ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்திக் கூறினார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ, வேரகலவில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தௌிவாவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதுடன், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவுவதாகவும் முற்போக்காக இருப்பதை விட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார். எனினும், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் விக்ரமசிங்க உள்ள
அஷ்ரப் ஏ சமத்
பதில் சுகாதார அமைச்சர் பைசால் காசீம் நேற்று (10)ஆம் திகதி புதன்கிழமை நடைபற்ற அமைச்சரவையின்போது அம்பாறை மாவட் விவசாயிகளின் நெல் கொள்முதல் மற்றும் களஞ்சிய சாலை சம்பந்தமான பிரேரனை ஒன்றை முன்வைத்தாா்.
இலங்கையில் நெல் உற்பத்தியில் முதல் மாவட்டமாக அம்பாறை மாவட்டமே முன்னணி வகிக்கின்றது. அடுத்த ஒரு சில வாரங்களுக்குள் அம்பாறை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தமது வயல்களிலிருந்து நெல்லைஅறுவடை செய்து அரசுக்கு நெல்லை விற்பனை செய்ய உள்ளனா். இருந்தும் அம்பாறை மாவட்டத்தில் பாரிய நெல் களஞ்சிய சாலைகள் இல்லாமல் உள்ளது . இதனால் விவசாயிகளின் தமது அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் மாதக் கணக்கில் காத்துக் கொள்ள வேண்டியுள்ளது. தமது நெல்லை உரிய காலத்திற்கு விற்று தமது விவசாயத்திற்காக செய்த செலவினங்களை செலுத்த முடியாமல் பல இன்னல்களை எதிா்நோக்க வேண்டியுள்ளது. ஒழுவிலில் புதிதாக நிரமாணிக்கப்பட்ட களஞ்சிய சாலை கடந்த 2 வருட காலமாக எவ்வித பாவணையுமின்றி மூடிக் காணப்படுகின்றது.
நெல் கொள்வனவு சாலை ,களஞ்சியம் பொறுப்பாக உளள கிராமிய பொருளாதார அமைச்சா் பீ ஹரிசன் அவா்களுக்கும் துறைமுக அபிவிருத்தி அமைச்சா் அருஜன ரணதுங்க ஊடாக ஒழுவில் துறைமுகத்தில் உள்ள உள்ள களஞ்சிய சாலையை நெல் களஞ்சியமாக பாவிப்பதற்கும் பதில் அமைச்சா் பைசால் காசீம் பிரேரனையை ஒன்றை நேற்று முன்தினம் (10)ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவையில் முன் வைத்தாக கூறினாா்.
இவ் விடயம் சம்பந்தமாக கிராமிய பொருளாதார அமைச்சின்் செயலாளா் துறைமுக அபிவிருத்தி அமைச்சின் செயலாளா்கள் நெல் கொள்வனவு களஞ்சியம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இன்றும் (11)ஆம் திகதி பதில் அமைச்சா் பைசால் காசிமுடன் கலந்துரையாடி மேற்கொண்ட நடவடிக்கையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் எதிா்காலத்தில் அறுவடை செய்யும் நெல்லை அரசுக்கு விற்கும் போது நெல் சந்தைப்படுத்தும் சபை ஓழுவில் துறைமுகத்தினை களஞ்சியமாக பாவிப்பதற்கு இரண்டு அமைச்சுக்களின் அதிகாரிகள் இணக்கம் காணப்பட்டதாகவும் மேலும் பதில் அமைச்சா் பைசால் காசீம் தெரிவித்தாா்.
ஏற்கனவே ஹம்பாந்தோட்டை விவசாயிகளின் நெல்லை மத்தளை ராஜபக்ச விமாண நிலையத்தின் களஞ்சியத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments
Post a comment