உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லை மீள் நிர்ணயம் தொடர்பில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்

(I . ஏ. காதிர். கான்)

உள்ளுராட்சி மன்றங்களுக்கான  எல்லை மீள் நிர்ணயம் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பரிகாரம் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகஇ மாகாண  சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரனி பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பிலான முறைப்பாடுகளை  அனுப்புவதற்கான கால அவகாசம் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதிவரை அமைச்சினால் வழங்கப்பட்டிருந்த நிலையில் ; இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே  அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமைச்சர் இதுபற்றி மேலும் கூறியதாவது எல்லை நிர்ணய முறைப்பாட்டுக்குழுவின்  தலைவர் சாலிய பீரிஸ் தலைமையின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் செயற்பாடுகளைஇ விரைவாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டியுள்ள நிலையில் இக் குழு இது தொடர்பில் ஆராய்ந்து தனது இறுதி அறிக்கையை ஏப்ரல் மாதத்திற்குள் என்னிடம் கையளிக்கவேண்டும். இது வரை கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளில்  பெரும்பாலானவை விசாரிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனையவை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுவருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார் . புதிய எல்லைகள் தொடர்பில் ஏப்ரல் மாதத்திலேயே அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிடப்படும். இதன்பிரகாரம் ஜுன் மாதத்தில் தேர்தலை நடாத்துவதற்கே தீர்மானித்துள்ளோம். எவரின் கருத்துப்படியும் மார்ச் மாதம் தேர்தலை நடாத்துவதற்கு வாய்ப்பில்லை என்றார்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்