Skip to main content

றிசாத்தை தொடர்ந்து துரத்தும் பேரினவாதிகள்
“கலகொட அத்தே ஞானசார தேரர்”
இனவாதத்தின் மறு பெயர். முஸ்லிம் விரோத மொத்த வடிவம். BBSபொதுச் செயலாளர்.இவர் இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்தினார். குர்ஆனை தூசித்தார். பெருமானாரை பழித்தார். ஹலால், ஹராம், பர்தாவுக்கு தடை ஏற்படுத்த பிரயத்தனப்பட்டார். இனவாதத்தைக் கிளப்பி பெரும்பான்மையினரை உசுப்பேற்ற எத்தனித்தார். வில்பத்துவை அழித்து முஸ்லிம்கள் குடியேறுவதாக கதை அளந்தார். அமைச்சர் றிசாத் பதியுதீன் இயற்கை வளத்தை அழித்து, அரபுக் காலனி அமைப்பதாக அபாண்டப் பழிகளை சுமத்தினார். அவரது அமைச்சுக்குள் நுழைந்து அட்டகாசங்களில் ஈடுபட்டார். மறிச்சுக்கட்டி, கரடிக்குளி ஆகிய முஸ்லிம்களின் பூர்வீகக் காணிகளில், அகதி முஸ்லிம்கள் அமைத்திருந்த கொட்டில்களை பிடுங்கி எரித்து காட்டுத் தர்பாரில் ஈடுபட்டார். மஹிந்தவின் நிழலில் நின்றுகொண்டுமுஸ்லிம்களை பாடாய்ப்படுத்தினார்.
இத்தனை அட்டகாசங்களை அவர் மேற்கொண்திருந்த போதும் நிறைவேற்று அதிகாரம் கைகட்டி வேடிக்கை பார்த்தது. காக்கிச் சட்டைக்காரர்களும், கறுப்புச் சட்டைக்காரக்ளும், மஞ்சள் உடைக்கு அஞ்சினர். நீதி செத்து, அதர்மம் ஓங்கி நின்றது. முஸ்லிம்கள் அல்லாஹ்வை நம்பினர். அவனிடம் அழுது, தொழுது இறைஞ்சினர். மஹிந்த கவிழ்ந்தார். நல்லாட்சி மலர்ந்தது. நல்லாட்சியில் தேரர் இடைக்கிடை முஸ்லிம்களை சீண்டிப் பார்த்தார். எனினும், அவருக்கெதிராக முஸ்லிம்கள் பெரும் எடுப்பில் சட்டத்தை நாடவில்லை.
இவ்வாறு முஸ்லிம்களை தொடர்ந்து புண்படுத்தி வந்த தேரர், இறுதியாக வாழை மரத்தில் தனது சொண்டை கொத்தியதால் இன்று அதனைக் கழற்ற முடியாது சிறைக்கம்பி எண்ணுகின்றார்.
இராணுவத்தால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படும்,பெரும்பான்மையின ஊடகவியலாளர் ஒருவரின் மனைவி ஒருத்தியை தாறுமாறாக, கேவலமாக திட்டியமை, நீதிமன்றத்தை அவமதித்தமைஆகிய சம்பவங்களால்  அவருக்கு இப்போது நேர்ந்திருக்கும் கதியே இது. “வாய்க்கொழுப்பு சீலையால் வடிகின்றது”
இந்த விவகாரம் தொடர்பில் கைதாகிய தேரரும் பெரும்பான்மை இனம், அவரைக் கைது செய்தவரும் பெரும்பான்மை இனம், அந்தக் கைதுக்கான காரணங்களில் சம்பந்தப்பட்ட பெண்ணும் பெரும்பான்மை இனம். நீதி வழங்கியவரும் பெரும்பான்மை இனம். எனினும், இந்த விவகாரத்தில் எந்த சம்பந்தமும் இல்லா,த சிறுபான்மை முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது பேரினவாதிகள் அபாண்டமான பழிகளைச் சுமத்தி, குருநாகல் கலேவெல போன்ற சிங்களப் பிரதேசங்களில் சுவரொட்டிகளையும், துண்டுப் பிரசுரங்களையும் வெளியிட்டுள்ளனர். “மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப்” போட்டுள்ளனர்.
