கொலேஜ் ஒப் ஹெல்த் சயன்ஸ் மருத்துவக் கல்லூரியின் முதலாவது வருட பட்டமளிப்பு விழா


கொலேஜ் ஒப் ஹெல்த் சயன்ஸ் மருத்துவக் கல்லூரியின் முதலாவது வருட பட்டமளிப்பு விழா கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், 02 சனிக்கிழமை மாலை,  கல்லூரியின் பணிப்பாளர் டாக்டர். எம்.எச்.எம்.முனாஸிக் தலைமையில் இடம்பெற்றது. இக் கல்லூரியின் உதவிப் பதிவாளர் ஆயுள்வேத டாக்டர்.ஏ.எம்.றிமாஸா இப்பட்டமளிப்பு விழாவினை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  தேசிய ஆயுர்வேத வைத்தியசாலையில்; விசேட தோல் வைத்திய நிபுணர் டாக்டர்.எம்.ஏ.ஜலீல், கௌரவ அதிதிகளாக கந்தளாய் பிரதேசசெயலக காரியாலயத்தில் கணக்காளர் எஸ்.எச்.சபீக், பொறியியலாளர் சுபியான்.ஏ.வகாப், அல் - அமான் முஸ்லிம் மஹாவித்தியாலயத்தின் அதிபர் எம்.எச்.எம்.காமில், பிரதி அதிபர் ஏ.ஏ.எம்.றிஸ்வி, கொழும்பு திறந்த பல்கலைக் கழகத்தில் சட்டத்தரணி மாணவனான டாக்டர்.எம்.ஏ.பயாஸ், ஜயவர்த்தன பல்கலைக்கழக தகவல் தொழில்நுட்ப மாணவன் ஜே.பெரோஸ் கான் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
  முதலாவது வருட பட்டமளிப்பு விழா சிறப்பு நிகழ்ச்சியில் 40 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். விருது பெற்ற மாணவர்கள் சித்த, ஆயுள்வேத மருத்துவ கற்கைநெறியிலும், ஹோமியோபதி மருத்துவ கற்கை நெறியிலும், மருத்துவ தாதி, மருந்தாளர், ஆய்வுகூட பரிசோதனை, உளவியல், சிறுவர் உளவியல் போன்ற கற்கை நெறிகளில் சான்றிதழ், டிப்ளோமா கற்கைநெறிகளை பூர்த்தி செய்தவர்கள்.

  இலங்கையில் சகல மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக இவ்விழா நிகழ்ச்சிக்கு மாணவர்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பணிப்பாளரின் தாய், ஜுவைரியா பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்படுவதையும், பணிப்பாளர் டாக்டர். எம்.எச்.எம்.முனாஸிக், அகில இலங்கை சமாதான நீதவானும், இக்கல்லூரியின் பதிவாளர் டாக்டர். யூ.எல்.ஹஸ்மியா முனாஸிக், பிரதம அதிதி டாக்டர்.எம்.ஏ.ஜலீல் உரை நிகழ்த்துவதையும் படத்தில் காணலாம். இக்கல்லூரியில் இனைபவர்கள் 0117224221 ஃ 0775864356 என்ற இலக்கங்களுடன் தொடர்புகொள்ளலாம்.
                                படங்கள்
                          ஐ.ஏ.காதிர் கான்                          
(மினுவாங்கொடை நிருபர்)

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்