தவ்ஹீத் மாநாட்டில் பீடித்துண்டோ??


-kaalaimalar-

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  சார்பில் நேற்று ஜனவரி 31 அன்று திருச்சியில் திண்டுக்கல் செல்லும் வழியில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஒன்றை நடத்தியது. அதில் குழுமிய 20 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்களைக் கொண்டு பிராட்டியூரை ஆக்கிரமித்தது.

லட்சக்கணக்கான மக்கள் திரண்ட திடலில் இன்று எங்கு தேடிப்பார்த்தும் ஒரு பீடித்துண்டோ , சிகரெட் பாக்கெட்டோ , மது பாட்டிலோ காணவில்லை. 

என்னது மதுபாடிலே இல்லையா? . மது பாட்டில் இல்லாத ஒரு மாநாடா ? அப்படியென்றால் இது சரித்திரப்புகழ் பெற்ற மாநாடாயிற்றே! என வியந்தோம்.

அங்கிருந்த ஒரு முஸ்லிம் சகோதரரிடம் வினவியபோது இறைவனுக்கு இணைவைக்காத எந்த முஸ்லிமும் மதுவுக்கு மயங்கமாட்டான் என்றார்.

இக்காட்சியைப்பார்த்தும் நீங்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடத்துவதுடன் மதுஒழிப்பு மாநாட்டையும் நடத்திவிட்டீர்கள் .

என்றும் நம் தமிழகம் ஜன31 தவ்ஹீத் ஜமாத் மாநாட்டுத்திடலாக அமைந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று அங்கலாய்த்துக்கொண்டோம்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்