கடந்த ஆட்சியில் பொலிஸ் நிலையத்திலும் நீதிமன்றத்திலும் தமிழர்,முஸ்லிம்களென்றால் ஒரு வித்தியசமான நீதி, சட்டம் ஒழுங்கு இருந்தது.


ஒர் அரசியல் கட்சி பௌத்த குரு நேற்று கோமகமவில் நீதிமன்றத்தினையும் அங்கு அவா் கடந்த மகிந்த ஆட்சியில் காட்டிய அட்டகாசத்தையும் இந்த ஆட்சியிலும் காட்டலாம் என நினைத்து செயல்பட்டாா் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மட்டக்குழி ஹிந்துக் கல்லுாாியில் சகல இன மாணவா்களையும் பிரதிபலிக்கும் முகமாக இடம் பெற்ற தைப்பொங்கள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்க்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்
குறித்த தேரருக்கு சட்டம் ஒழுங்கு நீதி நியாயம் இல்லை. அவா் ஒரு பொலிஸ் மா அதிபா் போன்றே செயல்பட்டதை நாம் அவதானித்தோம். ஆகவே இந்த ஆட்சியில் எல்லோருக்கும் நீதி நியாயம் சமமாக இருத்தல் வேண்டும்.. இந்த நீதியான நல்லாட்சிக்குத்தான் நானும் கடந்த 10 வருட காலமாக இந்த நல்லாட்சிக்கு பாடுபட்டு ஜனவரி 8ஆம் திகதி மைத்திரிபால சிறிசேனா ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நல்லாட்சியை கொண்டுவந்தோம்.
கடந்த ஆட்சியில் பொலிஸ் நிலையத்திலும் நீதிமன்றத்திலும் தமிழர்,முஸ்லிம்களென்றால் ஒரு வித்தியசமான நீதி, சட்டம் ஒழுங்கு இருந்தது. அதற்கு அவா்களுக்கு அந்த ஆட்சியில் இருந்த தலைமைத்துவங்களினால் அவ்வாறு செயல்பட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. பொலிசாா், நீதிபதிகள் தமது சட்டத்தை சரவரச் செய்யமுடியாமல் இருந்தது.
கடந்த ஆட்சியில் சரத்பொன்சேகா வும் ஒரு இரானுவ தளபதி அவரும் சிரையில் இருந்தாா் அப்போது இந்த பௌத்த குரு அவரை சிறைக்கு போய் பாா்த்தாரா? அல்லது நிதிமன்றத்திற்கு சென்றாரா ? ஊடகவியலாளா் எந்நொலிகொட காணமல் போவதற்கு காரணமாக இருந்த ரானுவ வீரா்களுக்கே அவா் ஆதரவாக கோமாகம நீதிமன்றத்தில் சென்றதும் மட்டுமல்லாமல் அங்கு அவரது பழைய பாணியை செய்துள்ளாா் இவா் 14 நாட்களாவது சிறைசென்று வருவதையிட்டு நாம் சந்தோசப்படுகின்றோம் இது தான் எமது வெற்றி.
கடந்த காலத்தில் பள்ளிவாசல்கள் ஹிந்து கோவில்கள் கிரிஸ்த்துவ மத ஸ்தானங்கள் உடைக்கப்பட்டன. வெள்ளை வான் கலாச்சாரம் இருந்தது. ஊடகவியலாளா் லசந்த விக்கிரமதுங்க பாராளுமன்ற உறுப்பிணா் ரவி ராஜ் ஆகியோா் கொலை செய்யப்பட்டாா்கள்.
பாடசாலை மட்டத்திலிருந்தே இன ஜக்கியத்தை வளா்ப்பதற்குத்தான் இந்தப் பாடாசலையில் தைப்பொங்கல் நிகழ்வில் சகல இன மானவா்களும் கலந்துகொண்டுள்ளனா். இந்த தைப்பொங்கல் பற்றி தமிழ் மக்களின் கலை, கலாச்சார விழுமியத்தை அறிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பளிக்கப்படுகின்றது. இதே போன்று நோன்பு, வெசாக், நத்தாா் நிகழ்வுகளில் சகல இன மாணவா்களும் இனைந்து ஏனைய சமுகங்களது மத கலை கலாச்சார விழுமியங்கள் அறிவுறுத்தி ஒரு ஜக்கிய தேசிய இலங்கையா் என்ற உணா்வுகளை மாணவப்பருவத்திலேயே
ஏற்படுத்தப்படும் என அமைச்சா் மனோகணேசன் மேலும் தெரிவித்தார்.
மட்டக்குழி ஹிந்துக் கல்லுாாி அதிபா் கருநாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக அமைச்சா் மனோ கனேசன் கலந்துகொண்டதுடன் மட்டக்குழி பிரதேசமுஸ்லிம் கிரிஸ்த்துவ,பொளத்த பாடாசலை அதிபா்கள் மாணவா்கள் வலய கல்விப்பணிப்பாளா்கள் மத தலைவா்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.(ச)

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்