மாட்டிறைச்சி விடயத்தில் முஸ்லிம்கள் ஏன் முண்டியடிக்க வேண்டும். ?

மாட்டிறைச்சி விடயத்தில் முஸ்லிம்கள் ஏன் முண்டியடிக்க வேண்டும். கொஞ்ச காலத்துக்கு மாட்டிறைச்சி சாப்பிடாமல் இருப்போமே, மாடுகள் பெருகி அவர்களே இந்த சட்டத்தை எடுப்பார்களே என்றெல்லாம் சிலர் பதிவிடுகின்றனர். இத்தகையவர்கள் ஒரு விடயத்தை புரிந்து கொள்ள வேண்டும். மாட்டிறைச்சியை தடை செய்ய வேண்டும் என்பது எதற்காக ? மாட்டின் மீது உள்ள இரக்கத்துக்காகவா? இல்லை. அதற்கும் முஸ்லிம்களுக்கும் சம்பந்தம் உண்டு என்பதனால்தான். முள்ளிவாய்க்காலில் நாற்பதினாயிரம் மனித உயிர்களை கொன்று குவித்தவர்கள் மாட்டின் மீது இரக்கப்படுகிறார்கள் என்றால் இது சாத்தான் வேதம் ஓதுவதாகும்.
அதே வேளை மாட்டிறைச்சி தடைசெய்யப்பட்டு வெளிநாட்டிலிருந்து ஹறாமான மாட்டிறைச்சி வந்தால் கொஞ்ச காலத்துக்கு முஸ்லிம்கள் சாப்பிட மாட்டார்கள். போகப்போக அந்த ஹறாத்தையும் முஸ்லிம்கள் சாப்பிடுவர் என்பதை பேரினம் புரிந்து வைத்துள்ளது. கடந்த மஹிந்த ஆட்சியில் ஹலால் அனுமதி முத்திரை நீக்கப்பட்டது. முன்னரெல்லாம் கடைகளுக்கு போனால் ஹலால் லேபல் உள்ளதா என தேடித்தேடி வாங்கிய முஸ்லிம்கள் இப்போது அது பற்றி கவலையின்றி கண்டதையும் வாங்கி சாப்பிடுவதை காண்கிறோம். இது மாட்டிறைச்சியை உள்நாட்டில் தடை செய்து வெளிநாட்டு ஹறாமான இறைச்சியை முஸ்லிம்களுக்கு வழங்கி அவர்களின் ஈமானை இல்லாமலாக்கி பொருளாதாரத்தையும் கொள்ளையடிக்கும் முயற்சி என்பதால்த்தான் நாம் கடுமையாக எதிர்க்கிறோம். அத்துடன் நாட்டில் மாடுகள் பெருகினால் அதனை அடிமாட்டு விலைக்கு வாங்கி வெளிநாட்டுக்கு இதெ கொள்ளைக்கூட்டம் அரச ஒத்துழைப்புடன் ஏற்றுமதி செய்யும். பின்னர் அதே மாடுகள் ஹறாமாக அறுக்கப்பட்டு நாட்டுக்குள் வரும். கல்முனையில் பிடிக்கப்படும் மீன் கொழும்பு சென்று செமன் டின் மீனாக வருவது போல்.
ஏற்கனவே ஹலால் விடயத்தை மடத்தனமாக கைவிட்டோம். இப்போது இந்த உரிமையையும் கைவிட்டால் நமக்கிருக்கும் அத்தனை உரிமைகளும் பறிக்கப்படும். கடைசியில் உங்கள் பெயர்களை பண்டார என மாற்றுங்கள் என்று கூட சொல்லப்படலாம். இதில் என்ன மாற்றிவிட்டால் போச்சு என்று கூட இந்த சமூகத்தின் சிலர் சொல்லவும் கூடும். ஆகவே இது வெறும் மாட்டிறைச்சி பிரச்சினை என்று பார்க்காது முஸ்லிம் சமூகத்தின் உரிமை பிரச்சினை என்று பார்க்க வேண்டும். ஜனாதிபதி தனது கருத்தை வாபஸ் பெறும் வரை முஸ்லிம் சமூகம் ஒருமித்து குரல் எழுப்ப வேண்டும்.
-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்