ரணிலும் பசிலும் இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாக செய்தி ??

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இரகசியமாக சந்திக்கவில்லை என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

ரணிலும் பசிலும் இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாகவும் சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவடையச் செய்து புதிய கட்சி அமைப்பது குறித்து இணக்கம் காணப்பட்டுள்ளது எனவும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இந்த விடயம் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச பதிலளித்திருந்தார். அவர் மேலும் கூறுகையில்,

இரகசியமான முறையில் ரணிலை சந்தித்ததாக ஊடகங்களில் வெளியான தகவல்களில் உண்மையில்லை.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதியின் பின்னர் நான் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவில்லை என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை முன்னாள்அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மகளது திருமண வைபவத்தில் கண்டேன்.

அமைச்சர் ராஜித சேனாரட்வை சில தடவைகள் சந்தித்தேன் மற்றும் சிறையில் இருக்கும் போது நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச என்னை வந்து பார்வையிட்டார்.

இவர்களைத் தவிர ஆளும் கட்சியின் எவரையும் நான் சந்திக்கவில்லை. எவ்வாறெனினும் என்னைப் பற்றி பரப்பும் செய்திகளை சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலரே பரப்புகின்றனர்.

இவர்கள் வாரம் தோறும் அமைச்சரவையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பவர்களாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்