ம‌ஹிந்த‌வை விர‌ட்ட‌ ர‌ணில் ஞான‌சார‌வுட‌ன் பேசினாராம்.

ஞானசாரருடன் பேச்சு நடத்திய, ரணில் விக்கிரமசிங்க - விடுதலைக்காக தலதா மாளிகை முன் சத்தியாகிரகம்
ஆட்சியை கைப்பற்றுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஞானசார தேரருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக பொது பலசேனா அமைப்பின் பேச்சாளர் டிலாந்த விதாககே தெரிவித்தார்.

அந்த அமைப்பின் தலைமையகத்தில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இந்த நிலையில், தற்போதைய  அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலரும் குறித்த விடயம் தொடர்பில் தேரருடன் கலந்துரையாடியிருந்ததாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், ஞானசார தேரர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் ஹோமாகம நீதவான் நீதிமன்ற நீதிபதிக்கு கடிதமொன்றை எழுதியிருந்ததாக குறிப்பிட்ட அவர் அந்த கடிதத்தினை ஊடகங்களுக்கு வாசித்தும் காட்டியுள்ளார்.

தான் சிங்கள மக்களுக்காக செயற்படுவதாகவும், சிங்கள மக்களின் உரிமைகளுக்காக முன்னின்று செயற்படுவதாகவும் அதன் காரணமாக தன்னை தீவிரவாதி என தெரிவிப்பதாக ஞானசார தேரர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக டிலாந்த விதாககே சுட்டிக்காட்டினார்.

அத்துடன், தன்னையொரு மதவாதியாகவும், தீவிரவாதியாகவும், சித்தரிப்பதனால் எந்தவொரு பயனுமில்லை என தேரர் அந்த கடிதத்தில் கூறியுள்ளதாக அவர் இதன் போது குறிப்பிட்டார்.

இதேவேளை, ஞானசார தேரர் குறித்து நேற்றும், நேற்று முன்தினமும் நாடாளுமன்றில் பிரதமர் ஆற்றிய உரையை தாம் வன்மையாக கண்டிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் தனது உரையில் ஞானசார தேரரை புத்தராஜித மற்றும் சோமாராம ஆகியோருடன் ஒன்றிணைத்து பேசியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனினும்,  புத்தராஜித மற்றும் சோமாராம ஆகியோர் உருவாவதற்கு அப்போதைய அரசாங்கமே காரணம் என அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், நல்ல விடயங்களுக்காக செயற்படும் போது தம்மை இனவாதி, மதவாதி, தீவிரவாதி என சித்தரிப்பதை தாம் உள்ளிட்டவர்கள் வன்மையாக கண்டிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி நாளை மாலை 4 மணிக்கு கண்டி தலதா மாளிகைக்கு முன்னதாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக டிலாந்த விதாககே  மேலும் தெரிவித்தார்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்