වේල්ල වීදිය කාන්තා මළ සිරුර : සැකකරු ඇතුළු සැඟවුණු සියල්ල හෙළි වෙයි ( ( Photos ) මවිබිම දැන් ම තාරක සම්මාන් කොළඹ , වේල්ල වීදියේදී ගමන් මල්ලක දමා තිබියදී සොයාගත් හිස නොමැති කාන්තා මළ සිරුර කුරුවිට , තෙප්පනාව ප්රදේශයේ පදිංචි 30 හැවිරිදි අවිවාහක කාන්තාවකගේ බවට හඳුනාගෙන තිබේ . නියෝජ්ය පොලිස්පති , පොලිස් මාධ්ය ප්රකාශක අජිත් රෝහණ මහතා සඳහන් කළේ , අදාළ මළ සිරුර ඩී.එන්.ඒ. පරීක්ෂණයක් සඳහා යොමු කර එය එම කාන්තාවගේ ද යන වග තහවුරු කරගැනීමට කටයුතු කරන බවය . එමෙන් ම , අදාළ ගමන් මල්ල රැගෙන ආ සැකකරු පිළිබඳව ද තොරතුරු අනාවරණය කරගෙන ඇති අතර පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේ . සැකකරු බුත්තල පොලිසියට අනුයුක්තව සේය කරන නිවාඩු ලබා සිටි උප පොලිස් පරීක්ෂකවරයෙකු බවය . එම කාන්තාව සමග ඇති කරගත් අනියම් සම්බන්ධතාවයක් හේතුවෙන් ඇති වූ ප්රතිඵලයක් ලෙස මෙම ඝාතනය සිදුව ඇති අතර , සැකකරු අත්අඩංගුවට ගැනීමට විශේෂ පොලිස් කණ්ඩායම් යොදවා ඇති බව ද පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේය . සැකකරු බඩල්කුඹුර ප්රදේශයේ පදිංචිකරුවෙක් බවට පොලිසිය හඳුනා ගෙන තිබේ . කෙසේ වෙතත් , මේ වන විට සැකකරු නිවසින් බැහැරට ගොස් ඇතැයි වාර
எம்.எம்.எம்.நூறுல்ஹக்
சாய்ந்தமருது-05
நமது நாட்டின் அரசியல் களத்தில் மிகவும் மும்முரமாகவும் பரபரப்பாகவும் சுவாரஷ்யமாகவும் பேசப்பட்ட அரசியலமைப்பு மாற்றம் அல்லது சீர்திருத்தம் எனும் அம்சம் சிறுபான்மைச் சமூகங்களான தமிழர்களிடமும் முஸ்லிம்களிடமும் பிசுபிசுத்துப்போன ஒன்றாகவும் இன்று மாறியிருக்கின்றது.
நமது அரசியலமைப்பின் மாற்றம் அல்லது சீர்திருத்தம் என்பதன் மையமே இனப்பிரச்சனையை தீர்ப்பதின் அடிப்படையைக் கொண்டதென்று கூறினால் அது மிகையாகாது.
ஏனெனில் நமது நாட்டின் இனப்பிரச்சனையை கூர்மைப்படுத்திய,தீவிரப்படுத்திய காரணங்கள் பல இருந்தாலும் அவற்றில் நமது நடைமுறை அரசியலமைப்பு கொண்டிருக்கும் சில உள்ளடக்கங்கள் தொடர்புபட்டிருப்பது மிகவும் வெளிரங்கமானது.
அரசியலமைப்பின் மாற்றம் அல்லது சீர்திருத்தம் எனும் கதையாடல் மீதும் நல்லாட்சி மீதும் அதிகரித்த நம்பிக்கையை வைத்திருந்த சிறுபான்மைச் சமூகத்தினர்கள் இன்று மனச்சோர்வடைவை நோக்கி நகர்ந்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தினை ஏற்படுத்தியிருக்கின்றது.
நமது நாட்டின் அரசியலமைப்பு கொண்டிருக்கும் ஒற்றையாட்சி முறைமை அதற்குள்ளான அதிகார பகிர்வினைக் குறிக்கும் மாகாண சபைக் கட்டமைப்பு,பௌத்த மதத்துக்கான முன்னுரிமையும் முதன்மைப்படுத்தலும் மற்றும் மொழியுரிமை சமத்துவமில்லாமை போன்ற விடயங்கள் பல சங்கடங்களை தமிழர்களும் முஸ்லிம்களும் சந்தித்த இடரல்கள் நிறைந்து காணப்பட்டமை குறிப்பிட்டுக் காட்டக்கூடிய ஒரு பக்கமாகும்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை தீர்வு விடயத்தில் வடக்கு,கிழக்கு ஆகிய
இரு மாகாணங்களும் இணைந்த வகையிலான தீர்வையே கோரி நிற்பதன் வரலாறு நீண்டது.இவ்வாறான சூழ்நிலையில்
இன்றைய நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கம் இந்த விடயங்கள் குறித்து தமது நிலைப்பாடுகளை அறிவிப்புச் செய்துள்ளது.
