காதலர் தினம்

Padiyathalaavai farook
******************
 
காமக்கூத்தை
கச்சிதமாய்க்  கொண்டு
ஒரு
கறுப்புப்  பக்கத்தை
காட்சிப்  படுத்தும்
இன்றைய. தினம்  !

அந்நிய. கலாசாரம்
அறிமுகப்  படுத்திய
அனாச்சாரக்  கேட்டின்
அடையாளத்  தினம்  !

ஆசைக்கு  அடிமையாகி
உணர்ச்சித்  தீயில்
உள்ளங்களை  வீழ்த்திக்  கொண்ட
வீணர்களின்
விடியல்  தினம்  !

கடற்கரை  பூங்கா
கல்லூரி  கடைத்தெருவென
கலந்து  மகிழ்ந்ததது
கருவாக்கி  உருவாக்கி
கற்புக்கு  கல்லெறிந்து  கொண்ட
களியாட்டத்  தினம்  !

காதலுக்கு   கண்ணில்லையென்ற
காமத்  தத்துவத்தை
கையிலெடுத்து
அரங்கேற்றி  மகிழும்
அடையாளத்  தினம்  !

வெள்ளைத்தோல்கள்
விரித்த.  வலையில்
வண்ணப்  பூக்களும்
வாழ்த்தட்டைகளும்
வியாபாரமாகி
காதலர்களின்
காசைப்  பறிக்கும்  !

பெற்றோர்களின்  கண்களில்
மண்ணைத்  தூவி
காய்  நகர்த்திக் கொண்ட
காட்சித்  தினம்  !

காதலர்  தினம்
கண்டு  கொள்ளக்கூடாத
ஒரு
கறுப்புத்  தினம்  !

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்