பிரதி அமைச்சர் பைசால் காசிம் - 68 வது சுதந்திர தின செய்தி.

(அஷ்ரப் ஏ சமத்)

சுகாதார, ஊட்டச்சத்து மற்றும்  சுதேச மருத்துவத்துறை பிரதி அமைச்சர் பைசால் காசிம் - 68 வது சுதந்திர தின செய்தி... 

இன்று கொண்டாடும் எமது நாட்டின் 68 வது சுதந்திர தின விழா சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக காண்கின்றேன். இன்று எமது நாட்டின் ஜனாதிபதியாக ஸ்ரீலங்கா சுகந்தர கட்சியின் தலைவரான அதிமேதகு மைத்ரிபால சிறிசேன அவர்களும், பிரதமராக ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களும் செயற்படுவது எமது நாட்டில் அரசியல் வரலாற்றில் புதிய பதிவை ஏற்படுத்திய விடயமாகும். இன்றைய தேசிய அரசாங்கம் எமது ஜனாதிபதியின் தலைமையில் எமது நாட்டின் இரு  பெரும்பான்மை கட்சிகளும் ஒன்று சேர்ந்த அமைப்பில், இன்றைய தேசிய அரசாங்கத்தை அமைத்து எதிர்புதிர் அரசியலில் இருந்து விடுபட்டு நாட்டு மக்களின் நலனில் மாத்திரம் அக்கறை கொண்டு பொதுவான செயற் திட்டமொன்றின் அடிப்படையில் இன, மத, சாதி பாகுபாடின்றி சகோதரத்துடனும், நாட்டில் சமமான வாய்ப்புக்களை சகல துறைகளிலும் சகலரும் பெற்ற சமத்துவத்தின் அடிப்படையிலும்  எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்விற்காகவும் எமது ஜனாதிபதியின் வழிகாட்டலில் எமது நாடு முன்னெடுத்து செல்லப்படுவது குறிப்பிடக்கூடிய விடயமாகும்.

இத்தருணத்தில் இவ் அரசாங்கத்தின் சுகாதார துறை பிரதி அமைச்சர் என்ற வகையிலும், கிழக்கு மாகாண திகாமடுல்லை பாராளுமன்ற பிரதிநிதி  என்ற அமைப்பிலும் இன்றைய எமது ஜனாதிபதி, பிரதமர் அவர்களுடைய ஆட்சியின் கீழ் சகல இன மக்களும் ஒற்றுமையாகவும், சகோதரத்துவத்துடனும் நாட்டை நேசிக்கும் நற்பிரஜைகளாக நாம் ஒவ்வொருவரும் எமது பங்களிப்பினை வழங்குவதற்கு இன்றைய சுகந்திர தினத்தில் உறுதி பூணுவோமாக.

இதேவேளை எமது ஜனாதிபதிக்கும் பிரதமர் அவர்களுக்கும் விசுவாசமாக எனது கடமையை முன்னெடுத்து செல்வதோடு அவர்களது பணி வெற்றிபெற எனது பங்களிப்பினை பூரணமாக வழங்க உறுதி கூறுவவனாக இன்றைய சுகந்திர தின விழாவிற்கு எனது நல்லாசிகளை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.. 

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்