ஒற்றையாட்சிக்கு அப்பாலான தீர்வை நோக்கி நல்லாட்சி அரசாங்கம் செல்லாது என்பதனையும் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் முன்னுரிமை அந்தஸ்த்தில் எவ்விதமான குந்தகங்களோ அந்தஸ்த்து இழப்போ மாற்றமோ நேரிடாது என்பதை ஓங்கி ஒலிக்கச்செய்திருக்கின்றது,மற்றும் வடக்கும் கிழக்கும் இணைக்கப்படமாட்டாது என்கின்ற உறுதிமொழிகளை மிகவும் பலமாக இன்றைய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான உத்தரவாதங்கள் அரசாங்கத்தின் கீழ் மட்டத்திலிருந்து புறப்பட்டதற்கு அப்பால், இன்றைய நல்லாட்சியின்
முக்கிய பங்காளர்களும் பொறுப்பானவர்களுமான அதிமேதகு ஜனாதிபதி மைத்திறிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமிசிங்க ஆகிய இருவரும் ஏறத்தாள ஒன்றுபட்ட கோணத்தில் இக்கருத்தாடல்களை பரப்புரை செய்திருப்பதனால்,இந்நிலைப்பாடு இன்னும் உரமூட்டப்பட்ட உறுதிப்படுத்தலாக பார்க்கவைக்கின்றது.
சிறுபான்மைச் சமூகங்களான தமிழர்களும் முஸ்லிம்களும் என்னதான் நாட்டின் நலன் என்ற கோட்பாட்டில் எவ்வளவுதான் இறங்கி வந்தாலும் மேற்படி சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களில் தேவைப்படும் திருத்தம் நிறைவேறாது என்பதை உறுதிப்படுத்துவதையும் இதன் மூலம் நாம் தெளிவாக அவதானிக்க முடியும்.
இவ்வாறான சூழ்நிலைகள் எதனையும் உள்வாங்காது வாய்ப்பாட்டை மனனமிடுவது போன்று நமது முஸ்லிம்களின் அதிகரித்த ஆதரவைப் பெற்றதும் முஸ்லிம்களின் தனிக்கட்சி முறைமையின் முதன்மையானதுமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தரித்து நிற்பதுதான் முஸ்லிம் சமூகத்துக்கு ஆபத்தானது என்பதை அச்சத்தோடு நாம் பார்க்க வேண்டியுள்ளது.
ஏனெனில் அண்மையில் இலங்கை வந்துள்ல இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதன் பொதுச் செயலாளர் எம்.ரீ. ஹஸனலி,பிரதித் தலைவரும்
கிழக்கு மாகாண சபை முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் பிரதிச் செயலாளரும் கல்முனை மாநகர சபை முதல்வரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான நிஸாம் காரியப்பர்,பிரதி அமைச்சர் பைஸல் காசிம் ஆகியோர் சந்த்தித்திருந்தனர்.
அந்த சந்திப்பின்போது வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்ட நிலையிலான தீர்வொன்றினை காண்பதற்கு இந்தியா முன்வருமானால் அதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிபந்தனையுடன் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தமை ஊடகங்கள் வாயிலாக அறியக்கூடியதாக உள்ளது.
அதாவது வடக்கு கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களுக்கான தனி அலகு ஒதுக்கப்படவேண்டும் என்றும் இங்கு சமமான அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தும் வகையில் இந்த சந்திப்பை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கையாண்டிருப்பதனை நமக்கு எடுத்துக்காட்டுகின்றது.
உண்மையில் நமக்கென்று ஒரு அலகு வேண்டும் என்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விட்டுக்கொடுப்புக்கு வரவில்லை என்பது முஸ்லிம்களைப் பொறுத்தவரை ஆதரிக்க வேண்டிய கருத்துத்தான். ஆனால் வடக்கு,கிழக்கு ஆகிய
இவ்விரு மாகாணங்களையும் இணைத்து தீர்வுகாணப்படும்போதுதான் முஸ்லிம்களுக்கான அலகு தரப்பட வேண்டும் என்கின்ற முன் நிபந்தனை முன்னிறுத்தியதாக இது அமைந்திருக்கின்றது.
