அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், பேராளர் மாநாடு 

குருநாகலில்
(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேராளர் மாநாடு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (17) காலை 10.00 மணிக்கு குருநாகல் ஹோட்டல் தியதாராவில் இடம்பெறவுள்ளது.

கட்சியின் தவிசாளரும், பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையில் இடம்பெறவுள்ள இம்மாநாட்டில் பிரதம விருந்தினராக கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் பங்கேற்கவுள்ளார்.

கட்சியின் யாப்புத் திருத்தம் மற்றும் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்த முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டு இம்மாநாட்டில் நிறைவேற்றப்படவுள்ளன.

அத்துடன் தற்போதைய அரசியல் சூழ்நிலையை கட்சி எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் விரிவாக ஆராயப்படவுள்ளது.

கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் கட்சி தொடர்பிலான முக்கிய உரையொன்றை இம்மாநாட்டில் ஆற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் நாடளாவியரீதியிலான கட்சியின் பேராளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்