அஷ்ரப் அவர்களின் மகன் அமான் அஷ்ரப், பஷீர் சேகு தாவூத்தின் கருத்துக்கு காட்டம்

அண்மையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பஷீர் சேகுதாவுத் அவர்கள் முஸ்லிம்களுக்கு தனியான மாகாணம் தேவை என கூறியிருந்தார். அதை மறைந்த தலைவர் மாமனிதர் எம். எச். எம். அஷ்ரப் அவர்களும் வலியுறுத்தியதாகவும் தெரிவித்திருந்தார்.
இளைஞர்கள் மத்தியில் மற்றும் சமூக வலைத்தளங்களில் பலத்த எதிர்ப்பை பெற்றுவரும் இவ்வறிக்கை சம்பந்தமாக மாமனிதர் எம். எச். எம். அஷ்ரப் அவர்களின் மகன் அமான் அஷ்ரப் அவர்கள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் அவர்களுக்கு நேரடி கடிதம் மூலம் தனது காட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். 
அவர் குறிப்பிடுகையில் "எம். எச். எம். அஷ்ரப்  அவர்கள் எப்பொழுதும் ஒன்று பட்ட, ஒற்றுமையான இலைங்கையை நேசித்தார் எனவும், தமிழ் மக்களுக்கு தனியான மாகாணம் வழங்கப்படுமேயானால், முஸ்லிம்களுக்கும் தனியான மாகாணம் வழங்கப்பட வேண்டும் என்றே எம். எச். எம். அஷ்ரப் கூறியிருந்தார்கள்" என்றும் குறிப்பிட்டார். 
அவர் மேலும் தெரிவிக்கையில் "எம். எச். எம் அஷ்ரப் அவர்கள் கப்பல், துறைமுக அபிவிருத்தி அமைச்சராக பதவி  ஏற்ற பின், உயர் பீட உறுப்பினர்களுடன்தாஜ் சமுத்திராவில் நடைபெற்ற கலந்துரையாடலில் தாம் சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி என்ற அடிப்படையில் மக்களுக்கு தேவையான எல்லா சேவைகளையும் செய்துள்ளதாகவும், அச்சேவையை விஸ்தரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுருத்தியதோடு தேசிய அரசியலின் தேவையை வலியுறுத்தினார்கள். அதற்காகவே தேசிய ஒருமைப்பாட்டை தாங்கி நிற்கும் பெயர் கொண்ட நுஆ எனும் கட்சியின் ஆரம்பத்துக்கும் வித்திட்டார்கள்" என தெரிவித்தார். 
மேலும் காலத்துக்கு ஏற்ற வகையில் பரந்த சிந்தனை மற்றும் முதிர்ச்சியடையும் தன்மை இல்லாத காரணத்தினாலேயே பஷீர் செகுதாவுத்தை நுஆவின் உயர்பீடத்தில் எம். எச். எம் அஷ்ரப் அவர்கள் இணைக்கவில்லை எனவும், தனது சொந்த நலனுக்காக வரலாற்றை திரிவுபடுத்த வேண்டாம்  தெரிவித்தார். 

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்