மாத்தளை சாஹிரா தேசிய கல்லூறியின் 48வது வருட இல்லங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி


 
மாத்தளை சாஹிரா தேசிய கல்லூறியின் 48வது வருட இல்லங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி 06-02-2016 அன்று பாடசாலை மைதானத்தில் கல்லூரியின் அதிபா் திரு. இக்பால் அவா்களின் தலைமையில் மிக விமா்சியாக நடைப்பெற்றது. இவ்விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிக்கு பிரதம அதிதியாக விவசாய மாநில அமைச்சா் கௌரவ வஸந்த அலுவிஹார அவா்களும், அதிதிகளாக மாத்தளை மாவட்ட நகர பிதா அல் ஹாஜ் ஹில்மி கரீம், மத்திய மாகான சபை உறுப்பினா் அல் ஹாஜ் ஏ.எச்.எம் இப்றாஹிம், மாத்தளை சாஹிரா கல்லூரியின் பழைய மாணவரும் கிழக்கு மாகான சபை உறுப்பினருமான பொறியியளாலா் ஷிப்லி பாறூக், கல்வி மேலதிக வலயக் கல்விப் பணிப்பாளா் திரு.ஏ.ஜயபிரகாஷ், முஸ்லீம் பாடசாளை ஒருங்கிணைப்பாளர் (வலயக் கல்வி அலுவலகம்) அல் ஹாஜ் எம்.ஆர்.யு.றிழ்வான், மற்றும் பிற பாடசாலை அதிபா்கள், இக்கல்லூரி முன்னால் அதிபா்கள் போன்றோரும், இப்போட்டியை காண பழைய மாணவா்கள், பாடசாலை அபிவிருத்தி உறுப்பினா்கள், ஆசிரியா்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகளன அதிகமானோர் கண்டு களித்தனா். இப்பாடசாளை இல்லங்களான இக்பால், ஜாயா, அஸாட் மற்றும் ஜின்னா ஆகும். இப்போட்டியில் ஜாயா இல்லம் முதலாம் இடத்தையும் ஜின்னா இல்லம் இரண்டாம் இடத்தையும் அஸாத் இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றன. இதில் விஷேட அம்சமெனின் பழைய மாணவா்களான முசின், இஷாக் மற்றும் டீ.எம்.றிகாஸ் (NR Graphics) இவா்களால் வெளிநாடுகளில் இருக்கும் மக்களும் பார்க்கும்வன்னம் இணையத்தள மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 
 

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்