதை விட வார்த்தைகளில் முதுமையான பிரதீப் ஈழத்துப்பெருமையை உலகறியச்செய்ய வாழ்த்துக்கள்.

-செட்டிகுளம் சர்ஜான்-  

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்