எனக்கு முஸ்லிம்னாலே பிடிக்காது"


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹு.

என்னுடைய பெயர் ஹாஜரா. நான் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்தவள். கிருஸ்த்துவப் பெண்ணாக திகழந்தேன். என் பெயர் ராஜபுஷ்பம். கிருஸ்துவ மதத்தில் அதிக பற்றுள்ளவளாக இருந்தேன். பருவப் பெண்ணாக இருந்தபோது அதிகமாக சர்ச்சுக்குப் போவேன். பிரார்த்தனை பண்ணுவேன். எனது தாய் இறந்த பிறகு எனது அக்காவின் வளர்ப்பில் வளர்ந்தேன்.

எனது அக்கா ஒரு கிருஸ்துவ பையனைப் பார்த்து திருமணம் செய்து வைத்தாள். எனது கணவருடன் பிறந்தவர்கள் 5 தங்கைகள். அதில் முதல் தங்கை எங்களுக்குத் தெரியாமலே இஸ்லாத்தில் இருந்திருக்கிறார்கள். அது தெரியாமலே எனக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்கள்.

சிறுவயதில் இருந்தே எனக்கு முஸ்லிம்னாலே பிடிக்காது. அவர்கள் அணிந்து வரும் பர்தாவை நான் "இது என்ன? அங்கி போட்டுக் கொண்டு வருகிறார்கள்?" என்று கேலி பண்ணுவேன். எனக்கு திருமணம் ஆகி 3 மாதம் கழித்து அவருடைய முதல் தங்கை வீட்டிற்கு வந்து இருந்தார்கள். அவர்கள் பர்தா அணிந்து வந்தவுடன் எனக்கு அதிர்ச்சியாகி விட்டது.

நான் எனது அக்காவிடம் போய் கூறினேன். அவருடைய முதல் தங்கை முஸ்லிமாக இருக்கிறாள் என்று கூறினேன். அதற்கு எனது அக்கா, அவள் ஒருத்தி தானே அப்படியிருக்கிறாள் - நீ எதையும் கண்டு கொள்ளாதே! என்றும் அவளிடம் பேசாதே! அவளை வீட்டிற்குள் விடாதே! என்றும் கூறினாள். நான் கூட்டுக் குடும்பமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் என்னால் அவளை வெறுக்க முடியவில்லை.

பிறகு அவருடைய முதல் தங்கை என்னையும் இஸ்லாத்திற்கு வரச் சொன்னாள். ஆனால் இஸ்லாத்தின் மீது எனக்கு தப்பான கண்ணோட்டமும், இஸ்லாம்னாலே எனக்கு பிடிக்காது. எனவே அவள் அழைத்ததற்கு நான் வரமாட்டேன் என்று கூறினேன். என்னுடைய கணவரின் தங்கை மீதி 4 பேரும் இஸ்லாத்திற்கு வந்து விட்டார்கள்.

அப்போது நான் அவர்களிடம் சென்று நீங்கள் அனைவரும் எங்களை அநாதையாக விட்டு விட்டு இஸ்லாத்திற்குச் சென்று விட்டீர்களே? ஏன்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இஸ்லாம்தான் உண்மையான மார்க்கம் என்று கூறினார்கள்.

பைபிளில் ஒரு தூதரைப் பற்றிக் கூறும்போது அவருடைய வயது 60 ஆகவும் இன்னொரு இடத்தில் 40 ஆகவும் வரும். இவ்வாறு முரண்பாடான சில விஷயங்களை நான் பார்த்துள்ளேன். ஆனால் குர்ஆன் எந்த வித முரண்பாடும் இல்லாமல் இருந்தது. அப்போது தான் எனக்கு இஸ்லாத்தின் மேல் ஒரு நல்ல அபிப்பிராயம் வந்தது.

எனது கணவரிடம் இஸ்லாத்தைப் பற்றி கூறினேன். அவரும் இஸ்லாத்தைப் பற்றி புரிந்து கொண்டார். தொழுவது, வீட்டை விட்டு வெளியேறும்போது, பர்தா போட்டுக் கொண்டு வெளியே போவது, யாராவது வீட்டிற்கு வந்தால் ஸலாம் கூறுவது, குர்ஆன் ஒதுவது, இதுபோன்ற நிறைய விஷயங்கள் இஸ்லாத்தில் பிடித்து இருந்தது. அல்லாஹ் ஒருவன்தான் இறைவன் என்று தெரிந்தது.

இஸ்லாம் ஓர் உண்மையான மார்க்கம்! அது முழுமையான மார்க்கம் என்று எனக்குத் தெரிந்தது! முஸ்லிம்கள் நல்ல பாசமாக நடந்து கொள்கிறார்கள். பைபிளில் ஏசு எனது கர்த்தரை வணங்குங்கள் என்று கூறுகிறார். ஏசு கடவுளாக இருந்திருந்தால் என்னை வணங்குங்கள் என்றுதானே கூறியிருக்க வேண்டும்? ஏன் எனது கர்த்தரை வணங்குங்கள் என்று கூறுகிறார்? என்று குழம்பிப் போய் இருந்தேன். குர்ஆனைப் படித்துப் பார்த்த பிறகுதான் தெரிந்தது அந்த கர்த்தரே அல்லாஹ் என்று!

பிறகு கலிமா சொல்லி இஸ்லாமை ஏற்றுக்கொண்டேன். இன்னும் இஸ்லாத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன் நீங்களும் இஸ்லாத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று துஆ செய்கிறேன். அல்ஹம்துலில்லாஹ்.

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்''. (திருக்குர்ஆன் 2:208)

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். மேலும், முஸ்லிம்களாகவே அன்றி நீங்கள் மரிக்காதீர்கள்.'' (திருக்குர்ஆன் 3:102)

முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்!'' (திருக்குர்ஆன் 3:200)]

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்