றிசாத் என்றால் இன்று இனவாதிகளுக்கு ஒருவேப்பங்காய். முஸ்லிம் சமூகத்தில் முள்ளந்தண்டுள்ள தலைவராக, சமூக பிரச்சினைகளை தட்டிக் கேட்கும் திராணியுள்ள அரசியல்வாதியாக அவர் விளங்குவதே இந்தக் கசப்புக்கு காரணம். கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை. மீனுக்கு தலையும், பாம்புக்கு வாலும் காட்டும், சமூகத்திலுள்ள முஸ்லிம் அரசியல் தலைமை விலாங்குகள் போல் அவர் இருப்பதில்லை. அதுதான் இந்த சர்ச்சைக்குள்ளே அவரையும் இழுத்துப் போட்டு,அதனால் ஏற்படும் அழுத்தத்தின் மூலம், எவ்வாறாவது சிறைக்குள் இருக்கும் தங்கள் தலைவனை விடுவிப்பதே பேரினவாதிகளின் திட்டம்.
நீதிமன்றத்துக்கு கல்லெறிந்த,வில்பத்துவை அழித்து நாசமாக்கிய  றிசாத்தை வெளியே விட்டு விட்டு, சிங்கள சமூகத்தின் விடிவுக்காகவும், நாட்டுக்காகவும் போராடிய இராணுவ வீரர்களுக்காவும் குரல் கொடுத்த தேரரை சிறைக்கு உள்ளேயும் வைத்திருப்பதாக இவர்கள் ஒரு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். முகநூல்களிலும், இணையத்தளங்களிலும் றிசாத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை இனவாதிகள் பெருமளவில் பரப்பி வருகின்றனர். பெரும்பான்மை இனத்தை இனவாதத்தால் உசுப்பி ஞானசார தேரர் வெளியே எடுப்பதுதான் இவர்கள் மேற்கொண்டுள்ள தந்திரம்.
பாதிக்கப்பட்ட உப்புக்குளம், கோந்தைப்பிட்டி மக்கள் தமக்கு நீதி வழங்குமாறு, மன்னார் நீதிமன்றத்தின் முன்களேபரத்தில் ஈடுபட்ட போது றிசாத் கொழும்பிலேதான் அப்போது இருந்தார். தான் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பிரதேசத்தில் அசம்பாவிதங்கள் நடந்ததை கேள்வியுற்று, அவர் கொழும்பிலிருந்து அங்கு விரைந்தார். இந்த மன்னார் நீதிமன்ற சம்பவத்துக்கும், றிசாத்துக்கும் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. நீதி மன்ற அவமதிப்பு வழக்கு என்ற பொய்யான குற்றச் சாட்டு நீதிமன்றத்தில் அவருக்கெதிராக தாக்கல் செய்யப்படிருந்த போதும் அவர் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார். றிசாத்தை எப்படியாவது சிறைக்குள் தள்ள வேண்டுமென்று இனவாதிகளும் அவரது அரசியல் எதிரிகளும் முயற்சிகளை மேற்கொண்ட போதும் எதுவுமே பலிக்கவில்லை.
அதேபோன்று வில்பத்துவில் ஓரங்குல நிலமேனும் முஸ்லிம்களால் அபகரிக்கப்பட்டிருந்தால், இயற்கை வளம்  அகதி முஸ்லிம்களால் அழிக்கப்பட்டிருந்தால் தான் பதவி விலகுவேன் என அவர் பகிரங்கமாக சூளுரைத்தார். வில்பத்து விடயத்திலும் இனவாதச் சூழலியலாளர்கள் பல்வேறு வழக்குகளை தொடுத்திருந்த போதும் எதையுமே நிரூபிக்க முடியாது தடுமாறுகின்றனர்.
தொலைக்காட்சி ஒன்றில் அமைச்சருடன் விவாதத்துக்கு வந்த இன்னுமொரு மஞ்சள் காவி மூக்குடைப்பட்டுப் போனதை பெரும்பான்மை உலகம் நன்கறியும்.

சட்டம் தற்போது தனது கடமையை சரிவரத்தான் செய்கின்றது. மஹிந்தவின் ஆட்சியில் செத்துக் கிடந்த நீதி இப்போதுதான் தழைக்கத் தொடங்கி இருக்கின்றது. தற்போது நடைபெற்று வரும் சம்பவங்கள் இதற்கு நல்ல உதாரணம். 

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய