ஹக்கீமுக்கும், முஸ்லிம் காங்கிரஸிற்கும் ஒருபோதும் துரோகம் செய்யமாட்டேன் – டாக்டர் ஹபீஸ் Mp

Slmc Velichcham's photo.

__________________________________________________(ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்)
எனது சகோதரர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் முஸ்லிம் காங்கிரஸிற்கும் ஒருபோதும் துரோகம் செய்யமாட்டேன் என முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் எம்.பி. டாக்டர் ஹபீஸ் விடியலை தேடி இணையத்திற்கு தெரிவித்தார்.
இதுகுறித்து டாக்டர் ஹபீஸ் Mp சற்றுமுன்னர் தெரிவித்ததாவது, முஸ்லிம் காஹ்கிரஸ் என்னை நம்பி, எனக்கு தேசியப்பட்டியல் எம்.பி. பதவி வழங்கியது. அதனை உரிய வேளையில் ராஜினாமா செய்வேன். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
நான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணையப் போவதாக வந்த செய்தியை முற்றாக மறுக்கிறேன். அது ஒரு பொய்யான தகவல். ஒருபோதும் பல்டி அடித்து முஸ்லிம் காங்கிரஸிற்கு துரோகம் செய்யமாட்டேன்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இவ்வாறான தகவல் பரப்பப்படுகிறது. இவ்வாறான சித்து விளையாட்டுக்களுக்கு நான் ஒருபோதும் பலியாகிவிட மாட்டேன். எதிர்காலங்களிலும் கட்சித் தலைவருக்கும், கட்சிக்கும் முழு விசுவாசமாக செயற்படுவேன் எனவும் டாக்டர் ஹபீஸ் கடும்தொனியில் உறுதிபட கூறினார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்