இதில் நாம் பின்வரும் இரண்டு விடயங்களை நிறுத்துப்பார்த்தால் இவ்வாறு கூறுவதிலிருந்து தவிர்த்து அதனை வேறுவிதமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்திருக்க வேண்டும் என்பதை அழுத்திச் சொல்ல வேண்டிய நிலையை நமக்கு ஏற்படுத்தியிருக்கின்றது
இனப்பிரச்சனைக்கான தீர்வின் நகர்வு மாகாண சபைகளுக்கான அதிகாரப்பகிர்வை மையப்படுத்தியே பகிரப்படும் என்பது உறுதியானது.ஆனால் இந்த மாகாண சபை என்பதும் அதிகாரப்பகிர்வு சமஷ்டி முறைமையிலா அல்லது ஒற்றையாட்சி வகையிலா என்பதில்தான் கருத்து வேறுபாடு அல்லது உறுதி செய்யப்பட முடியாத நிலையாக இன்று இருக்கின்றது.
மாகாண சபைக்குத்தான் அதிகார பரவலாக்கள் வரும் என்பதில் சந்தேகப்படத் தேவையில்லை.ஏனெனில் இப்போதிருக்கும் மொத்தமான ஒன்பது மாகாண சபைகள் என்றாலும் கூட அதிகாரப்பகிர்வு என்பது மாகாணத்துக்கே வந்தடையப் போகின்றது.
ஆகவே வடக்கு,கிழக்கு மாகாணங்கள்
இணைந்திருந்தாலும் அல்லது பிரிந்திருந்தாலும் அது முஸ்லிம்களுக்கான ஒரு தீர்வாக அமையப்போவதில்லை.அதாவது முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை தேர்ந்துகொள்ளும் வகையில் ஒரு மாகாணம் உருவாக்கப்பட்டால்தான் சமாந்தரமான அதிகாரப் பகிர்வை முஸ்லிம் மக்களும் அடைந்துகொள்ள முடியும்.
இதற்கு ஏற்றவகையில்அமைந்திருக்கும் ஒரு மாகாணப் பிரிப்பு இடம்பெறாது முஸ்லிம்களின் அதிகாரத்தைக் கொண்டதாக வரும் வகையில்முஸ்லிம்களைப் பெரும்பான்மையாக உள்ளடக்கி ஒரு மாகாணப் பிரிப்பு அவசியமாக உருவாக்கப்பட வேண்டிய தேவை இது விடயத்தில் இருப்பதை நாம் நன்கறிவோம்.அப்படியிருக்கையில் இப்படி வடக்கு,கிழக்கு இணைக்கப்பட்டால்தான்
என்ற சொல்லாடல் இன்று மீளாய்வுக்கும் திருத்தத்துக்கும் உரிய ஒன்றாகவே இருப்பது மிகவும் வெளிப்படையானது.
முஸ்லிம்களின் உரிமைகள் விடயத்தில் நீண்டகாலமாக அக்கறை காட்டிவரும் கட்சி என்ற வகையிலும் இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் உருவாக்கத்திலும் அதன் பங்களிப்புகளிலும் ஆரம்பம் தொட்டு இணைந்திருக்கும் ஒரு கட்சி என்ற வகையிலும் இதுகுறித்த மிகுந்த தெளிவுடன் பேசவும் கேட்கவும் உரித்துடையவர்கள் நாம் என்பதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மறந்துவிடக்கூடாத ஒரு பக்கமாகும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் இந்த வகையில் நாம் எதிர்பார்க்க வேண்டிய உரிமை நமக்கு அதிகம் இருக்கின்றது/.ஏனெனில் இலங்கை முஸ்லிம்கள் தனியான முஸ்லிம் கட்சி ஆதரவில் இக்கட்சியை முதன்மைப்படுத்தி ஆதரித்து வந்துள்ளனர்.ஆதலால் அவர்கள் பொறுப்புக்களை சரியாக நிறைவேற்றுவதிலிருந்து நழுவிச்செல்லும் போக்கை கடைப்பிடிப்பது முறையல்ல.
அதேநேரம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனும் இந்தியா வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து தமது பங்குக்கு” இனப்பிரச்சனைத் தீர்வில் இந்தியாவின்
பங்களிப்பு இருப்பதனால் எந்த இனமும் பாதிக்கப்படாத வகையில் குறிப்பாக முஸ்லிம்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வினை வழங்குவதற்கு இந்தியா உதவ வேண்டும்” என்ற கோரிக்கையை
விடுத்துள்ளார்.
