இஸ்­லா­மிய புனித பயணம் மேற்­கொண்டு பயங்­க­ர­வாத குழுக்­களுடன் இணைவதாக தக­வல்கள்

மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்கு புனித பயணம் செல்வோர் பயங்­க­ர­வாத குழுக்­களுடன் இணைவதாக தக­வல்கள் கிடைத்­துள்­ளன என பாது­காப்பு செய­லாளர் கரு­ணா­சேன ஹெட்­டி­ராச்சி தெரிவித்துள்ளார்.
இலங்­கையில் முஸ்லிம் பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் இருப்­ப­தாக சர்­வ­தேச நாடு­களின் புல­னாய்வு தக­வல்கள் எமக்கு கிடைத்­துள்­ளன. அதற்­க­மைய நாமும் ஆராய்ந்து வரு­கின்றோம்.
எனினும் அண்­மையில் இலங்­கையை சேர்ந்த 36 முஸ்லிம் நபர்கள் இர­க­சி­ய­மாக சிரி­யாவை சென்­ற­டைந்­துள்­ளனர். அவர்­களில் பலர் ஐ.எஸ் பயங்­க­ர­வாத அமைப்பில் இணைந்­துள்­ள­தா­கவும் தக­வல்கள் கிடைக்­க­பெற்­றுள்­ளன.
அதேபோல் மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்கு இஸ்­லா­மிய புனித பயணம் மேற்­கொண்டு செல்­வ­தாக கூறிக் சிறு­வர்­களும், பெண்­களும், வய­தா­ன­வர்­களும் இவ்­வாறு பயங்­க­ர­வாத குழுக்­களை சென்­ற­டை­வ­தாக தக­வல்கள் கிடைத்­துள்­ளன.
எனினும் இவர்கள் அனை­வரும் ஒன்­றாக பய­னித்­தார்­களா, அல்­லது தனித்­த­னி­யாக பய­ணித்­தார்­களா என்­பது தொடர்பில் எமக்கு தெளி­வான தகவல் கிடைக்­க­வில்லை என குறிப்­பிட்டார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்