மினுவாங்கொடை டவுன் ஜும்ஆப் பள்ளிவாசல் வளவுக்குள் வருவதைத் தவிர்த்து கொள்ளுமாறு கோரிக்கை

(மினுவாங்கொடைநிருபர் ) (ஜ .எ .காதிர்கான்)
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இரவு வேளைகளில் வெளிமாவட்டங்களிலிருந்து “உம்ரா’’ செல்லவரும் யாத்திரிகர்களும் ஏனைய பயணிகளும் இரவு நேரங்களில்  மினுவாங்கொடை டவுன் ஜும்ஆப் பள்ளிவாசல் வளவுக்குள் வருவதைத் தவிர்த்து கொள்ளுமாறு  பள்ளிவாசல் நிர்வாகிகள் வினையமாகக் கேட்டுள்ளனர் இப்பள்ளிவாசல் தினமும் இரவு 9;;;30 மணி முதல் அதிகாலை 4.00 மணிவரை மூடப்பட்டிருக்கும் நேரத்தில் பள்ளிவாசல்  கேட்டைத்ததட்டி ஊழியர்களைத் தொந்தரவு செய்யாமல் இருக்குமாறும் நிர்வாகிகள்  வேண்டுகோள்  விடுக்கின்றனர்.  பெரும்பாலும் உம்ரா செல்ல  வருபவர்களே இவ்வாறு நடந்து கொள்கின்றனர் உம்ரா அனுப்பும் சில முகவர்களின் செயற்பாடே இதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர். இரவில் கேட்வாயிலைத் தட்டி உள்ளேவரும் யாத்திரிகர்கள் அங்கு கடமை புரியும் ஊழியர்களையும் பல்வேறு விதத்தில் அசௌகரியங்களைக் கொடுத்து வருவதாகத் தெரிவித்த நிர்வாகிகள் யாத்திரிகர்களால் கொண்டு வரப்படும் உணவு மற்றும் பெண்களின் கழிவுகள் என்பன பள்ளிவாசலுக்கு உள்ளேயும் வெளியேயும் ஆங்காங்கே வீசப்படுவதாலும் நிர்வாகிகள் பல்வேறு பிரச்சனைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். பள்ளிவாசலைச் சூழ பிற மத சகோதரர்களும் இருப்பதால் தங்கிச் செல்பவர்கள் கடமை கண்ணியம் கட்டுப்பாடு மற்றும் சுத்தம் சுகாதாரம் பேணி நடந்து கொள்ளுமாறும்  இதுதொடர்பில் முன்கூட்டியே அனுமதிபெற்றுக்கொள்வது  அவசியம்  என்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்