இந்த அனுகுமுறை நல்லதுதான்.தனித்தனியாக சந்திப்பதற்கு அப்பால் முஸ்லிம் தனிக் கட்சிகள் என்ற வகையில் தீர்வு விடயங்களில் ஒன்றுபட்டு கலந்துரையாடி ஒருமித்த கோரிக்கைகளாக வலியுறுத்தும் பாங்குதான் இன்று நமது பலத்துக்கு அவசியப்படுகிறது.
இதனை உணர்ந்து அரசியல் முரண்பாடுகளையும் தேர்தல் கால கசப்புணர்வுகளையும் ஒரு புறம் ஒதுக்கிவிட்டு பொதுத் தீர்வுகளில் ஒன்றுபட்டு செயற்படும் வகைகுறித்து சிந்திக்கவேண்டிய தேவை அவர்களுக்கும் உண்டு என்பதை உணரவேண்டியுள்ளது.
இவ்வாறான ஒருமித்த கருத்துக்களுடன் அரசியல் அதிகாரமிக்க நமது கட்சிகள் ஒன்றிணைந்து அரசாங்கம்,தமிழர் தரப்பு
மற்றும் பேசப்பட வேண்டிய இடங்கள் என இணம்காணப்படும் தரப்புக்களுடன் உறுதியாகவும் தெளிவாகவும் நமது பிரச்சனைகளுக்கான தீர்வுகளை சரியாக அடைந்துகொள்வதற்கு தேவையான பொறிமுறைகளை கட்டமைத்துக்கொள்ள வேண்டும்.
இத்தகைய முன் நகர்ச்சியில் நாம் காட்டும் அக்கறையின்மை என்பது நமது சமூகத்தின் எதிர்காலத்தை பின்னடைய செய்வதற்கு வழியாகிவிடும் அபாயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள கடமைப்பட்டுள்ளோம். குறிப்பாக நமது முஸ்லிம் அரசியல் தலைமைகள் இதனை அதிகம் உள்வாங்கிக்கொள்வது அவசரமான அவசியமாகும்.
அரசியலமைப்புத் திருத்தம் அல்லது மறுசீராக்கம் என்பது உடனடியாக இனப்பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் கொண்டுவரப்படுமா என்ற ஐயமும் புதிதாக அரசியலமைப்பு வரையப்படுமா என்கின்ற சந்தேகமும் பெரிதாக இப்போது மேற்கிளம்பியிருக்கின்றது.
இதற்கப்பால் முஸ்லிம் கட்சிகளின் பேரம்பேசும் வல்லமையை குறைத்துவிடும் இயங்குதளத்தை உடன் ஏற்படுத்திக்கொள்ளும் திட்டம் மட்டும் அரசியலமைப்பு மாற்றம் என்ற வகையில் நடந்துவிடுவதற்கான வாய்ப்பு வேரூன்றியிருக்கின்றது.
அரசியலமைப்பு மாற்றம் என்ற அடிப்படையில் அல்லது நடைமுறை அரசியலமைப்புக்கான இருபதாவது திருத்தம் என்ற மாதிரியில் தேர்தல் முறைமை மாற்றியமைக்கப்படும் விடயம் மிகவும் மும்முரமாக நடைபெறும் சாத்தியம் இருக்கின்றது.
இதற்கு இன்றைய தேசிய அரசாங்கத்திலுள்ள பெரும்பான்மை சமூகம் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் பாராளுமன்றத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அணியிலுள்ள பெரும்பான்மைச் சமூக நாடாளுமன்ற உறுப்பினர்களும் இசைவாக செயற்பட துடித்துக்கொண்டும் இருக்கின்றனர்.
