சவூதி அரேபியா ஈரானுடான இராஜதந்திர உறவு??

ஈரானுடான இராஜதந்திர உறவுகளை சவூதி அரேபியா முறித்துக்கொண்டுள்ளதுடன் சவூதி அரேபியாவுக்கான ஈரான் தூதுவர் உட்பட ஊழியர்களை வௌியேற 48 மணி நேர கெடு வழங்கியுள்ளது.
ஈரானைச் சேர்ந்த ஷியா முஸ்லிம் மதகுரு உட்பட 46 பேருக்கு மரண தண்டனை வழங்கியதையடுத்தே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று சவூதி அரேபியாவுக்கான வௌிவிவகார அமைச்சர் அடெல் அல்- ஜுபைர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஈரானில் பணியாற்றும் சவூதி அரேபிய இராஜதந்திர அதிகாரிகளும் உடனடியாக வரவழைக்கப்பட்டுள்ளனர். மதகுருவின் தூக்குத்தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானின் தெஹ்ரான் நகரிலுள்ள சவூதி தூதரகம் தாக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டு ஷியா மதகுரு உட்பட 46 பேருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்