முஸ்லிம் மக்களிடமோ முஸ்லிம் அரசியல் வாதிகளிடமோ முஸ்லிம் பிரதிநிதிகளிடமோ எந்த தயவையும் பெறதா நிலையில் கலப்பு முறைமையைக் கொண்ட தேர்தல் சீர்திருத்தம் அமுலுக்கு கொண்டுவந்துவிடக் கூடிய சாத்தியமும் அதற்கான முன் நகர்வுகளும் இருந்துவருகின்றது.இன்றைய தேசிய அரசாங்கத்தில் முன்னோடியான 100 நாள் நல்லாட்சி முன்னெடுப்பில் கூட மிகவும் வலுப்பெற்று இந்த விடயம் காணப்பட்டதாகும்.இதற்கு உதராணமாக பின்வரும் நிகழ்வொன்றை குறிப்பிட முடியும்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட முறைமையில் காணப்பட்ட சர்வாதிகார போக்குக்கு இட்டுச் செல்லக்கூடிய இரண்டு தடவைக்கு மேல் ஒரே நபர் ஜனாதிபதியாக பதவி வகிப்பது அமைந்துள்ளது. இதனால் இரண்டு தடவைகள் பதவி வகித்த ஒருவர் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் ஈடுபடக் கூடாது என்பதைமீளவும் கொண்டுவருவதற்காக பத்தொன்பதாவது திருத்தச் சட்டத்தில் இணைத்திருந்தனர்.அதுமட்டுமன்றி நிறைவேற்று அதிகாரங்களை குறைக்கும் வகையில் கூட அதில் சில முன்னேற்பாடுகளையும் உள்ளடக்கியிருந்தனர்.
உண்மையில் ஜனாதிபதி தேர்தலின் போது சிறுபான்மைக் கட்சிகள், சிறுபான்மைச் சமூகங்கள்
தமது தேவைகளை,உரிமைகளைப் பெற்றுக்கொள்ளும்
வகையில் சில பேரம் பேசல்களை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்கள் வருகின்ற போது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையினூடாக தீர்த்துவைக்கின்ற ஒரு சாதக நிலை இருந்ததென்பதும் நமது கவனங்களுக்கு அப்பாலானதல்ல.இதனை இல்லமலாக்குவதிலும் நிறைவேற்று ஜனாடதிபதி முறைமை ஒழிப்பில் மறைமுகமாக இருந்துவருகின்ற ஒரு விடயமுமாகும்.
அதேபோன்று சிறிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சேர்த்தும் தனிக்கட்சி முஸ்லிம் நாடாளுமன்ற பிரதிநிதிகளை இணைத்துக்கொண்டும் அரசாங்கம் அமைகின்ற ஒரு சூழ்நிலை இனிவரும் காலங்களில் வந்துவிடக் கூடாது என்பதில் கொண்ட குறியான முயற்சியின் ஒரு முன்னேற்பாடே கலப்பு தேர்தல் முறைமையாகும்.
அதுமட்டுமன்றி குறிப்பாக முஸ்லிம்களாகிய நமது மக்கள் தொகைக்கு ஏற்றவகையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் கூட தொகுதிகளை வகுக்க முடியாத அநியாயம் நிகழ்ந்துவிடுவதற்கான சந்தர்ப்பங்களும் நம்மை எதிர்கொண்டிருக்கின்றது.
இத்தகைய இழப்பீடுகளை நமக்கு தரக்கூடிய தொகுதி நிர்ணயத்தை கிடப்பில் போட்டுவிட்டு இப்போதைய அரசியல் தீர்வு அல்லது அதிகாரப் பரவலாக்கம் என்பதில் மட்டும் நமது முழுக்கவனத்தைச் செலுத்தாதும் இரண்டையும் ஒரேநேரத்தில் நமது கவனங்களுக்குள் உள்வாங்கி இவ்விரு விடயங்களிலும் சமகாலத்தில் நமது சமூகமத்தின் மீதும் நமக்கான கட்சிகள் மீதும் காலத்தின் கட்டாயமாக முன்னிறுத்தியிருக்கின்றது.
இதற்கு இசைவாக நமது சமூகத்தில் காணப்படும் துறைசார்ந்த நிபுணத்துவ ஆளுமைகளை முதலில் அடையாளம் கண்டு அவர்கள் இவ்விரு விடயங்கள் குறித்து ஆராய்ந்து காணப்படுகின்ற தீர்வு முன்னகர்ச்சிகளை இன்றைய அரசியல் அதிகாரத்துவமுடையதாக காணப்படுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,அகில இலங்கை
மக்கள் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் ஒன்றிணைந்து ஏற்படுத்தி சரியானதொரு கொள்கையை தீர்மாணித்து அதற்கேற்ற திட்டங்களை வகுத்துக்கொள்ள வேண்டும்.
அப்போதுதான் நமக்கு இன்று அவசியப்படுகின்ற விடயங்களை ஒருமித்தும் வலிமையாகவும் வலியுறுத்தி பெற்றுக்கொள்ளக்கூடிய சூழல்களை முன்னெடுப்பதுதான் நமது சமூகத்தினை வலுப்படுத்தக் கூடியதாகும்.
Comments
Post a comment